399 புனித அந்தோணியார் ஆலயம், இலங்காமணிபுரம்


புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : இலங்காமணிபுரம், கொட்டாரம்.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்
மறை வட்டம் : கன்னியாகுமரி

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித யூதா ததேயு ஆலயம் (இறைவனின் இல்லம்), கொட்டாரம்.

பங்குத்தந்தை : அருட்பணி சகாய பிரபு

குடும்பங்கள் : 10
அன்பியம் : 1

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு

திருவிழா : ஜூன் 13 ம் தேதியை மையமாகக் கொண்ட மூன்று நாட்கள்.

வழித்தடம் : கொட்டாரம், பொற்றையடி யில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

வரலாறு :

இலங்காமணிபுரம் ஊரானது பல சமய மக்களும் வாழும் அழகிய தொழிற்பேட்டை பகுதியாகும்.

1967 ஆம் ஆண்டு தொழில் நிமித்தமாக இங்கு குடியேறிய இரண்டு கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள் இணைந்து சிறு ஓலைக்குடிசை கட்டி தினமும் மாலை வேளையில் ஜெபித்து வந்தார்கள். இதனை அறிந்து தென்தாமரைகுளம் பங்குத்தந்தை அருட்பணி. மாசிலாமணி அவர்கள் ஓலைக்கூரை குடிசையை ஆலயமாக அர்ச்சித்து திருப்பலி நிறைவேற்றினார்.

1975 க்கு பிறகு அருட்பணி. ஜோசப் அவர்கள் ஆலயத்தை புதுப்பித்து கத்தோலிக்க குடும்பங்கள் பலவற்றையும் ஒன்று சேர்த்து திருப்பலி நிறைவேற்றினார்.

1985 ஆம் ஆண்டில் அருட்பணி. வல்தாரிசு அவர்கள் ஓலைக்கூரையை அகற்றி புதிய ஆலயம் கட்டி, தென்தாமரைகுளம் ஆலயத்தில் இருந்த புனித அந்தோணியார் சுரூபத்தை இவ்வாலயத்தில் நிறுவி ஞாயிறு திருப்பலியும், செவ்வாய் நவநாளும் நிறைவேற்றி வந்தார்.

தென்தாமரைகுளம் பங்கிலிருந்து மாற்றப்பட்டு 15.07.2005 முதல் கொட்டாரம் பங்கின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

தற்போது ஆலயம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், பங்குத்தந்தை அருட்பணி சகாய பிரபு அவர்கள் புதிய ஆலயம் கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் வெறும் பத்து குடும்பங்களைக் கொண்ட இவ்வாலய மக்களால் மட்டுமே புதிய ஆலயம் கட்டுவது என்பது மிக மிக சிரமமான காரியம். ஆகவே இவ்வாலய பணிக்கு உதவி செய்ய எண்ணம் கொண்ட நல்லுள்ளங்கள் பங்குத்தந்தையை தொடர்பு கொண்டு தங்களால் இயன்ற உதவிகளை செய்திட பணிவுடன் கேட்கின்றோம்.

பங்குத்தந்தையின் தொடர்பு எண் : 7598403378

நீங்கள் செய்யக்கூடிய சிறு உதவி கூட பேருதவியாக இருக்கும்..

"கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்" லூக்கா 6:38