கிறிஸ்து அரசர் ஆலயம்
இடம் : ஈத்தவிளை
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி ராபர்ட் ஜான் கென்னடி.
நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அந்தோணியார் ஆலயம், செம்பருத்திவிளை.
குடும்பங்கள் : 170
அன்பியங்கள் : 7
ஞாயிறு திருப்பலி : காலை 09.30
மணிக்கு.
வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு.
திருவிழா : நவம்பர் மாதத்தில் கிறிஸ்து அரசர் விழாவை, நிறைவு நாளாகக் கொண்டு பத்து நாட்கள்.
1914 ம் ஆண்டு அருட்பணி தனிஸ்லாஸ் பணிக்காலத்தில் திரு மாதவடியான் என்பவரது முயற்சியால் ஒரு கல் குருசு அமைக்கப்பட்டது. அருட்பணி பயஸ் மோரிஸ் அவர்கள் முயற்சியால் பீடமாக உயர்த்தப் பட்டு தூய ஜார்ஜியார் சொரூபம் வைக்கப்பட்டு அருட்பணி தர்மநாதன் அவர்களால் திருப்பலி நிறைவேற்றப் பட்டது. 24-10-1963 அன்று அருட்பணி ரபேல் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நிறுவப்பட்டு கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டது. பங்குமக்களின் உழைப்பு மற்றும் நன்கொடைகளால் பணிகள் நிறைவு பெற்று 1965 ம் ஆண்டு அருட்பணி ஸ்டீபன் அவர்கள் பணிக்காலத்தில் மேதகு ஆயர் ஆஞ்ஞிசுவாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
அருட்பணி ஜான் ஜோசப் பணிக்காலத்தில் 17-04-1988 ல் பங்குப் பேரவை அமைக்கப் பட்டது. தற்போதைய புதிய ஆலயமானது அருட்பணி மரிய சூசை வின்சென்ட் பணிக்காலத்தில் பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற்றும் நன்கொடைகளால் கட்டி முடிக்கப்பட்டு மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 2012 ம் ஆண்டு அருட்பணி ஒய்சிலின் சேவியர் பணிக்காலத்தில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. செம்பருத்திவிளை பங்கின் கிளைப் பங்காக ஈத்தவிளை கிறிஸ்து அரசர் ஆலயம் பல்வேறு நிலைகளிலும் வளர்ந்து வருவது சிறப்புக்குரியது.