663 புனித அமல அன்னை ஆலயம், அய்யம்பாளையம்

  

புனித அமல ஆன்னை ஆலயம்

இடம் : அய்யம்பாளையம்

மாவட்டம் : திண்டுக்கல்

மறைமாவட்டம் : மதுரை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம் : வத்தலக்குண்டு

நிலை : பங்குத்தளம்

பங்குத்தந்தை : அருள்பணி. பாரிவளன்

குடும்பங்கள் : 54

அன்பியங்கள் : 6

ஞாயிறு திருப்பலி காலை 08.00 மணி

வாரநாட்களில் மாலை 07.00 மணி (மாற்றத்திற்குட்பட்டது)

முதல் வெள்ளிக்கிழமை : மாலை 07.00 மணி திருப்பலி, நற்கருணை ஆராதனை

திருவிழா : மே மாதம் முதல் வாரத்தில்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருள்சகோதரி. ரெக்ஸி, அமலோற்பவ அன்னை சபை மதுரை

2. அருள்பணி. சேவியர் இராயப்பன், பல்லோட்டி சபை (இறைவனடி)

3. அருள்பணி. நிர்மலா மரியா, சார்லஸ் பொரோமியா சபை

4. அருள்சகோதரி. ஆரோக்கிய மேரி, அமலோற்பவ அன்னை சபை மதுரை

வழித்தடம் : வத்தலக்குண்டு -அய்யம்பாளையம்

வரலாறு:

திண்டுக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய சிறு கிராமமாகிய அய்யம்பாளையத்தில் அமைந்துள்ள, புனித அமல அன்னை ஆலய வரலாற்றைக் காண்போம்...

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பங்கின் கிளைப் பங்காக இருந்த நிலையில், அய்யம்பாளையம் பகுதியில் விவசாய கூலித் தொழிலாளர்கள் பல இடங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்து தங்கி வேலை செய்து வந்ததால், இம்மக்களின் ஆன்மீகத் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு அருள்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பின்பு 1965-ம் ஆண்டு தனிப்பங்காக உயர்த்தப் பட்டது.

புதிய ஆலயமானது 1989 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

2021 ஆம் ஆண்டு ஆலயம் அழகுற புதுப்பிக்கப் பட்டது.

புனித அன்னாள் சபை:

மூன்று அருள்சகோதரிகள் பணியாற்றி வருகின்றனர். புனித அன்னாள் நலவாழ்வு மையம், இயற்கை மற்றும் ஹோமியோபதி மருத்துவம் ஆகியவற்றை சிறப்புற நடத்தி வருகின்றனர்.

புனித மரியன்னை இல்லம், சேசுசபையின் இல்லம் ஆகியனவும் பங்கில் உள்ளன.

பங்கில் இறைப்பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருள்பணி. T. ஜோசப் லாசர் (1965-1969)

2. அருள்பணி. S. M. அருள்சாமி (1969-1984)

3. அருள்பணி. J. விக்டர் (1984-1986)

4. அருள்பணி. M. ஞானசந்தானம் (1988-2011)

5. அருள்பணி. ஜெகநாதன் (2011-2018)

6. அருள்பணி. மரிய அருள் செல்வம் (2018-2019)

7. அருள்பணி. சந்தியாகப்பன் (2018-2019)

8. அருள்பணி. பாரிவளன் (2019 முதல்...)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. பாரிவளன்