புனித சவேரியார் பங்கு புனித லொரேட்டா அன்னை ஆலயம்
இடம்: #மேல்வழி, கள்ளக்குறிச்சி தாலுகா, திம்மலை (PO), 606206
மாவட்டம்: கள்ளக்குறிச்சி
மறைமாவட்டம்: புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: கள்ளக்குறிச்சி
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. புனித ரீத்தம்மாள் ஆலயம், ரீத்தாநகர்
2. புனித பாத்திமா மாதா ஆலயம், ரிஷிவந்தியம்
3. புனித அந்தோனியார் ஆலயம், குன்னியூர்
4. இருதய ஆண்டவர் ஆலயம், இருதயபுரம்
பங்குத்தந்தை: அருட்பணி. J. அருள்பிரகாசம்
குடும்பங்கள்: 170 (கிளைப்பங்குகள் சேர்த்து 575)
அன்பியங்கள்: 3
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 08:00 மணிக்கு
நாள்தோறும் திருப்பலி காலை 06:00 மணிக்கு
முதல் வெள்ளி காலை 06:00 மணிக்கு திருப்பலி, மாலை 06:30 மணிக்கு நற்கருணை ஆசீர்வாதம்
முதல் சனிக்கிழமை மாலையில் 06:30 மணிக்கு திருப்பலி
திருவிழா: மே மாதம் 10-ஆம் தேதி
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. I. அந்தோணிசாமி, Arch diocese of Pondichery
2. அருட்பணி. P. செல்வநாயகம், HGN
3. அருட்பணி. R. A. இரட்சகர், Arch diocese of Pondichery
4. அருட்பணி. M. ஜான்பால், குனெல்லியன் சபை
5. அருட்பணி. L. ஆலிஸ்ராஜா, SDM
6. அருட்பணி. I. ரவி, MMI
7. அருட்பணி. R. சலமோன், OMI
8. அருட்பணி. G. ஜான்பால், MSFS
9. அருட்பணி. V. பிரான்சிஸ் சேவியர், OFM Cap
10. அருட்பணி. A. ஜான் சுந்தர், MMI
11. அருட்சகோதரர். A. சலமோன்
12. அருட்சகோதரி. J. ஜூலி
13. அருட்சகோதரி. M. ஆரோக்கிய மேரி
14. அருட்சகோதரி. A. மேரி பிரேமா பேபி
15. அருட்சகோதரி. பரிசுத்த நித்யா
16. அருட்சகோதரி. S. மீரா
அறிமுகம்:
அப்போதைய விருத்தாசலம் கல்வி மாவட்டத்திலேயே முதன் முதலாக தொடங்கப்பட்ட, முதல் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி (ஆர்.சி தொடக்கப்பள்ளி)
வரலாறு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள, தியாகதுருகத்தின் தெற்குப் பகுதியில் ஓர் உயர்ந்த மலையின் மீது, கற்களால் சுவர் எழுப்பப்பட்ட (16-17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்) கோட்டை ஒன்று உள்ளது. 1756 ஆம் ஆண்டு பிரெஞ்சுப்படையினரின் வசமிருந்த இருந்த இந்தக் கோட்டையை, 1760 ஆம் ஆண்டு ஹைதர் அலி கைப்பற்றினார். பின்னர் 1790 ஆம் ஆண்டு திப்பு சுல்தான் இதனைக் கைப்பற்றி இராணுவத் தளமாக அமைத்தார்.
அருட்பணி. நொரோனா அவர்கள், பிரெஞ்சுப் படையினரின் ஆன்மீகக் குருவாக இருந்து, பிரெஞ்சுப் படைக்கும் -ஹைதர் அலிக்கும் சமாதானத் தூதுவராக விளங்கி, மறைப்பணியாற்றி வந்ததன் காரணமாக எறையூர், மேல்வழி பகுதிகளில் கிறிஸ்தவம் பரவத் தொடங்கியது.
எறையூர் பங்கு:
மதுரை மிஷன், புதுவை மிஷன் வரலாறுகளில் 48 கிறிஸ்தவ கிராமங்களுக்கு எறையூர் தனிப் பங்காக இருந்ததை அறிய முடிகிறது.
1905-1919 ஆண்டுகளில் எறையூரில் பணியாற்றிய அருட்பணி. வெருவா அவர்கள், 05.10.1913 அன்று மேல்வழியில் 48 சென்ட் நிலம் வாங்கி, அதில் பள்ளியாகவும், ஆலயமாகவும் செயல்படும் சிலுவை வடிவிலான ஓட்டுக் கட்டிடத்தைக் கட்டினார்.
பின்னர் இது சேதமடைந்தது.
1965 ஆம் ஆண்டு எறையூரிலிருந்து, மேமாளூர் தனிப் பங்காக உயர்த்தப்பட்ட பின், மேல்வழி, மேமாளூரின் கிளைப் பங்கானதைத் தொடர்ந்து, மேல்வழி மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டது.
1972-74 வரை பணியாற்றிய அருட்பணி. அந்தோணி தும்மா அவர்கள் "காரிதாஸ் இந்தியா" நிறுவனத்தின் உதவியுடன், இதற்கு முன்பிருந்த ஆலயத்தை சமுதாயக் கூடம் மற்றும் ஆலயமாகவும் எழுப்பினார்.
அருட்பணி. பால் தெலமோர் அவர்களால் கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, 21.06.1975 அன்று பேராயர் செல்வநாதர் அவர்களால் திருநிலைப்படுத்தப் பட்டது. மேலும் சவேரியார் கிணறு, தோட்டம், பேண்டு குழு என பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்தார்.
அருட்பணி. K. இருதயம் அவர்கள், அருட்சகோதரர்களை மேல்வழிக்கு அனுப்பி வைத்து, மக்களுக்கு பயிற்சிகள் கொடுத்து வழிகாட்டினர். ஈஸ்டர், கிறிஸ்துமஸ் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டது.
அருட்பணி. S. ஜான் போஸ்கோ பணிக்காலத்தில், 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரீத்தா நகரை மையமாகக் கொண்டு, மேல்வழியை கிளைப்பங்காகக் கொண்டு, 31.08.1987 அன்று ரீத்தாநகர் பங்கு என்று பதிவு செய்யப்பட்டது.
மேல்வழி மக்களின் முயற்சியாலும், அருட்பணி. பால் தெலமோர் அவர்களின் பேராதரவாலும், பங்குத்தளம் மேல்வழிக்கு மாற்றப்பட்டது.
01.09.1988 அன்று மேல்வழி பங்குத்தளமாக உயர்த்தப்பட்டது. அருட்பணி. D. M. J. பெர்னார்ட் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று வழிநடத்தினார்.
அருட்பணி. S. ஆரோக்கிய சாமி அவர்களின் வழிகாட்டலில், 10.05.2014 அன்று பங்கின் வெள்ளிவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப் பட்டது.
புனித லொரேட்டா அன்னை:
அன்னை மாமரி, சூசைப்பரோடும், இயேசுவோடும் வாழ்ந்த இல்லமானது "புனித இல்லம்" என்றும் "மங்கள வார்த்தை இல்லம்" என்றும் அழைக்கப்படுகிறது. பாலஸ்தீன் நாட்டின் நாசரேத் ஊரில் இருந்த, இந்த புனித இல்லம் பிற சமயத்தாரின் தாக்குதலுக்கு உள்ளான போது, குரேஷியாவிலுள்ள டால்மாஷியா -விற்கு 1291 -ஆம் ஆண்டு மே 10 -ம் நாள் இறைதூதர்களால் கொண்டு வரப்பட்டது. பல்வேறு தாக்குதல்களில் இருந்து இந்த இல்லம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே இது நிகழ்ந்தது.
மூன்றாண்டுகளுக்குப் பின்னர், 1292 -ஆம் ஆண்டு அவ்வில்லமானது இத்தாலி நாட்டில் உள்ள லொரேட்டோ என்ற இடத்திற்கு மாற்றப்பட்டு இன்றுவரை அதே இடத்திலேயே இருந்து, உலகெங்கிலும் உள்ள வேண்டி வரும் மக்களின் புகலிடமாகவும், திருத்தலமாகவும் விளங்குகிறது.
12.04.1916 அன்று திருத்தந்தை பதினைந்தாம் ஆசீர்வாதப்பரின் அறிக்கையின்படி, அன்னை வாழ்ந்த இல்லத்தை அற்புதமாக இறைதூதர்களால் இடமாற்றம் செய்யப்பட்டதை, ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி கொண்டாட வேண்டும் என்று திருச்சபை அறிவித்தது. முதலில் இத்தாலி நாட்டில் மட்டும் இவ்விழா கடைபிடிக்கப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்தகைய அற்புத சிறப்பு வாய்ந்த லொரேட்டா அன்னையின் மகிமையை பரப்ப, புதுவை கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு டாக்டர். A. ஆனந்தராயர் அவர்களின் அனுமதி கலந்த ஆசியுடன், அருட்பணி. D. M. J. பெர்னார்டு துரை (அமெரிக்கா), திரு. ரிச்சர்ட் லொரேட்டா (அமெரிக்கா) மற்றும் உள்ளூர், வெளியூர் நன்கொடையாளர்கள் மற்றும் இறைமக்களின் உதவியுடன் மேல்வழி பங்கில் லொரேட்டோ அன்னைக்கு ஆலயம் கட்டப்பட்டு, பேராயர் அனந்தராயர் அவர்களால் 08.05.2010 அன்று அர்ச்சிக்கப்பட்டு, பக்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆலயம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து ஏராளமான புதுமைகள் அன்னையின் பரிந்துரையால் நடந்து வருகிறது. ஆகவே பல பகுதிகளிலும் இருந்தும் இறைமக்கள் வந்து ஜெபித்து ஆசி பெற்றுச் செல்கின்றனர்.
பழைய ஆலயம் இருந்த இடத்தில் தற்போது மாதா கெபி எழுப்பப்பட்டுள்ளது.
பங்கில் உள்ள கல்வி நிறுவனம் மற்றும் துறவற இல்லம்:
*புனித சவேரியார் தொடக்கப்பள்ளி
*St. Thomas Convent
பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புக்கள்:
1. மரியாயின் சேனை
2. புனித வின்சென்ட் தே பவுல் சபை
3. இளையோர் இயக்கம்
4. இளையோர் Band குழு
5. பீடச்சிறார்
6. பாடற்குழு
7. திருவழிபாட்டுக் குழு
8. பெண்கள் சிறுதொழில் குழு
9. மறைக்கல்வி
பங்கில் இறைப் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. D. M. J. பெர்னார்டு (1988-1997)
2. அருட்பணி. S. ஜான் கென்னடி, AJR (1997-2004)
3. அருட்பணி. D. ஆரோக்கியதாஸ் (2004-2012)
4. அருட்பணி. S. ஜோசப் சகாயராஜ் (2012-2013)
5. அருட்பணி. S. ஆரோக்கியசாமி (2013-2019)
6. அருட்பணி. J. அருள் பிரகாசம் (2019 முதல் தற்போது வரை..)
வழித்தடம்: விழுப்புரம் -உளுந்தூர்பேட்டை -கள்ளக்குறிச்சி வழித்தடத்தில், தியாகதுருகம் ஊருக்கு சற்று முன்னர் மேல்வழி ஊர் உள்ளது.
Location map: Our Lady Of Loreto Church, Church Street, Melvizhi, Tamil Nadu 606206
https://maps.app.goo.gl/9K3tHqpF6kZPAkjXA
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. அருள் பிரகாசம் மற்றும் பங்கு உறுப்பினர் திரு. விண்ணரசன் ஆகியோர்.