136 புனித அருளானந்தர் ஆலயம், அருளானந்தபுரம்


புனித அருளானந்தர் ஆலயம்

இடம் : அருளானந்தபுரம்.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி பென்சர் சேவியர்.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித ஆரோபண அன்னை ஆலயம், மாத்திரவிளை.

குடும்பங்கள் : 160
அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு.

திருவிழா : பெப்ரவரி 4 ம் தேதியை மையமாகக் கொண்ட பத்து நாட்கள்.

அருளானந்தபுரம் வரலாறு :

முளகுமூடு குளச்சல் சாலையில், பூக்கடைக்கும் திக்கணங்கோட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் அருளானந்தபுரம் அமைந்துள்ளது.

கி.பி 1958 ஆம் ஆண்டு முளகுமூடு அருட்சகோதரியர் இல்லத்தைச் சேர்ந்த அருட்சகோதரி ஜோனபாத் அவர்களால் ஓலை வேய்ந்த இடத்தில் மறைக்கல்வி கற்பிக்க அமைக்கப்பட்ட இடம் புனித அருளானந்தர் ஆலயமாயிற்று. தொடர்ந்து மாத்திரவிளை பங்கின் கிளைப் பங்காக ஆனது.

பின்னர் அருட்பணி S. T. மத்தியாஸ் அடிகளாரால் ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 1980 ஆம் ஆண்டு ஆயர் மேதகு ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

ஆலயத்தின் அடித்தளத்தில் ஓரியூர்-ல் வேதசாட்சியான புனித அருளானந்தர் இரத்தம் சிந்திய மண் புதைக்கப் பட்டுள்ளது.

இவ்வாலயமானது 2001 ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது.