602 புனித மரியன்னை ஆலயம், மாரப்பநாயக்கன்பட்டி

     

புனித மரியன்னை ஆலயம் 

இடம் : மாரப்பநாயக்கன்பட்டி, பொம்மம்பட்டி, நாமக்கல் தாலுகா, 637212

மாவட்டம் : நாமக்கல் 

மறைமாவட்டம் : சேலம் 

மறைவட்டம் : நாமக்கல் 

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : கிறிஸ்து அரசர் ஆலயம், நாமக்கல் 

பங்குத்தந்தை : அருள்பணி. ஜான் அல்போன்ஸ் (நாமக்கல் மறைவட்ட முதல்வர்)

குடும்பங்கள் : 40

அன்பியம் : 1

மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிக்கு திருப்பலி 

திருவிழா : செப்டம்பர் மாதத்தில். 

வழித்தடம் : நாமக்கல் -ஈரோடு சாலையில் 6கி.மீ தொலைவில் எர்ணாபுரம் உள்ளது. இங்கிருந்து 2கிமீ தொலைவில் மாரப்பநாயக்கன்பட்டி அமைந்துள்ளது.

வரலாறு :

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மாரப்பநாயக்கன்பட்டி புனித மரியன்னை ஆலய வரலாற்றைக் காண்போம்... 

கும்பகோணம் மறைமாவட்ட பேராலயத்தின் பங்குத்தந்தையாக இருந்த மேதகு ஹென்றி புரூனியர் அவர்கள், 16.12.1926 -ல் நாமக்கல் வந்து  கொசவம்பட்டியில் சில நாட்கள் தங்கியிருந்து, 1927 ல்  இப்பகுதிக்கு பங்குத்தந்தையாக இருந்தார். 

இப்போதைய நாமக்கல் பங்கின் கிளைப் பங்காக விளங்கும் மாரப்பநாயக்கன்பட்டியில் தங்கி, இந்த தாலுகா முழுவதும் பணியாற்றினார். இவருக்குத் துணையாக அருள்பணி. லாபன்ட்பர். 1927 -ல் இருந்துள்ளார். 

1928 ஆம் ஆண்டு கிறிஸ்து அரசரை பாதுகாவலராகக் கொண்டு நாமக்கல் பங்கு அப்போதே சிறப்பு பெற்றது. அருள்பணி. ஹென்றி புரூனியர். அவர்களால் மாரப்பநாயக்கன்பட்டியில் முதல் ஆலயம் கட்டப்பட்டது. 

1930 ஆம் ஆண்டு அருள்பணி. ஹென்றி புரூனியர் அவர்கள் சேலம் மறைமாவட்டத்தின் முதல் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டு,  பாண்டிச்சேரியிலுள்ள செம்பார்க் பேராலயத்தில் ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டார். இவ்விழாவிற்கு நாமக்கல் மாரப்பநாயக்கன்பட்டி பகுதியிலிருந்து மக்கள் சென்றனர். இவர்களை அந்த விழாவில் மேதகு ஆயர் அவர்கள் கௌரவப்படுத்தி உபசரித்துள்ளார். இதனை இம்முன்னோர்கள் தங்களுக்கு கிடைத்த பாக்கியமாகக் கருதினர். 

சில ஆண்டுகளுக்குப் பிறகு ஓடு வேய்ந்த ஆலயம் கட்டப்பட்டது. 

தற்போது பழைய ஆலயம் இடிக்கப்பட்டு, அருள்பணி. ஜான் அல்போன்ஸ் அவர்களின் முயற்சியால் மக்களின் ஒத்துழைப்புடன் புதிய ஆலய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாலய கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவு பெற்று அர்ச்சிப்பு விழா காண வாழ்த்துகின்றோம்... 

தகவல்கள் : பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் மாரப்பநாயக்கன்பட்டி ஆலய உறுப்பினர்.