776 திருஇருதய ஆண்டவர் திருத்தலம், இடைக்காட்டூர்

                 

திருஇருதய ஆண்டவர் திருத்தலம்

இடம்: இடைக்காட்டூர்

திருத்தல முகவரி:

Sacred Heart Jesus Shrine.

Idaikaattur, Sivagangai-630602

Tamilnadu, India

Email -: sacredheartblessings@gmail.com

Phone -: +91 91596 96893

மாவட்டம்: சிவகங்கை

மறைமாவட்டம்: சிவகங்கை

மறைவட்டம்: சிவகங்கை

நிலை: திருத்தலம்

கிளைப்பங்கு: புனித அன்னம்மாள் ஆலயம், அருளானந்தபுரம்

பங்குத்தந்தை: அருள்பணி. A. இம்மானுவேல் தாசன்

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி: காலை 08:30 மணி, காலை 11:00 மணி

வாரநாட்களில் திருப்பலி: காலை 11:00 மணி

சனிக்கிழமை காலை 06:00 மணிக்கு திருப்பலி

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை திருப்பலி: காலை 07:00 மணி காலை 11:00 மணி மாலை 06:00 மணி

இரண்டாவது வெள்ளிக்கிழமை காலை 11:00 மணி மாலை 06:00 மணி திருப்பலி

மூன்றாவது வெள்ளி காலை 11:00 மணி மாலை 06:00 மணி நோயாளர்களுக்கான திருப்பலி

நான்காவது வெள்ளிக்கிழமை காலை 11:00 மணி மாலை 06:00 மணி: கல்வி மற்றும் தொழில் புரிவோருக்கான திருப்பலி

திருவிழா: ஜூன் மாதக் கடைசி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, ஜூலை மாதத் தொடக்கத்தில் நிறைவு பெறும்.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. Bishop. Durairaj, SVD, Bhopal

2. Fr. Louis Gnasamy, Tuticorin

3. Fr. K. S. Michael, Trichy

4. Fr. M. Francis, Trichy

5. Fr. K. S. Rayappar, Trichy

6. Fr. Lazar, Montfort, Pondicherry

7. Fr. G. Maria Diraviam, Madurai

8. Fr. J. F. Stanislaus, Trichy

9. Fr. V. Siluvai Utheriam, Mysore

10. Fr. A. Iruthayam, Sivagangai

11. Fr. S. A. Alexis, Madurai

12. Fr. M. Berchmans, Palayamkottai

13. Fr. M. Diviyanandam, Madurai

14. Fr. J. Stanislaus Selvaraj, Raiganj

15. Fr. A. Joseph Xavier, Madurai

16. Fr. M. James Paulraj, Madurai

17. Fr. A. Joseph Lourduraj, Sivagangai

18. Fr. J. Agith Kumar, Raipur

19. Fr. J. Antonysamy SJ, Colombo

20. Fr. Thiyagarajan, Hyderabad

21. Fr. S. James Anthuvan, Sivagangai

22. Fr. A. David, Madurai

23. Fr. Gerald

24. Bro. M. Sengole Diraviam, Madurai

25. Fr. A. David, SDB

26. Fr. G. Benjamin, SDB

27. Fr. R. Arulvalan, SDB

28. Fr. G. Aruldhas, SDB

29. Fr. V. Jeyaseelan, SDB 

30. Bro. I. Manuel, SJ

31. Bro. K. S. Ignatius, SJ

32. Fr. K. S. Joseph Santiago, SJ

33. Fr. Ignatius Iruthayam, SJ

34. Fr. G. Ignatius, SJ

35. Fr. K. S. Arulanandam, SJ 

36. Bro. D. Antony Muthu, SJ

37. Bro. K. M. Pragasam, SJ 

38. Bro. J. Dharmanathan, SJ

39. Fr. P. T. Chelladurai, SJ

40. Fr. J. L. Gnanarethinam, SJ

41. Fr. I. S. James, SJ

42. Fr. A. Emmanuel Raj, SJ

43. Fr. Manuel Alphonse, SJ

44. Fr. S. Peter Xavier, SJ

45. Fr. A. Jebamalai Raja

46. Fr. A. Jeyaraj Elangeswaran, SJ

47. Fr. S. Amaldas Xavier, SJ

48. Fr. D. Joseph Raj, SJ

49. Fr. S. Kulandaisamy, SJ

50. Fr. S. Iruthaya Raj, SJ

51. Fr. G. J. Arokiasamy, SVD

52. Fr. J. Joseph Ignatius, SVD

53. Fr. J. Jeyaseelan, CMF

54. Bro. Savaimuthu (Arulpragasam), CR (Rosarians) 

55. Bro. I. Alphonse (Stanislaus Rosary), CR

56. Bro. Justin (Stanislaus), CR

57. Bro. Peppin, CR

58. Bro. Philip (Savarimutthu), SG (Brothers of St. Gabriel)

59. Bro. Mathurin (Siluvaimanikkam), SG

60. Bro. Augustine Novello (Nicolas), SG

61. Bro. Thomasnathan K. M. (Ignacimutthu), SG

62. Bro. Pakiayaraj, SG

63. Bro. John Xavier, SG

64. Bro. Lawrence, SG

65. Bro. K. S. Amirtham, SHJ

66. Bro. Iruthayam, SHJ

67. Bro. V. Arulanandam, SHJ

68. Bro. S. Ferdinand, SHJ

69. Bro. K. S. Dhavamani

70. Bro. A. Lourdusamy, SHJ

71. Bro. Siluvai, SHJ

Sisters:

1. Sr. Josephine Pauline, LSP

2. Sr. Rose, PBVM

3. Sr. Janet Mary, FSP

4. Sr. Lourdmary, FSP

5. Sr. Roselet, FSP

6. Sr. Alban (Sagayarani), FSP

7. Sr. Victoria, FSP

8. Sr. A. Paula, FSJ

9. Sr. D. Nirmala, FSJ

10. Sr. A. Nirmala, St Joseph's of Lyons, Madurai

11. Sr. A. Amali, St Joseph's of Lyons, Madurai 

12. Sr. Josephine Victoria, HC

13. Sr. Bonaventura, SAT

14. Sr. Odilia Therese, SAT

15. Sr. J. Humbalin Mary, SAT

16. Sr. Lourdu Amalarani, MSI Hyderabad

17. Sr. Therese Rose, CIC

18. Sr. Imelda, CIC

19. Sr. Rose Agnes, CIC

20. Sr. Judith Mary, CIC

21. Sr. Anitha, CIC

22. Sr. Sabina, CIC

23. Sr. Sophia, CIC

24. Sr. Josephine Iruthayam, CIC

25. Sr. James Cecilia, CIC

26. Sr. G. Stella, CIC

27. Sr. G. Jeyarani, CIC

28. Sr. Jesuvin Nesa Josefa, CIC

29. Sr. Inigo, CIC

30. Sr. V. Josephine, CIC

31. Sr. Madalene Jeyaseeli, CIC

Bon Secours, Chennai (FBS):

32. Sr. Felicia Mary

33. Sr. Auxilia Mary

34. Sr. Jude

35. Sr. Josehpine

36. Sr. John of the Cross

37. Sr. Alphonsa

38. Sr. I. Philomine

39. Sr. S. Gonzaga Rani

40. Sr. L. Alice Emily

41. Sr. L. Jeya Arokia Rajathi

Service of Mary Trichy (OSM):

42. Sr. Ferdinand (Asirvatham)

43. Sr. Agnes

44. Sr. Susai Tiburtius

45. Sr. A. Jane Francisca

46. Sr. Arul Pragasa Mary

47. Sr. Martin Pores

48. Sr. Basilus Mary

49. Sr. Salvin Mary

50. Sr. Susai Natchathra Mary

51. Sr. Sinthathirai Mary

52. Sr. Alice Mary

53. Sr. Lourdu Cyril

54. Sr. Masilla Mary

55. Sr. Clara

56. Sr. Baptista

57. Sr. Theophila

58. Sr. Theodora

59. Sr. Nirmala

60. Sr. Rosary

61. Sr. Consolata

62. Sr. Mary Jeya

63. Sr. Denis

64. Sr. Venicia

65. Sr. Graceline

66. Sr. Bertina

67. Sr. Basilda

68. Sr. A. Julie

69. Sr. J. Sahaya Rani

70. Sr. I. Karunai Therese

71. Sr. S. Stella Unis

72. Sr. Ananda

73. Sr. Camilia

74. Sr. Sebasthi

75. Sr. Adaikala Mary

76. Sr. Lilly Josephine

77. Sr. Flavite

78. Sr. Sabin

79. Sr. Rosali Alphonsha

80. Sr. Motcham

81. Sr. Sahaya Rosary

82. Sr. Amali

83. Sr. Angely

மண்ணின் இறையழைத்தல்கள் தகவல்களில் பெயர்கள் விடுபட்டு போயிருந்தால், தயைகூர்ந்து மன்னிக்கவும்....

வழித்தடம்: மதுரை -இராமேஸ்வரம் வழித்தடத்தில் முத்தனேந்தல் வர வேண்டும். இங்கிருந்து சற்று தொலைவில் இடைக்காட்டூர் அமைந்துள்ளது.

From Sivagangai Bus Stand

Bus Root Timing

Morning (A.M) 5.45, 7.30, 9.30, 10.30

Evening (P.M) 1.30, 3.00, 5.30, 8.30

From Madurai Maatuthavani Bus Stand

Route No: 99 M

Bus Root Timing

Morning (A.M) 10.40

Evening (P.M) 5.15

From Madurai Periyaar Bus Stand

Route No: 99 F

Bus Root Timing:

Morning (A.M) 6.15, 8.45, 9.00, 9.50

Afternoon (P.M) 12.10, 12.45

Evening (P.M) 1.30, 3.40, 4.00

Night (P.M) 7.00, 7.45, 8.15

Location map:

Sacred Heart Shrine 091596 96893

https://maps.app.goo.gl/3qtXnYPLsvpJcn196

இடைக்காட்டூர் திரு இருதய திருத்தலத்தின் வரலாறு:

கி.பி 1894 ஆம் ஆண்டு இயேசுவின் திரு இருதய திருத்தல்ம் இடைக்காட்டூரில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அருட்தந்தை பெர்டினான்ட் செல், SJ அடிகளார் அவர்களால் கட்டப்பட்டது ஆகும். இவ்வாலயம் பிரான்ஸ் நாட்டில் உள்ள ரீம்ஸ் நகரில் உள்ள இயேசுவின் திரு இருதய பேராலயத்தைப் போலவே அமைந்தது.

ஏன் இந்த தேவாலயம் கட்டப்பட்டது?

130 ஆண்டகளுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டில் மரிய அன்னாள் என்ற பெருமகள் தீராத இருதய நோயினால் மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது கத்தோலிக்கப் பெண்கள் சிலர் மரிய அன்னாளைச் சந்தித்தனர். அவர்கள் அன்னாளிடம் திரு இருதய ஆண்டவரை எண்ணி ஒன்பது நாட்கள் வேண்டி வர உங்களுக்கு சுகம் கிடைக்கும் என்று கூறினார்கள். 

அப்போது மருத்துவர்களும் நீங்களும் முழுமையாக நம்பினால் கடவுளின் கருணையே ஒரே தீர்வு என்று கூறினார்கள். இதனை தொடர்ந்து மரிய அன்னாள் நவநாளை விசுவாசத்துடன் தொடங்கினார். ஐந்து நாட்களுக்குப் பிறகு அவர் முழுவதுமாக குணமடைந்தார். இதனைத் தொடர்ந்து ஆண்டவருக்கு நன்றிச் செலுத்த ஒரு தேவாலயம் எழுப்ப வேண்டுமென்று நினைத்தார்.

ஏன் இடைக்காட்டூர் தேர்ந்தெடுக்கப்பட்டது?

இடைக்காட்டூர் ஒரு சிறிய கிராமம் அங்கு இயேசுவின் திரு இருதய திருத்தலம் கூரையால் அமையப்பெற்றது. பங்குத்தந்தை அத்திருத்தலத்தை 1000 மக்கள் அமரக்கூடிய பேராலயமாக மாற்ற விரும்பினார். இடைக்காட்டூரில் வாழும் கிராம விவசாயிகளால் அவ்வாலயத்தை கட்டக்கூடிய பணத்தைக் கொடுக்கமுடியாத நிலையில் இருந்தனர். 

இச்சூழ்நிலைகளால் ஆலயம் கட்ட நிதிசேகரிக்க, பங்குத்தந்தையான அருட்தந்தை பெர்டினான்ட் செல், SJ தனது சொந்த நாடாகிய பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றார். மரிய அன்னாள் அவர்கள், அருட்தந்தை வந்த நோக்கத்தைத் தெரிந்து கொண்டார். அவரைச் சந்தித்து 2000 பிராங்ஸ் நிதியைக் கொடுத்தார். மரிய அன்னாள், அருட்தந்தை அவர்களிடம் பிரான்ஸ் நாட்டில் உள்ள இயேசுவின் திரு இருதய பேராலயத்தைப் போலவே இடைக்காட்டூரில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தெரிவித்தார். 

அருட்தந்தை அவர்களும் அக்கோரிக்கையை ஏற்று இயேசுவின் திரு இருதய பேராலயத்தை இடைக்காட்டூரில் கட்டினார்.

இடையூறும் இருதய ஆண்டவரின் தலையீடும்:

இடைக்காட்டூர் வந்து சேர்ந்த அருட்தந்தை  பெர்டினாண்ட் செல், SJ தேவாலய கட்டுமானப் பணியை ஆரம்பித்தார். அப்போது கிராமப் பெரியோர்கள் ஆலயம் கட்டக்கூடாது என்று பெரும் சிக்கலை எழுப்பினார்கள். ஆலயம் கட்டும் இடத்தில் கத்தோலிக்க ஆலயத்திற்கான இடமும், கிராமத்திற்கு சொந்தமான இடமும் அடுத்தடுத்து ஒன்றை ஒன்று ஒட்டியே இருந்தன. 

அதை அடிகளார் தெளிவாக அறியாத நிலையில் கிராமத்திற்கு சொந்தமான சிறிதளவு இடத்தைச் சேர்த்து ஆலயத்தைக் கட்டி விட்டார். அந்த இடத்தில் புதிதாக கட்டப்பட இருக்கும் ஆலயத்தின் சுவர் இருந்தது. உண்மையை அறிந்த அருட்தந்தை தன் தவறுக்காக மன்னிப்பு கேட்டார். இருந்தாலும் பரவாயில்லை தங்கள் நிலத்தின் விலையைச் சொல்லுங்கள், எவ்வளவு தொகை என்றாலும் நான் கொடுத்து விடுகிறேன், ஆலயத்தின் அமைப்பை மாற்ற முடியாததாக உள்ளது என்று கூறினார். 

ஆனால் கிராமவாசிகள் ஏற்றுக் கொள்வதாக இல்லை. அருட்தந்தையிடம் பேசி பலனில்லை என்று உணர்ந்த கிராமவாசிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அருட்தந்தையோ இடைக்கால உத்தரவு வாங்கி ஆலயத்தைக் கட்டிக் கொண்டிருந்தார். ஐந்து ஆண்டுகள் கழிந்த நிலையில், வழக்கறிஞர் கிராம மக்களுக்கே தீர்ப்பு சாதகமாக இருக்கும் ஆகையால் நீங்கள் ஒரு பொய் சொல்ல வேண்டும் என கூறினார். 

இதனை ஏற்றுக் கொள்ளாத அருட்தந்தை நான் திரு இருதய ஆண்டவருக்காக ஆலயம் கட்டுகிறேன். அதனால் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார். இதனைக் கேட்ட வழக்கறிஞர் தாம் இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்தார்

இதனை அறிந்த இந்த வழக்கின் நீதிபதி இவ்வழக்கிற்கு தீர்வு காண மூன்று வழக்கறிஞர்கள் உள்ள குழுவினை அமைத்தார். இக்குழுவின் தலைவருக்கு இடைக்காட்டூர் புறப்படுவதற்கு முதல்நாள் இரவில் தோன்றிய கனவில் அவர் வாழ்வில் ஒரு போதும் கண்டிராத பெரிய புதிய கட்டிடம் ஒன்றை, நூற்றுக்கும் மேற்பட்ட வானதூதர்களான சம்மனசுகள் கட்டிக் கொண்டிருக்கும் காட்சியை கண்டார்.

மறுநாள் காலை அவர் வழக்கறிஞர் குழுவுடன் சென்னையிலிருந்து இடைக்காட்டூருக்குப் புறப்பட்டு வந்தார். ஆலய கட்டிடத்தைப் பார்த்த அவர் வியப்பில் ஆழ்ந்தார். இதனைத் தொடர்ந்து இக்கட்டிடத்தைக் கட்டுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அத்துடன் கிராம மக்களை சந்தித்து தான் கண்ட கனவினை பற்றி விளக்கிக் கூறினார். 

கிராமவாசிகள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு மனதாக இடத்தை கொடுக்கலாம் என முடிவெடுத்தனர். அதன்படி வழக்கு வாபஸ் பெறப்பட்டது. கிராமவாசிகள் ஒத்துழைப்புடன் 1894 ஆம் ஆண்டு ஆலயப்பணி நிறைவுற்றது.

20.06.1993 அன்று ஆலய நூற்றாண்டு விழா சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு எட்வர்ட் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக கொண்டாடப் பட்டது. இவ்வாண்டு முதல் இடைக்காட்டூர் திருத்தலமாக உயர்த்தப்பட்டது.

1992 ஆம் ஆண்டு முதல் திருத்தல புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, இடைக்காட்டூர் மக்களின் ஒத்துழைப்புடன் பணிகள் 15 ஆண்டுகளாக நடந்து வந்தது. அருட்பணி. அருள் ஆனந்த் பணிக்காலத்தில் திருத்தல புனரமைப்புப் பணிகள் நிறைவு பெற்று 07.07.2007 அன்று, சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு J. சூசை மாணிக்கம்,D.D., அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, மதுரை மறைமாவட்ட பேராயர் பீட்டர் பெர்னாண்டோ D D., அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி. ரெமிஜியுஸ் பணிக்காலத்தில் திருத்தலமானது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, 03.01.2020 அன்று ஆயர் மேதகு ஆயர் J. சூசை மாணிக்கம்.D.D., அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

இயேசு சுமந்த திருச்சிலுவையின் ஒரு சிறு பகுதி இத்திருத்தலத்தில் உள்ளது.

பாஸ்கு பெருவிழா:

ஒவ்வொரு வருடமும் புனித வெள்ளியை தொடர்ந்து வருகிற வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களுக்கு பாஸ்கு பெருவிழா சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

ஆலயத்தைக் கட்டிய அருட்பணி. பெர்டினாண்ட் செல், SJ அவர்களின் கல்லறை இடைக்காட்டூரில் உள்ளது.

ஆலயத்தின் சிறப்பம்சங்கள்:

1. இயேசுவின் திரு இருதய பேராலயம் சம்மனசுகளால் கட்டப்பட்டது. அதனால் அருட்தந்தை பெர்டினான்ட் செல், SJ அவர்கள் 153 சம்மனசுகளின் உருவத்தை ஆலயத்தை கட்டிடத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் அமைத்தார்..

2. நாற்பது புனிதர்களின் நினைவுச் சின்னங்கள் (Relics) இந்த ஆலயத்தை மகிமைப்படுத்துகின்றன. இங்குள்ள திரு இருதய ஆண்டவர் சொரூபத்தில் இருதயம் நெஞ்சின் இடப்பக்கம் எல்லா மனிதருக்கும் இருப்பது போலவே அமைந்திருப்பது வரலாற்று சிறப்புமிக்கது.

3. வானைத்தொடும் உயரமும் வண்ண வண்ண திரு உருவங்களும் வார்த்தையில் அடங்காத கலையழகும் கொண்டு வானக வேந்தரின் அரியணையாக இந்த ஆலயம் விளங்குகிறது.

4. பிரான்ஸ் நாட்டில் உள்ள ரீம்ஸ் நகரில் உயர்ந்து நிற்கும் இயேசுவின் திரு இருதய பேராலயத்தைப் போன்ற அமைப்பில் கட்டியெழுப்பப்பட்டது தான் இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் ஆலயம். 

5. நாற்பது புனிதர்களின் நினைவுச் சின்னங்கள் இந்த ஆலயத்தை மகிமைப்படுத்துகின்றன.

6. ஒரே கல்லில் வடித்தெடுக்கப்பட்ட அன்னை மரியாளும் சூசையப்பரும் இணைந்து இயேசுவை தமது தோளில் தூக்கி வைத்திருக்கும் அற்புத திருக் குடும்ப சுரூபம் இவ்வாலயத்தில் உள்ளது.

7. உலக புகழ்பெற்ற சிற்பியான மைக்கில் ஆஞ்சலோவால் வடிக்கப்பட்ட அன்னை சுரூபத்தின் மறுபதிப்பு இங்குள்ளது. இறந்த மகனை தன் மடியில் கிடத்தியிருக்கும் காட்சி காண்போரின் கண்களில் கண்ணீர் வரும் வகையில் அன்னையின் துயரத்தைச் சுரூபமாக வெளிக்காட்டுகிறது.

8. இவ்வாலயத்தைப் போன்ற அமைப்பிலே அமைக்கப்பட்ட திவ்ய நற்கருணை ஆசிர் தரும் கதிர் பாத்திரமானது முதல் வெள்ளி மற்றும் சிறப்பு நாட்களில் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.

9. எந்த ஆலயத்திலும் காண முடியாத பல புனிதர்களின் சுரூபங்கள் இவ்வாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது. இவ்வாலயமானது ஐந்து பீடங்களைக் கொண்டுள்ளது.

10. உலக புகழ்பெற்ற கட்டடக் கலைகளில் ஒன்றான கோதிக் கட்டடக் கலை அமைப்பில் இவ்வாலயம் கட்டப்பட்டுள்ளது.

11. பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மணிகளுள் ஒன்று தற்போது இவ்வாலயத்திலும் உள்ளது.

12. இவ்வாலயத்தின் மகிமையையும் கலையழகினையும் கண்ட தமிழ்நாடு அரசு, இத்திருத்தலத்தை சுற்றுலாத்தலமாக அறிவித்துள்ளது.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

இடைக்காட்டூர் தனிப்பங்காகும் வரை, இங்கு வந்து பணியாற்றிய அருட்பணியாளர்கள்:

அருட்பணி. பெர்ட்ராண்ட், SJ (1838-1841)

அருட்பணி.  மெஷே, SJ (1838-1841)

அருட்பணி. கனோஸ், SJ (1845-1846)

அருட்பணி. பெர்ரின், SJ (1846)

அருட்பணி. அரோஜா, SJ (1846-1865)

1. அருட்பணி. ஹார்லி, SJ  (முதல் பங்குத்தந்தை) (1865)

2. அருட்பணி. லாபோர்ட், SJ

3. அருட்பணி.‌ கார்தியர், SJ

4. அருட்பணி.‌ மாசே, SJ (1877)

5. அருட்பணி.‌ பெர்டினாண்ட் செல்ஸ், SJ (1878)

6. அருட்பணி. மரியதாஸ், SJ (உதவிப் பங்குத்தந்தை) 

7. அருட்பணி.‌ மனுவேல், SJ (1897)

8. அருட்பணி. மரிய ஜேசுநாதர், SJ (1900)

9. அருட்பணி.‌ பிரட், SJ

10. அருட்பணி. மோலேரி, SJ (1904)

11. அருட்பணி. லாசரஸ், SJ (1905)

12. அருட்பணி.‌ என்டர்லின், SJ (1909)

13. அருட்பணி.‌ பிளாஞ்சார்ட், SJ (1910)

14. அருட்பணி. விகோன், SJ

15. அருட்பணி.‌ லாசரஸ், SJ (1911)

16. அருட்பணி.‌ பிளாஞ்சார்ட், SJ (1912)

17. அருட்பணி. ரெஜிஸ், SJ 

18. அருட்பணி. புருதம், SJ (1913)

19. அருட்பணி. ராஜா, SJ (1913)

20. அருட்பணி.‌ கோட்ஸ், SJ

21. அருட்பணி. ரெஜிஸ் அதிசயம், SJ (1915)

22. அருட்பணி.‌ கோர்ட்டிசே, SJ (1918)

23. அருட்பணி. விக்னோர், SJ (1919)

24. அருட்பணி. பைபிளே, SJ (1920)

25. அருட்பணி. பிக்கோ, SJ (1925)

26. அருட்பணி. மரியசூசை, SJ (1926)

27. அருட்பணி. ஜெகநாதர், SJ (1930)

28. அருட்பணி. அல்மேடா, SJ (1931)

29. அருட்பணி. மரியதாஸ், SJ (1932)

30. அருட்பணி.‌ ஜெகநாதர், SJ (1936)

31. அருட்பணி.‌ சுவாமிக்கண்ணு, SJ (1938)

32. அருட்பணி.‌ எம். பாப்பையா, SJ (1942)

33. அருட்பணி. பி. எல். டிலிங்கர், SJ (1946)

34. அருட்பணி. பீட்டர் ராய்,  (1949)

35. அருட்பணி. கே. எஸ். விசுவாசம்,  (1964)

36. அருட்பணி. எம். கூலாஸ், (1968)

37. அருட்பணி. எம்.‌ மத்தாய், SJ (1968)

38. அருட்பணி. தங்கத்துரை, SJ (1972)

39. அருட்பணி. எம். ஜோக்கிம், (1975)

40. அருட்பணி. எம். சந்தியாகு, SJ (1979)

41. அருட்பணி. ஆப்லோ மிராண்டா, SJ (1980)

42. அருட்பணி. முட்டம், SJ (1981)

43. அருட்பணி.‌ அருளப்பா (1986)

44. அருட்பணி. அருளானந்தம் (1988)

45. அருட்பணி. பிரபாகரன் (1997)

46. அருட்பணி. எ. செபஸ்தியான் (1998)

47. அருட்பணி. என். அருள் ஆனந்த் (2003)

48. அருட்பணி. ம. ராஜசேகரன் (2008)

49. அருட்பணி. அ. ஜோசப் லூர்துராஜா (2010)

50. அருட்பணி.‌ சாமிநாதன் (2010)

51. அருட்பணி. ரெமிஜியுஸ் (2015)

52. அருட்பணி.‌ இம்மானுவேல் தாசன் (2020 முதல்....)

இடைக்காட்டூர் திருத்தலம் வந்து மக்கள் பெற்ற அற்புதங்களையும் அதிசயங்களையும் சொல்லி மாளாது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் இத்திருத்தலத்திற்கு வருகின்றனர். இங்கு வருகை தருகின்ற திருப்பயணிகளுக்காக நாள்தோறும் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. 

ஜூன் மாதத்தில் நடைபெறும் திருவிழாவின் போது, ஆயிரக்கணக்கான மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.

இயேசுவின் இருதயமே எங்கும் எரிந்திடும் அருள்மயமே

உந்தன் ஆசியும் அருளும் சேர்த்து வந்தால்

எங்கள் ஆனந்தம் நிலைபெறுமே - 2

இறைவனுக்கிதயம் உண்டு - அந்த

இதயத்தில் இரக்கம் உண்டு - 2 - என்றும்

இரங்கிடும் இறைவன் இருப்பதனால்

இங்கு அனைவர்க்கும் வாழ்வு உண்டு - 2

கடவுளின் கருணை உண்டு அந்த கருணைக்கு உருவம் உண்டு -2

அவர் உருவத்தில் உதித்தேழும் உயிர் அதனால்

எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு

இரவினில் தீபமுண்டு இந்த இல்லத்தில் ஒளியுமுண்டு - 2

எங்கள் இருதய அன்பர் விழித்திருந்தால்

எந்த இரவிலும் காவலுண்டு - 2

இடைக்காட்டூர் திருத்தலம் வாருங்கள்... திருஇருதய ஆண்டவரின் ஆசி பெற்றுச் செல்லுங்கள்...

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. இம்மானுவேல் தாசன் அவர்கள்

புகைப்படங்கள்: அருட்சகோதரர். ஆலன் மற்றும் திரு. ஆன்டனி ராஜ் (மாதா டிவி)