122 தூய பவுல் (சின்னப்பர்) ஆலயம், மாத்தார்


தூய பவுல் ஆலயம்

இடம் : மாத்தார்.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி சேவியர் சுந்தர்.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித சவேரியார் ஆலயம், ஏற்றகோடு.

குடும்பங்கள் : 90
அன்பியங்கள் : 3

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு.

வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு நவநாள் திருப்பலி.

திருவிழா : ஜனவரி மாதத்தில் மூன்று நாட்கள்.
மாத்தார் ஆலய வரலாறு :

மாத்தார் கிராமத்தில் 1962 ஆம் ஆண்டில் திரு. பாக்கியநாதன் -திருமதி. சவரிபாய் தம்பதிகளின் மகனின் நோய் நீங்கியதற்கு நன்றியாக 2 சென்ட் நிலத்தை ஆயர் பெயருக்கு எழுதி கொடுத்தனர். அந்த இடத்தில் சிறு குருசடி கட்டப்பட்டு அப்போதைய புத்தன்கடை பங்குத்தந்தை அருட்பணி. பெல்லார்மின் ஜியோ அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

1984 ஆம் ஆண்டு கிளைப் பங்காக ஆனது.

அருட்பணி. இயேசுரத்தினம் முயற்சியால் 10 சென்ட் நிலம் வாங்கப்பட்டு ஓலைக் கூரை ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது. இதில் மறைக்கல்வி மற்று பக்த சபை இயக்கங்கள் நடத்தப்பட்டன.

2002 ஆம் ஆண்டு அருட்பணி. ஜெரால்டு ஜஸ்டின் அவர்களின் பணிக்காலத்தில் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.

2004 ஆம் ஆண்டு ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.

ஏற்றகோடு தனிப்பங்கான போது அதன் கிளைப் பங்காக ஆனது.

மண்ணின் இறையழைத்தல்கள்
அருட்சகோதரி மரிய தங்கம்
அருட்சகோதரி ஹெலன்.