421 தூய தோமா ஆலயம், அரமன்னம்


தூய தோமா (தோமையார்) ஆலயம்

இடம் : அரமன்னம்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
மறை வட்டம் : புத்தன்கடை

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய அந்தோணியார் ஆலயம், நாகக்கோடு

பங்குத்தந்தை : அருட்பணி. சுதர்சன்

திருத்தொண்டர் டேனியல் ஆபிரகாம்

குடும்பங்கள் : 150
அன்பியங்கள் : 5

ஞாயிறு காலை 09.30 மணிக்கு ஜெபமாலை, காலை 10.00 மணிக்கு திருப்பலி.

வெள்ளி மாலை 06.00 மணிக்கு ஜெபமாலை, மாலை 06.30 மணிக்கு நவநாள், திருப்பலி.

திருவிழா : ஜூலை 03 ஆம் தேதியை மையமாகக் கொண்ட ஐந்து நாட்கள்.

வழித்தடம் : நாகக்கோடு -லிருந்து ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ள சாத்திரவிளை -யில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Location Map : https://maps.google.com/?cid=2232347260215641265

பங்கு வரலாறு:

அரமன்னத்தில் கிறிஸ்தவ இறை நம்பிக்கையானது ஆண்டுகள் கடந்து உறுதியாய் நிலைத்து நிற்கிறது. தொடக்க காலத்தில் பெரிய அளவில் கிறிஸ்தவ விசுவாசிகளின் எண்ணிக்கை இல்லாவிட்டாலும் அரமன்னம் சுற்று வட்டாரத்தில் உள்ள சுமார் 30 குடும்பங்கள் இறை நம்பிக்கையில் சிறந்து விளங்கியதுடன், திருப்பலிக்கு கொல்வேல் தூய கார்மல் அன்னை ஆலயம் சென்று வந்தனர். இத்தருணத்தில் புத்தன்கடை பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. தாமஸ் பெர்னான்டோ அவர்களின் முயற்சியால் அரமன்னத்தில் 30 சென்று நிலம் விலைக்கு வாங்கப்பட்டு, அதில் ஒரு ஓலை குடிசை அமைத்து தூய தோமாவின் படம் ஒன்றினை நிறுவி புத்தன்கடை பங்கின் கிளைபங்காக 25.12.1972-ல் அதிகாலை முதல் திருப்பலியை நிறைவேற்றினார்.

09.05.1973 அன்று கொல்வேல் பங்கு தாய்ப்பங்காக உயர்ந்த நேரத்தில் அரமன்னம் அதன் கிளைபங்காக இணைக்கப்பட்டது. புதிய பங்குத்தந்தை அவர்களால் கத்தோலிக்க சேவா சங்கம், மரியாயின் சேனை, மறைக்கல்வி ஆகிய அமைப்புகள் உருவாக்கப்பட்டது. ஆலயத்திற்கு வருவதற்கு பாதை அமைக்க திரு. வறுவேல் அவர்களால் இரண்டே கால் சென்ட் நிலம் நாலு அடி அகலத்தில் இனாமாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து பணியாற்றிய அருட்தந்தையர்கள் பங்கு மக்களோடு இணைந்து செயல்பட்டு, ஆலயத்திற்கு மின் இணைப்பு மற்றும் வெளிநாட்டு உதவியுடன் புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 20.12.1991 அன்று ஆயர் மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, ஒரு சிறிய ஆலயமாக உருவெடுத்தது. இக்காலக்கட்டத்தில் பங்கு அருட்பணி பேரவை அமைக்கப்பட்டது.

17.07.1995 -ல் நாகக்கோடு பங்கின் கிளைப் பங்காக இணைந்தது.

தொடர்ந்து பணியாற்றிய அருட்தந்தையர்கள் எல்லா ஞாயிறும், வெள்ளியும் திருப்பலி நிறைவேற்றி அன்பியங்கள், அடித்தள முழுவளர்ச்சி சங்கம், திருவழிபாட்டுக் குழு, பத்தசபை இயங்களை உருவாக்கி ஊக்கப்படுத்தி உள்ளார்கள்.

அருட்பணி. தேவசகாயம் அவர்களிடமிருந்து நிதி உதவி பெற்று, மூன்றரை சென்ட் நிலம் வாங்கி ஆலயத்திற்கு வாகனங்கள் வந்து செல்ல சாலை வசதி செய்யப்பட்டது.

இறைப்பணியில் ஆழப்பட கோல்பிங் இந்தியா, இளைஞர் இயக்கம, பாலர் சபை தொடங்கப்பட்டது. கத்தோலிக்க சேவா சங்கத்தின் 25-வது வெள்ளி விழா கொண்டாட்ட நினைவாக ஆலய வளாகத்தில் கலையரங்கம் அமைக்கப்பட்டது.

பங்கின் குழந்தைகளுக்காக பாலர் பள்ளி ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

திரு. சகாயராஜ் அவர்களிடமிருந்து 1சென்ட் நிலம் இனாமாகப் பெற்று அதில் அன்னை வேளாங்கண்ணி குருசடி அமைத்து 16.01.2008 அன்று ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

4 சென்ட் நிலம் விலைக்கு வாங்கி அதில் பங்குத்தந்தை இல்லம் அமைத்து 03.07.2010 அன்று ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

கத்தோலிக்க சேவா சங்கத்தின் 35-வது ஆண்டு விழா நினைவாக கொடி மரம் அமைக்கப்பட்டது. திரு. ஹாரீஸ் அவர்களிடமிருந்து 1சென்ட் நிலம் இனாமாக பெற்று அதில் லூர்து மாதா கெபி அமைத்து 03.07.2013-ல் அர்ச்சிக்கப்பட்டது.

கல்லறை தோட்டத்திற்காக பனிரெண்டரை சென்ட் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. உணவகம் அமைக்கப்பட்டது.

03.09.2018 அன்று மக்களின் நலனுக்காக ஆலய வளாகத்தில் சமுக நலக்கூடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

தற்போது மக்களின் உதவி மற்றும் நன்கொடைகளால் புதிய ஆலயம் கட்டப்பட்டு 03-07-2019 அன்று மேதகு ஆயர். ஜெறோம் தாஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

இவ்வாறு இறைவனின் அருளாலும் தூய தோமாவின் பாதுகாப்பாலும் பங்குத்தந்தையின் வழி நடத்துததாலும் பங்கு மக்களின் ஒத்துழைப்பாலும் அரமன்னம் தலத் திருச்சபையானது வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. சுதர்சன் அவர்கள்.