873 புனித அமல அன்னை ஆலயம், எச்சூர்

    

புனித அமல அன்னை ஆலயம்

இடம்: எச்சூர்

மாவட்டம்: காஞ்சிபுரம்

மறைமாவட்டம்: செங்கல்பட்டு

மறைவட்டம்: காஞ்சிபுரம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித ஆரோக்கிய மாதா ஆலயம், பால்நெல்லூர் வல்லம் கண்டிகை

பங்குத்தந்தை அருட்பணி. சாம்சன் 

குடும்பங்கள்: 27

அன்பியம்: 1

சனிக்கிழமை மாலை 06:45 மணிக்கு திருப்பலி

திருவிழா:  ஆகஸ்ட் மாதம் இறுதியில்.

வழித்தடம்: செங்கல்பட்டு -வல்லம் -பால்நெல்லூர் -எச்சூர்.

Location map: https://maps.app.goo.gl/wtLCixgzzc4v4TuY8

வரலாறு:

1887-1892 வரை ஐரோப்பா, மங்களூர், கேரளா மற்றும் கோவா ஆகிய இடங்களில் இருந்து வந்த அருட்பணியாளர்கள் பால்நெல்லூர் வல்லம் கண்டிகையை மையமாகக் கொண்டு ‌கூடுவாஞ்சேரி, தெரேசாபுரம், திருப்பெரும்புதூர் பொதூர், முடிச்சூர், படப்பை, ஏலக்காய்மங்கலம், பண்ருட்டி, மதுவந்தாங்கல், எழிச்சூர், எச்சூர் ஆகிய இடங்களில் தங்களுடைய மறைப்பரப்பு பணியை செய்து வந்துள்ளனர். 

1922 ஆம் ஆண்டு பால்நெல்லூர் வல்லம் கண்டிகை தனிப் பங்காக உயர்த்தப்பட்ட பின்னர், சென்னை -மயிலை மறைமாவட்ட குருக்களின் வழிகாட்டலில் செயல்பட்டு வந்தது. ஆனால் எச்சூர் பகுதியில் அப்போது ஆலயம் எதுவும் இல்லை. 

சென்னை -மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் A.R. அருளப்பா அவர்களின் வழிகாட்டலில் எச்சூரில் ஓலைக்குடிசை ஆலயம் அமைக்கப்பட்டது.

பின்னர் பால்நெல்லூர் வல்லம் கண்டிகை பங்குத்தந்தை அருட்பணி. P. C. தாமஸ் (1976-1988) பணிக்காலத்தில் கல்சுவர் மற்றும் ஓடு வேய்ந்த ஆலயம் கட்டப்பட்டது.

ஓடு வேய்ந்த ஆலயம் பழுதடைந்த காரணத்தால், அருட்பணி. வினோத் குமார் பணிக்காலத்தில், இந்த ஆலயம் அகற்றப்பட்டு எச்சூர் மக்களின் உழைப்பு மற்றும் நிதிபங்களிப்புடனும், மறைமாவட்ட ஒத்துழைப்புடன் மற்றும் உபகாரிகளின் நிதி பங்களிப்புடனும் புதிய ஆலயம் கட்டப்பட்டு, அதனுடன் கொடிமரம், ஆலயத்தை சுற்றி மதிற்சுவர் அமைக்கப்பட்டு 02.09.2022 அன்று செங்கல்பட்டு மறைமாவட்ட மேதகு ஆயர் நீதிநாதன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

இம்மக்களின் ஆன்மீக வாழ்வு மேம்படவும், ஆலய வளர்ச்சிக்குத் தேவையான உதவிகள் கிடைத்திடவும், அடிப்படை வசதிகளான சாலை வசதி ஏற்படவும் ஜெபிப்போம்....

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி. வினோத் குமார் மற்றும் ஆலய உபதேசியார் திரு. மகிமைதாஸ் ஆகியோர்.