புனித அமல அன்னை ஆலயம்
இடம் : அமலாபுரம் (குழித்துறை மேற்கு இரயில் நிலையத்திற்கருகில்)
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அந்தோணியார் ஆலயம், மருதங்கோடு
குடும்பங்கள் : 170
அன்பியங்கள் : 9
பங்குத்தந்தை : அருட்பணி M
ஸ்டீபன் ராஜ் SDS
ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு
வியாழக்கிழமை திருப்பலி :மாலை 06.00 மணிக்கு
திருவிழா : டிசம்பர் மாதம் 08 ஆம் தேதியை உள்ளடக்கிய ஏழு நாட்கள்.
அமலாபுரம் வரலாறு :
சுமார் 90 வருடங்களுக்கு முன்னர் திரு. இயேசுதாஸ் வைத்தியர் மக்களை செப வாழ்வில் ஈடுபடுத்தி, திரித்துவபுரம் பங்கு அருட்பணியாளரின் வழிகாட்டுதலோடு 50 குடும்பங்கள் திருமுழுக்குப் பெற்று திருமறையில் சேர வழி வகுத்தாக கூறப்படுகிறது.
மேலும் நிலத்தை இலவசமாகக் கொடுத்ததுடன் அருகிலுள்ள நிலத்தை மக்களின் ஒத்துழைப்புடன் வாங்கி, இந்த இடத்திலே முதன் முதலில் சிறிய ஆலயம் ஒன்று தென்னையோலையால் வேயப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன.
அருட்பணி. இயேசுதாசன் தாமஸ் பங்குத்தந்தையாக இருந்த போது 15.10.1986 அன்று மேதகு ஆயர் ஆரோக்கிய சாமி அவர்களால் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 22.02.1993 அன்று மேதகு ஆயர் லியோன் அ தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
05.11.1997 ல் மருதங்கோடு தனிப்பங்காக ஆனபோது, அமலாபுரம் அதன் கிளைப் பங்காக ஆனது.
14.09.2005 ல் புதிய கொடிமரம் வைக்கப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.