புனித யோசேப்பு ஆலயம்
இடம் : மலமாரி
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
பங்குத்தந்தை : அருட்பணி சுஜின்
நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய லூர்து அன்னை ஆலயம், லூர்துகிரி.
குடும்பங்கள் : 47
அன்பியங்கள் : 3
ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு
திருவிழா : மே மாதத்தில்.
லூர்துகிரி தூய லூர்து அன்னை ஆலயத்தின் கிளைப் பங்காகிய, பிலாவிளை தூய ஜெபமாலை அன்னை ஆலயத்தின் ஓர் அன்பியமாக செயல்பட்டு வந்த மலமாரி ஊர் மக்களுக்கு, இங்கிருந்து பிலாவிளை ஆலயத்திற்கு செல்ல நெடுந்தூரம் செல்ல வேண்டியிருந்ததால், நான்கு ஆண்டுகளுக்கு முன், மலமாரியில் 25 சென்ட் நிலம் வாங்கப்பட்டு சிறு ஆலயம் எழுப்பப் பட்டு புனித யோசேப்புவை பாதுகாவலராகக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது இவ்வாலயத்தை முழுமையாக புதிதாக கட்டியெழுப்ப அரசின் அனுமதி கோரப்பட்டு, அனுமதி கிடைக்கும் தருவாயில் உள்ளது.
குழித்துறை மறை மாவட்டத்தில் கடைசியாக தோன்றிய கிளைப்பங்குகளில் மிகவும் சிறிய ஆலயமாகிய மலமாரி ஆலயத்திற்கு புதிய ஆலயப் பணிகள் துவங்க அதிக நிதிகள் தேவைப்படும். 47 குடும்பங்களைக் கொண்ட இம்மக்களால் அது சற்று சிரமமான காரியம். ஆகவே ஆலயப்பணிகளை துவங்குகின்ற வேளையில் நம்மால் இயன்ற அளவு உதவிடவும், பணிகள் தடையின்றி நல்ல முறையில் நடந்திடவும் இறைவனிடம் ஜெபிக்க இப் பங்கு மக்கள் மற்றும் பங்குத்தந்தை சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
பங்குத்தந்தையின் மின்னஞ்சல் முகவரி sujindennis@gmail.com
இவ் ஆலயத்திற்கு அண்டுகோடு பகுதியிலிருந்து இடது புறமாக செல்கின்ற சாலை வழியாகவும், அல்லது மாலைக்கோடு பகுதி வழியாகவும் வரலாம்.