இடம் : தும்மங்குறிச்சி, தும்மங்குறிச்சி அஞ்சல், நாமக்கல் தாலுகா, 637003
மாவட்டம் : நாமக்கல்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : நாமக்கல்
நிலை : கிளைப்பங்கு
பங்கு : கிறிஸ்து அரசர் ஆலயம், நாமக்கல்
பங்குத்தந்தை : அருள்பணி. ஜான் அல்போன்ஸ்
குடும்பங்கள் : 15
மாதத்தின் இரண்டாவது ஞாயிறு மாலை 06.00 மணிக்கு திருப்பலி.
திருவிழா : செப்டம்பர் மாதத்தில்
வழித்தடம் : நாமக்கல் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம். இங்கிருந்து 2கி.மீ தொலைவில் தும்மங்குறிச்சியில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
வரலாறு :
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அழகிய சிறிய கிராமம் தும்மமங்குறிச்சி. மாவட்ட ஆட்சியர் அலுவலத்தின் அருகே இவ்வூர் இருப்பது சிறப்பு.
தும்மங்குறிச்சியில் வாழ்ந்த கிறிஸ்தவ மக்கள், திருப்பலியில் பங்கேற்க நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயம் செல்ல வெகு தொலைவாக இருந்ததால், 1942 ஆம் ஆண்டில் ஓலைக்குடிசை ஆலயம் ஒன்று கட்டப்பட்டு மக்கள் இறைவனை வழிபட்டு வந்தனர்.
ஓலைக்குடிசை ஆலயம் பழுதடைந்து போனதால், அதன்பிறகு ஓடுவேய்ந்த புதிய ஆலயம் கட்டப்பட்டு 24.06.1978 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
2007 ஆம் ஆண்டு அருள்பணி. மாசிலாமணி பணிக்காலத்தில் புனித ஆரோக்கிய அன்னை கெபி கட்டப்பட்டது.
அருள்பணி. D. A. பிரான்சிஸ் (2013-2018) பணிக்காலத்தில் ஆலயத்திற்கு வண்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.