280 புனித வியாகுல அன்னை ஆலயம், அரசடிபட்டி


புனித வியாகுல அன்னை ஆலயம்

இடம் : அரசடிபட்டி

மாவட்டம் : புதுக்கோட்டை
மறை மாவட்டம் : தஞ்சாவூர்

மறை வட்டம் : புதுக்கோட்டை

நிலை : பங்குதளம்

கிளைகள் :
1. புனித மாதரசி மாதா ஆலயம், தவளப்பள்ளம்
2. புனித பாத்திமா மாதா ஆலயம், பாத்திமாநகர்

பங்குத்தந்தை : அருட்தந்தை சவேரியார்

குடும்பங்கள் : 250 (கிளை கிராமங்களை சேர்த்து 450)

அன்பியங்கள் : 7
ஞாயிறு திருப்பலி : காலை 08.15 மணிக்கு

நாள்தோறும் திருப்பலி : மாலை 06.30 மணிக்கு

மாதத்தின் முதல்சனிக்கிழமை புனித வியாகுல அன்னையின் பவனியும்,ஜெபமாலை மன்றாட்டும் தொடர்ந்து திருப்பலியும் நடைபெறும்

திருப்பலி முடிந்தவுடன் இரவு உணவு வழங்கப்படும்

திருவிழா : மே மாத இறுதியில் ஆரம்பித்து பத்து நாட்கள் நடைபெறும்.

வரலாறு :

அரசடிபட்டி புதுக்கோட்டை to ஆலங்குடி வழி; மணிப்பள்ளம் சாலை, அரசடிபட்டி 4- ல் ரோடு என்ற இடத்தில் இருந்து வடக்கு திசையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளே உள்ளது.

புனித வியாகுல அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயமானது ஆரம்பத்தில் நாஞ்சூர் பங்கின் கிளையாகவும், பின்னர் கோட்டைக்காடு பங்கின் கிளையாகவும், தொடர்ந்து வேங்கிடகுளம் பங்கின் கிளையாகவும், பின்னர் ஆலங்குடி பங்கின் கிளையாகவும் மாறியது.

இறுதியாக 2006-ஆம் ஆண்டில் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.

முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை செபாஸ்டின் அவர்கள் பொறுப்பேற்று தற்போதைய புதிய ஆலயப் பணிகளை ஆரம்பித்து சிறப்பாக செய்து வந்தார்கள்.

தொரட்ந்து பொறுப்பேற்ற தற்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை சவேரியார் பணிக்காலத்தில் ஆலயப்பணிகள் நிறைவு பெற்று 02- 06-2017 அன்று தஞ்சாவூர் ஆயர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ் மற்றும் திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் மேதகு தாமஸ் பால்சாமி ஆகியோர் இணைந்து அர்ச்சித்து திறந்து வைத்தனர்.

நான்கு வருடங்கள் இவ்வாலய கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன.

மிகவும் அழகான இவ்வாலயமானது கோத்திக் கட்டிடக் கலை, மாடர்ன் கட்டடக்கலை மற்றும் அரச காலத்து சாளர கட்டிடக் கலைகளை இணைத்து கட்டப்பட்டதாகும்.

இதன் வட்ட வடிவ மேற்கூரையில் (Doom) வியாகுலத்தாயின் ஏழு வியாகுலங்களும் சித்திரமாக அழகுற வரைந்து வைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.

மேலும் புனித வியாகுல அன்னையை இப்பகுதியில் உள்ள பிற சமய சகோதர சகோதரிகள் தங்கள் குலதெய்வம் என்று போற்றுகின்றனர்.

அமெரிக்காவைச் சார்ந்த கணிப்பொறி பேராசிரியர் (computer professor) Vaclav Rajlich அவர்களது ஊரில் வியாகுல அன்னைக்கு ஆலயம் உள்ளது. அரசடிபட்டியிலும் வியாகுல அன்னைக்கு ஆலயம் கட்டப்படுவதை கேள்விப்பட்டு ஐம்பது இலட்சம் ரூபாய் (1,00,000 அமெரிக்கன் டாலர்) -ஐ ஆலய கட்டுமானப் பணிக்கு கொடுத்து உதவினார்கள்.

அதன்பின்னர் Vaclav அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த வேதனைப்பட்டார்கள். ஏழெட்டு மாதங்களாக கீமோ சிகிச்சை (Vaclav Rajlich pancritise cancer therefore underwent humo treatment) மேற்கொண்டிருந்தார். தனது புற்றுநோய் நீங்க அன்னையிடம் வேண்டினார். அதுமுதல் நாள்தோறும் இந்த ஆலய மக்களும் பங்குத்தந்தையும் மனமுருக Vaclav அவர்கள் நலம் பெற அன்னை வழியாக இறைவனிடம் வேண்டிக் கொண்டனர்.

என்னே..! ஆச்சரியம் பாருங்கள்..! Vaclav Rajlich அவர்களது புற்று நோய் புனித வியாகுல அன்னையின் அருளால் மறைந்து போனது. பல்வேறு பரிசோதனைகளும் செய்து பார்த்த போது புற்றுநோய் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லா வண்ணம் குணமடைந்தார். புனித வியாகுல அன்னைக்கு அனைவரும் மனதார நன்றி செலுத்தினார்கள்.

இவ்வாறு பல்வேறு வேண்டுதல்களுடன் வருகின்ற மக்கள் தங்கள் தேவைகளை அன்னையிடம் வேண்டி செபிக்க அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைக்கிறார் புனித வியாகுல அன்னை.

84 வாரங்களாக சனிக்கிழமை தோறும் ' பிரச்சினைகளின் முடிச்சவிழ்கும் (வியாகுல) அன்னை, நவநாள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இவ்வாலயமானது மூன்று கிராமங்களை உள்ளடக்கியது. அரசடிபட்டி பிரதான கிராமமாகும். தவளப்பள்ளம் மற்றும் பாத்திமாநகர் இரண்டும் கிளை கிராமங்கள் ஆகும்.

வருடத்தில் மூன்று முறைகள் இவ்வாலயத்தில் திருவிழா நடைபெற்று வருகின்றன அவை.

1. செப்டம்பர் மாதம் 15 - ஆம் தேதி வியாகுல மாதா ஊர் திருவிழாவாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

2. தவக்காலத்தில் ஆறாம் கிழமை வெள்ளிக்கிழமை திருவிழா :

தவக் காலத்தின் குருத்தோலை ஞாயிறுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சுமார் 15,000 -க்கும் மேற்பட்ட மக்கள் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர். (சுமார் 50 - கி.மீ க்கு அப்பாலிருந்தும் பக்தர்கள் வருவார்கள்.)

திருவிழாவின் அன்று காலையில் 06.30 மணிக்கு முதல் திருப்பலி நடைபெறும்.

காலையில் 08.30 மணிக்கு ஆயர் தலைமையில் இரண்டாவது திருப்பலி நடைபெறும்.

காலை 11.00 மணிக்கு மூன்றாவது திருப்பலி நடைபெறும்.

விழாவின் போது காலை 10.15 மணி முதல் அன்பின் விருந்து (அன்னதானம்) வழங்கப்படுகிறது. இந்த அன்பு விருந்திற்கான காய்கள், அரிசி மளிகைப் பொருட்களை பல்வேறு மக்களும் காணிக்கையாகவும் நேர்ச்சையாகவும் கொடுப்பார்கள். இதனை வைத்து தான் அன்பு விருந்து தயார் செய்யப்படுவது குறிப்பிடத் தக்கது.

3. பங்கு திருவிழாவானது பெந்தேகோஸ்து நாளை மையமாகக் கொண்டு பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. இந்த ஆண்டு திருவிழா மே மாதம் 31- ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 09 -ஆம் தேதி வரையில் சிறப்பாக நடைபெற இருக்கின்றது.

மண்ணின் இறை அழைத்தல்கள் :

 மறை மாவட்ட அருட்தந்தையர்கள் 4 பேர். MSFS சபை அருட்தந்தையர்கள் 5 பேர்.

குருமாணவர்கள் 2 பேர். மற்றும் சுமார் 15 அருட்சகோதரிகளையும் மண்ணின் மைந்தர்கள்களாக கொண்டுள்ளது அரசடிபட்டி இறைசமூகம்.

இவ்வாறாக பல்வேறு சிறப்புகளையும், வியாகுல அன்னையின் புதுமைகளும் நிறைந்த அரசடிபட்டி பங்கானது கடந்த ஐந்து ஆண்டுகளாக பங்குத்தந்தை அருட்தந்தை சவேரியார் அவர்களின் சிறப்பான வழிகாட்டுதலில் இறை திட்டத்தின் படி மென்மேலும் சிறப்பு பெற்று வளர்ச்சிப் பாதையில் சிறப்பாக முன்னேறி செல்கிறது.