800 பரிசுத்த திருக்குடும்ப ஆலயம், கார்மல்நகர்

              

பரிசுத்த திருக்குடும்ப ஆலயம்

இடம்: கார்மல்நகர், இராமன்புதூர், நாகர்கோவில்

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: கோட்டார்

மறைவட்டம்: கோட்டார்

நிலை: பங்குத்தளம்

பங்குத்தந்தை: அருட்பணி. சகாய பிரபு

குடும்பங்கள்: 1800

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு காலை 06:15 மணி மற்றும் மாலை 05:30 மணி திருப்பலி, நற்கருணை ஆசீர்

வாரநாட்களில் திருப்பலி காலை 06:00 மணி

திங்கள் காலை 06:00 மணி திருப்பலி, மாலை 05:30 மணி ஜெபமாலை, 06:00 மணி நற்செய்தி கொண்டாட்டம்

செவ்வாய் காலை 06:00 மணி திருப்பலி. மாலை 06:30 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி 

புதன் காலை 06:00 மணி சகாய மாதா நவநாள் திருப்பலி. மாலை 06:00 மணி ஜெபமாலை, சகாய மாதா நவநாள் திருப்பலி

வியாழன் காலை 06:00 மணி திருப்பலி. மாலை 05:45 மணி ஜெபமாலை, குழந்தை இயேசு நவநாள் திருப்பலி. இரவு 07:00 மணி முதல் 08:00 மணி வரை மௌன நற்கருணை ஆராதனை

வெள்ளி காலை 06:00 மணி திருப்பலி. மாலை 05:30 மணி இயேசுவின் திரு இருதய ஜெபமாலை, நவநாள்

சனி காலை 06:00 மணி குழந்தைகள் திருப்பலி

முதல் செவ்வாய் மாலை 06:00 மணி நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர், தொடர்ந்து குணமளிக்கும் திருஎண்ணெய் பூசுதல்

இரண்டாவது செவ்வாய் மாலை 05:45 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி, புனித அந்தோனியார் திருப்பண்ட ஆசீர்வாதம்

மூன்றாவது செவ்வாய் மாலை 05:45 மணி ஜெபமாலை பவனி, புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி, சிறப்பு குணமளிக்கும் நற்கருணை ஆசீர்வாதம்

நான்காவது செவ்வாய் மாலை 05:45 மணி ஜெபமாலை புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி, அசனவிருந்து (மாதத்தின் கடைசி செவ்வாய்)

முதல் வெள்ளி மாலை 06:00 மணி ஜெபமாலை, குணமளிக்கும் நற்கருணை ஆசீர்

திருவிழா: டிசம்பர் மாதம் இறுதியில் ஆரம்பித்து பத்து நாட்கள் நடைபெறும்.

மண்ணின் இறையழைத்தல்கள்:

அருட்பணியாளர்கள்:

1. அருட்பணி. வின்சென்ட் B. வில்சன், கோட்டாறு மறைமாவட்டம்

2. அருட்பணி.‌ ஜோ A. பிரான்சிஸ், நியூயார்க் உயர் மறைமாவட்டம்

3. அருட்பணி. J. பிரான்சிஸ் சேவியர் நெல்சன், கோட்டாறு மறைமாவட்டம்

4. அருட்பணி. B. சில்வெஸ்டர் சேவியர், ஆசீர்வாதப்பர் சபை

5. அருட்பணி. A. ஜான் பெர்க்மான்ஸ், கோட்டாறு மறைமாவட்டம்

6. அருட்பணி. S. அலாய்சியஸ் பாபு, OCD

7. அருட்பணி. லார்ட் M. வின்னர், CMF

8. அருட்பணி. சதீஷ், USA

9. அருட்பணி. A. அனில் பெனட் குரூஸ், பக்சர் மறைமாவட்டம்

10. அருட்பணி. J. ஜோ டெரி, CMF

11. அருட்பணி. J. ராபின்சன், குழித்துறை மறைமாவட்டம்

அருட்சகோதரர்கள்:

12. Br. C. ஜாக்சன், குழித்துறை மறைமாவட்டம்

13. Br. J. இக்னு காட்வின், கோட்டாறு மறைமாவட்டம்

14. Br. T. A. செல்வகுமார்

அருட்சகோதரிகள்:

1. Sr. U. சிறிய புஷ்பம், FIHM

2. Sr. I. ஜாய்ஸ், FIHM

3. Sr. S. பிஜுனியா மேரி, FIHM

4. Sr. A. ஒடேற்றா மேரி, FIHM

5. Sr. J. சாரா ஜாஸ்மின், FIHM

6. Sr. S. ஆன்சி புரூனோ, St. Anne's convert

7. Sr. P. ஜோமி, CHF

8. Sr. M. மரிய பிரகாசி சுகந்தி, CSST

9. Sr. J. ஆன்றோ லூசில்லா, Missionaries of Christ Jesus

10. Sr. M. எட்வின் ஜோ, ICM

11. Sr. M. டெல்பின், PDDM

12. Sr. T. அனாகுலேட் மேரி, SAT

13. Sr. T. கிளீட்டஸ், SAT

14. Sr. M. லிற்றில் பிளவர், PDDM

15. Sr. M. கிரேஸ்லட், PDDM

16. Sr. P. மேரி செலின், PDDM

17. Sr. M. ஜெயசீலி, PDDM

18. Sr. A. சைரின் மேரி, FIHM

19. Sr. T. குயின் மேரி, FIHM

20. Sr. D. லில்லி ஜெயறீற்றா, ICM

21. Sr. A. மேரி சார்லெட், DMI

22. Sr. M. லூமினா ஹில்டா பாய், SSHJ

23. Sr. G. வசந்தி மேரி பிருந்தா, ICM

24. Sr. F. ஹாய்சிந்த் மேரி, FIHM

25. Sr. A. எல்மா மார்கிரட் மேரி, FIHM

26. Sr. G. மரிய ஜோஸ்பின், FIHM

27. Sr. M. டெல்பின் வின்சென்ட் எல்சி, SAT

28. Sr. S. ஏஞ்சல் மேரி இயேசு தங்கம், SAT

வரலாறு:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில், கார்மல்நகர் என்னும் ஊரில் அமைந்துள்ள பரிசுத்த திருக்குடும்ப ஆலய வரலாறு….

1930 மே மாதம் 26 ஆம் தேதி கோட்டார் மறைமாவட்டம் உதயமானது. அப்போது 1911 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பஞ்சவங்காடு -குருசடி புனித அந்தோனியார் ஆலயமானது, கோட்டாறு மறைமாவட்டத்தில் மிக முக்கியப் பங்காக  திகழ்ந்தது‌. குருசடி பங்கானது வடக்கன்குளம் மற்றும் கோட்டாறு பங்குகளின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது. பின்னர் 1940 ஆம் ஆண்டு தனிப் பங்கானது.‌ அப்போது குருசடி பங்கின் தென்பாகத்தில் 5 ஊர்களும், வடபாகத்தில் 7ஊர்களுமாக 12 கிராமங்களில் கிறிஸ்தவர்கள் வசித்து வந்தனர். தென்பாக ஊர்களில் ஜெபக்கூடங்கள் இருந்தன. வடபாகத்தில் இருந்த இராமன்புதூர் (கார்மல்நகர்) உட்பட 7ஊர்களில் ஜெபக்கூடங்கள் இல்லை. எனவே ஞாயிறு திருப்பலி, திருமணம், திருமுழுக்கு ஆகியவற்றிற்கு குருசடி புனித அந்தோனியார் ஆலயத்திற்கே, இராமன்புதூர் (கார்மல்நகர்) மக்கள் சென்று வந்தனர்.

ஆகவே 7 ஊர்களுக்கும் பொதுவாக ஆலயம் அமைக்க, அன்றைய கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு ஆஞ்ஞிசாமி அவர்களின் ஆசியுடன், குருசடி பங்குத்தந்தை அருட்பணி. ரிச்சர்ட் ரொசாரியோ அவர்கள், பொதுமக்களிடம் தேவையான இடத்தை தேர்வு செய்யக் கூறினார். இராமன்புதூர் சிறுமலர் தொடக்கப்பள்ளியில் இதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

1944 ஆம் ஆண்டு கார்மல் பள்ளிக்கூடத்திற்கு வடக்கே, ஆலயம் அமைக்க இடம் (தற்போது உள்ள ஆலயம் அமைந்துள்ள இடம்) தேர்வு செய்யப்பட்டு, 50 சென்ட் நிலம் சமன்செய்யப்பட்டு, ஆறு கல்தூண்களால் ஜெபக்கூடம் அமைக்கப்பட்டு, ஜெபமாலை, பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து ஆலயம் அமைக்க திருவிதாங்கூர் அரசிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் சில தடங்கல்கள் காரணமாக அரசின் உத்தரவு கிடைக்கப்பெறவில்லை.

1947 ஆம் ஆண்டு அருட்பணி. அம்புரோஸ் பெர்னாண்டோ அடிகளார் குருசடி பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற பின்னர், மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது திருவிதாங்கூர் கொச்சி அரசின் வருவாய்த்துறை அமைச்சர் இந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, ஆலயம் கட்டுவதற்கான அனுமதி உத்தரவை 22.12.1948 அன்று கொடுத்தார். 

இதனைத் தொடர்ந்து திருக்குடும்ப ஆலயம் ஒரே ஆண்டில் 50 அடிநீளம் 20 அடி அகலத்துடன் கட்டி முடிக்கப்பட்டு, 26.11.1949 அன்று அருட்பணி. அம்புரோஸ் பெர்னாண்டோ அவர்களால் முதல் திருப்பலி நிறைவேற்றப் பட்டது.

1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பாதுகாவல் திருவிழா நடைபெற்றது.

ஆலயத்திற்கு பலர் தங்களது நிலங்களை தானமாகவும், சிலர் மிகக்குறைந்த விலைக்கும் கொடுக்க, 3 ஏக்கர் நிலம் கிடைத்தது. 1956 ஆம் ஆண்டில் ஆலய வளாக பத்திரப்பதிவுகள் பூர்த்தியடைந்தன. 

1956 ஆம் ஆண்டு ஆலய வளாகத்தில் நோயாளிகள் தங்குவதற்கு சாவடி (சத்திரம்) அமைக்கப்பட்டது.‌ 

அருட்பணி. டோமினிக், OCD அவர்கள் 1962 ஜூன் முதல் 1968 மே மாதம் வரை இளங்குருமடம் நடத்தப்பட்டு, இராமன்புதூர் பங்கு சிறந்து விளங்க வழிகோலியது. இதுவே இப்பங்கின் வளர்ச்சிக்கும் பெயர் மாற்றம் பெறவும் காரணமாக அமைந்தது.

நாட்கள் செல்லச் செல்ல ஆலயத்தில் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, இடநெருக்கடி ஏற்பட்டதால் 1966 ஆகஸ்ட் 28-ஆம் தேதி ஆலயத்தை புதுப்பித்துக் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.100 வரி விதிக்கப்பட்டது.

புதிய ஆலயத்திற்கு 01.09.1968 அன்று மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.‌ 

1970 ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி கார்மல்நகர் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. கார்மல் அடிகளார் பொறுப்பேற்று வழிநடத்தினார். இதனைத் தொடர்ந்து ஆலய கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப் பட்டன. 

04.11.1972 அன்று மேதகு ஆயர் ஆரோக்கியசாமி அவர்களால் பாலர் பள்ளி திறந்து வைக்கப்பட்டது.

ரோமானிய கட்டிடக்கலையுடன் 180 அடி சுற்றளவு கொண்ட அரைக்கோள வடிவத்துடன் ஆலய டூம் அமைக்கப்பட்டது. இது ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். 

1978 ஆம் ஆண்டு இராமன்புதூர் ஐக்கிய கலா மன்ற இளைஞர்களால், ஊதியம் பெறாமலேயே ஆலய வெளிச்சுவர் பூசப்பட்டது. பணிகள் நிறைவு பெற்று 30.12.1978 அன்று மேதகு ஆயர் ஆரோக்கிய சாமி அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.

17.10.1978 அன்று பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

1987 ஆம் ஆண்டு மேல்மாடியுடன் கூடிய பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது. திருவிழா திருப்பலி நடத்த வசதியாக, ஆலய முகப்பு மண்டபம் கட்டப்பட்டு 12.12.1996 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

பொன்விழா நினைவு சமூக நலக்கூடத்திற்கு (ஜூபிலி ஹால்) 14.06.1998 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 12.12.1998 அன்று திறந்து வைக்கப்பட்டது.

ஆலய வளாகத்தில் டாக்டர் டேவிஸ் நினைவு இலவச மருத்துவமனை கட்டப்பட்டு, 31.12.2000 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு ஆலயத்தின் முன்புறம் இயேசுவின் சிலுவைப் பாடுகளின் 14 நிலைகளும் அமைக்கப்பட்டது.

23.12.2011 அன்று கார்மல் நர்சரி பள்ளிக்கூட கட்டிடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

2012/13 கல்வியாண்டில் ஹோலி ஃபேமிலி ப்ளேஸ் அன்ட் ஃபன் பள்ளிக்கூடம் தொடங்கப் பட்டது.

2013/14 ஆண்டில் ஹோலி ஃபேமிலி நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.

சப்பரம் (தேர்) நிறுத்தி வைப்பதற்காக 16.12.2012 அன்று புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

2019 ஆம் ஆண்டு இரண்டு அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டப்பட்டன.

ஆலயம் மற்றும் ஆலய பீடம் அழகுற புதுப்பிக்கப்பட்டு, 22.12.2021 அன்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு நசரேன் சூசை அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

இவ்வாறு வளர்ந்து வந்த இராமன்புதூர், கார்மல் நகர் என பெயர் பெற்றதன் காரணத்தையும் தெரிந்து கொள்வோமா...!!!

கார்மல்நகர் பெயர்க் காரணம்:

அன்று மக்கள் வசிக்காத அடர்ந்த காட்டுப்பகுதியாக விளங்கிய பஞ்சவன்காடு (குருசடி), இன்று அழகிய ஊராக விளங்குகிறது. ஆறு கல்தூண்கள் கொண்டு தொடங்கப்பட்ட இராமன்புதூர் ஆலயம் இன்று பிரமாண்டமான ஆலயமாக விளங்கிறது.

இப்பங்கு முதலில் கீழராமன்புதூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. அருட்பணி. டோமினிக், OCD அவர்களால் இங்கு கார்மல் சபை தொடங்கப்பட்டது. இவர் தமது சபையில் அதிகமாக தமிழ் குருக்களை உருவாக்க மாணவர்களைத் திரட்டினார். அம்மாணவர்கள் கல்வி கற்க கார்மல் மேல்நிலைப் பள்ளியை தேர்வு செய்தார். மேலும் குரு மாணவர்கள் ஆலய மேடையில் (பங்குத்தந்தை இல்லம்) தங்குவதற்கு அனுமதிக்கப் பட்டார்கள். இதற்கு குருசடி பங்குத்தந்தை அருட்பணி. அந்தோணி முத்து அவர்கள் அனுமதி வழங்கினார். 

அக்காலத்தில் மக்கள் வழிபாடுகளில் பங்கேற்க குருசடி புனித அந்தோனியார் பங்கு ஆலயத்திற்கே சென்று வந்தனர். இவ்வேளையில் அருட்பணி. டோமினிக், OCD அவர்கள் குருமடத்தில் உள்ள மாணவர்களுக்காக தினமும் திருப்பலி,  மாதா மோட்சத்திற்கு எழுந்தருளிய திருவிழா, கிறிஸ்துமஸ் பெருவிழா, உயிர்ப்புப் பெருவிழா என நடத்தினார். மேலும் கார்மல் அன்னையின் திருவிழா, முதல் வெள்ளிக்கிழமை திவ்யநற்கருணை ஆராதனை, மார்ச் மாதத்தில் சூசையப்பர் வணக்க மாதம், மே மாதத்தில் மாதா வணக்க மாதம், ஜூன் மாதத்தில் இயேசுவின் திருஇருதய வணக்க மாதம் போன்ற பக்தி முயற்சிகளையும் நடத்திட, இவை இராமன்புதூர் மக்கள் ஆன்மீகத்தில் திளைக்க ஏதுவாக அமைந்தது. 

மக்கள் கல்வி, மருத்துவம், பொருளாதாரத் தேவைக்காகவும் இங்கு குடிபெயர்ந்து வரத் தொடங்கினர். ஆலயத்தின் ஒருபுறம் கார்மல் பள்ளிக்கூடம் இருப்பதாலும், அருட்பணி. டோமினிக் அவர்கள் கார்மல் சபை துறவியாக இருந்ததாலும், இவ்வூருக்கு 'கார்மல்நகர்' என்னும் பெயரைச் சூட்டினார். மேலும் 1970 ஆம் ஆண்டு தனிப் பங்காக உயர்ந்து முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. கார்மல் அடிகளார் பொறுப்பேற்ற நிலையில் கார்மல்நகர் என்னும் பெயர் நிலையானதாயிற்று‌.

பங்கில் உள்ள குருசடிகள்:

1. குழந்தை இயேசு குருசடி, ஆலய வளாகம்

2. புனித மிக்கேல் அதிதூதர் குருசடி

3. புனித அந்தோனியார் குருசடி

4. புனித லூர்து மாதா குருசடி, கலுங்கு சந்திப்பு

5. புனித சந்தியாகப்பர் குருசடி, செயின்ட் மேரிஸ் தெரு

6. புனித சூசையப்பர் குருசடி, லிட்டில் ப்ளவர்  தெரு

7. புனித அந்தோனியார் குருசடி, மீன் சந்தை

பங்கில் உள்ள நிறுவனங்கள், மருத்துவமனை, இல்லங்கள்:

1. பங்குத்தந்தை இல்லம்

2. டாக்டர் நேவிஸ் நினைவு மருத்துவமனை

3. பங்கு நிர்வாக அலுவலகம்

4. பங்கு அலுவலகம்

5. Holy Family Nursery School

6. அங்கன்வாடி (2)

7. ஜூபிலி ஹால் சமூக நலக்கூடம்

8. ஜீஸஸ் ஹால் சமூக நலக்கூடம்

கல்லறைத் தோட்டங்கள்:

1. மீன்சந்தை கல்லறைத் தோட்டம்

2. பொன்னப்ப நாடார் காலனி கல்லறைத் தோட்டம்

பங்கில் உள்ள சபைகள் இயக்கங்கள்:

1. மறைக்கல்வி மன்றம்

2. கார்மல் பொதுநிலையினர் சபை 

3. பிரான்சிஸ்கன் பொதுநிலையினர் சபை

4. இயேசுவின் திருஇருதய சபை

5. மரியாயின் சேனை (ஆண்கள் & பெண்கள்)

6. பாலர் சபை

7. சிறுவழி இயக்கம்

8. பெண்கள் பணிக்குழு

9. பீடப்பூக்கள்

10. பாடகற்குழு

11. அன்னை தெரசா சமூக நல இயக்கம்

12. இளைஞர் இயக்கம் (ஆண்கள் & பெண்கள்)

13. நற்செய்தி பணிக்குழு

14. கத்தோலிக்க சங்கம்

15. இன்றைய உலகில் இறைபணி இயக்கம்

16. புனித வின்சென்ட் தே பவுல் சபை

17. திருத்தூதுக் கழகங்களின் ஒருங்கிணைப்பு குழு

18. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

19. திருவழிபாட்டுக் குழு

20. கிறிஸ்தவ வாழ்வு சமூகம்

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

(1947 முதல் 1968 வரை குருசடி பங்கு)

1. அருட்பணி. ரிச்சர்ட் ரொசாரியோ

2. அருட்பணி.‌ அம்புரோஸ் பெர்னாண்டோ

3. அருட்பணி.‌ D. C. அந்தோணி

4. அருட்பணி. R. அந்தோணி முத்து

5. அருட்பணி.‌ டோமினிக்

1970 ஆம் ஆண்டு  தனிப் பங்கானது முதல்:

1. அருட்பணி. I. கார்மல் (1970-1977)

2. அருட்பணி.‌ R. தாமஸ் பெர்னாண்டோ (1977-1985)

3. அருட்பணி.‌ I. குழந்தை சாமி (1985-1987)

4. அருட்பணி.‌ அத்தனாசியஸ் E. ரத்தினசாமி (1987-1989)

5. அருட்பணி. M. பீட்டர் (1989-1992)

6. அருட்பணி.‌ S. இயேசு ரத்தினம் (1992-1997)

7. அருட்பணி.‌ P. அமல்ராஜ் நேவிஸ் (1997-2001)

8. அருட்பணி.‌ P. மரியசூசை (2001-2003)

9. அருட்பணி.‌ சதீஷ் குமார் ஜாய் (2003-2004)

10. அருட்பணி.‌ P. வின்சென்ட் (2004)

11. அருட்பணி.‌ A. ஜேசு மரியான் (2004-2005)

12. அருட்பணி. J. பிரான்சிஸ் சேவியர் (2005-2010)

13. அருட்பணி. G. மரிய சூசை வின்சென்ட் (2010-2013)

14. அருட்பணி. M. ஜார்ஜ் பொன்னையா (2013-2014)

15. அருட்பணி.‌ A. மரிய வின்சென்ட் (2014-2015)

16. அருட்பணி.‌ J. R. பேட்ரிக் சேவியர் (2015-2019)

17. அருட்பணி. சகாய பிரபு (2020 முதல்...)

இணை பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி.‌ எல்பின்ஸ்டன் ஜோசப்

2. அருட்பணி.‌ ஜாண் பிரகாஷ்

3. அருட்பணி. ஆல்வின் மதன் ராஜ்

4. அருட்பணி. ஆரோக்கிய ஷெல்லி ரோஸ்

5. அருட்பணி. ஞானதாஸ்

6. அருட்பணி. மெர்லின் ரஞ்சித் அம்புரோஸ்

7. அருட்பணி. ஜோசப் ராஜ்

8. அருட்பணி. செல்வம்

9. அருட்பணி. சகாய பெலிக்ஸ்

10. அருட்பணி. ஆரோக்கிய ஜெலாஸ்டின்.

பரிசுத்த திருக்குடும்பத்தின் வல்லமையால் எண்ணற்ற புதுமைகள் நடந்து வருவதாலும், நாகர்கோவில் நகரின் முக்கிய பகுதியில் இருப்பதாலும் ஆலயத்தில் எப்போதும் மக்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. பரிசுத்த திருக்குடும்பத்தின் ஆசீரைப் பெற கார்மல் நகருக்கு வாருங்கள் என்று அன்புடன் அழைக்கின்றோம்...

வழித்தடம்: நாகர்கோவில் -இராஜாக்கமங்கலம் சாலையில் இராமன்புதூர் (கார்மல்நகர்) அமைந்துள்ளது.

Location map: The Holy Family Church

https://maps.google.com/?cid=7978953362195269039&entry=gps

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. சகாய பிரபு மற்றும் ஆலய நிர்வாகிகள்.