புனித அந்தோணியார் ஆலயம்.
இடம் : அப்பட்டுவிளை
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
நிலை: பங்கு தளம்
கிளைகள் : இல்லை
குடும்பங்கள் : 190
அன்பியங்கள் : 7
ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு
பங்குத்தந்தை : அருட்பணி. சேகர் மைக்கேல்
திருவிழா : மே மாதத்தில்.
வரலாறு :
அப்பட்டுவிளை மக்கள் 10.11.1918 வரை காரங்காடு பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்த மாடத்தட்டுவிளை ஊருடன் இணைந்து இருந்தனர். அக்காலத்தில் அப்பட்டுவிளையில் கற்சிலுவை ஒன்று நாட்டப் பட்டது. பின்னர் இந்த கற்சிலுவை இருந்த இடத்தில் புனித அந்தோணியார் குருசடி கட்டப்பட்டது.
அப்பட்டுவிளை மக்களின் ஆன்மீகத் தேவைகளுக்கு தனியாக ஆலயம் வேண்டும் என அருட்பணி. தாமஸ் பெரைரா அவர்கள் 18.02.1935 ல் மேதகு ஆயரிடம் அனுமதி கேட்டார்.
அதன்பிறகு அருட்பணி. மத்தியாஸ் அவர்கள் புனித அந்தோணியார் குருசடியை விரிவுபடுத்தி ஆலயமாக மாற்றி 25.12.1942 ல் திருப்பலி நிறைவேற்றினார்.
பின்னர் 1944 ல் ஆயரின் அனுமதி பெற்று மாடத்தட்டுவிளை பங்கின் கிளைப் பங்காக உயர்த்தப் பட்டது.
அருட்பணி. சூசை மிக்கேல் பணிக்காலத்தில் 16.07.1960 அன்று புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டது.
அருட்பணி. ஜோசபாத் மரியா பணிக்காலத்தில் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 20.13.1970 அன்று மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
பின்னர் அவர்மீது புதுப்பிக்கப்பட்டு 01.01.1985 ல் அர்ச்சிக்கப் பட்டது. தூய லூர்து அன்னை கெபி, கலையரங்கம், படிப்பகம், ஆலய நுழைவாயில், அழகிய கொடிக்கம்பம் ஆகியவை வைக்கப்பட்டு சிறப்புற திகழ்கிறது அப்பட்டுவிளை புனித அந்தோணியார் இறை சமூகம்.
பின்னர் தனிப் பங்காக உயர்த்தப் பட்டது.