695 புனித செபஸ்தியார் ஆலயம், நகலூர்

      

புனித செபஸ்தியார் ஆலயம் 

இடம் : நகலூர்

மாவட்டம்: ஈரோடு 

மறைமாவட்டம்: உதகை 

மறைவட்டம்: அந்தியூர் 

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித வனத்து சின்னப்பர் ஆலயம், கரும்பாறை

2. புனித அந்தோனியார் ஆலயம், கரடிக்கல்

3. புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலயம், நகலூர் பிரிவு

பங்குத்தந்தை: அருட்பணி. ஜோசப் அமலதாஸ் 

குடும்பங்கள்: 420

அன்பியங்கள்: 15

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணி திருப்பலி (புனித வனத்து சின்னப்பர் ஆலயம்)

காலை 08.30 மணி திருப்பலி (பங்கு ஆலயம்)

திங்கள், செவ்வாய், புதன்: காலை 06.30 மணிக்கு திருப்பலி

வியாழன் மாலை 06.30 மணிக்கு நற்கருணை ஆலயத்தில் குழந்தை இயேசு நவநாள் திருப்பலி மற்றும் ஆராதனை

வெள்ளி மாலை 06.30 மணிக்கு திருப்பலி

சனி மாலை 06.30 மணிக்கு சகாய மாதா நவநாள் திருப்பலி

மாதத்தின் 2-ம் வெள்ளி மாலை 06.30 மணிக்கு புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் நவநாள் திருப்பலி, ஆராதனை, தேர்பவனி

மாதத்தின் 2-ம் சனி மாலை 06.30 மணி நகலூர் பிரிவு புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலயத்தில் திருப்பலி, ஆராதனை

மாதத்தின் முதல் செவ்வாய் மாலை 06.30 மணிக்கு கரடிக்கல் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி, ஆராதனை மற்றும் தேர்பவனி

திருவிழா: ஜனவரி மாதம் நான்காம் ஞாயிறு.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. ஜார்ஜ் டேவிட்

2. அருட்பணி. அந்தோணிசாமி

3. அருட்பணி. ஆல்பர்ட் செல்வராஜ்

4. அருட்பணி.‌ பெலிக்ஸ்

5. அருட்பணி. செல்வநாயகம், OFM Cap

6. அருட்சகோதரி. பவுலின்

7. அருட்சகோதரி. பிலோ

8. அருட்சகோதரி.‌ அல்போன்ஸ் லிகோரி

9. அருட்சகோதரி. லூர்துமேரி

10. அருட்சகோதரி. சின்னம்மாள்

11. அருட்சகோதரி. ஜெனிட்டா

12. அருட்சகோதரி.‌ நோயல் லில்லி புஷ்பம்

13. அருட்சகோதரி. ஆரோக்கிய மேரி

14. அருட்சகோதரி. இசபெல்லா

15. அருட்சகோதரி. மதலேன் மரியா

16. அருட்சகோதரி. சகாய ரபேக்கா

17. அருட்சகோதரி. தேவமணி

18. அருட்சகோதரி. புஷ்பராக்கினி

19. அருட்சகோதரி. அனு நிஷா

20. அருட்சகோதரி. டெய்சி மேரி

21. அருட்சகோதரி. கர்லின் மன்றோ

22. அருட்சகோதரி. மரிய பிரசன்னா

வழித்தடம்:

ஈரோடு -அந்தியூர் -நகலூர்.

சத்தியமங்கலம் -அத்தாணி -நகலூர் பிரிவு -நகலூர்

கோபிசெட்டிபாளையம் -அத்தாணி -நகலூர் பிரிவு -நகலூர்

Location map: 

St. Sebastian's Church

Nagalur, Anthiyur, Tamil Nadu 638502

https://maps.app.goo.gl/zkZHePF4tzni73Jf7

வரலாறு:

இந்திய கத்தோலிக்க இயக்கம் 2001 -ன் சான்றுபடி சத்தியமங்கலம் மற்றும் அந்தியூர் ஆகிய பகுதிகள் 1623 ஆம் ஆண்டு அருள்தந்தை. இராபர்ட் தே நொபிலி  மற்றும் மதுரையின் கீழ் இயங்கி வந்த போர்ச்சுக்கீசியர் கிறிஸ்துவ அமைப்பால், கிறிஸ்துவ விசுவாசம் கொங்கு மண்டலத்தில் விதைக்கப்பட்ட 15 கிராமங்களில் நகலூரும் அடங்கும். 

அருள்தந்தை. C. K.சுவாமி அவர்களின் சான்றுபடி 1650 முதல் 1670-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலம் வரை அதிகப்படியான கிறிஸ்தவ விசுவாசம் நகலூர் பகுதியில் விதைக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக கோழிக்கோடு செல்லும் தருவாயில் புனித அருளானந்தர், சத்தியமங்கலத்தில் ஓய்வெடுத்த பின்னர் அவரது பணித்தளமாகிய 'கொளை' செல்லும் வழியில் நகலூரில் 1674 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதியில் அவரின் திருப்பாதம் பதிந்து இம்மண் புனிதம் அடைந்தது. 

1779 -ஆம் ஆண்டில் M.E.P சபை குருக்கள் இப்பகுதியில் மறைப்பணியாற்றி வந்தனர். 

1849 -ஆம் ஆண்டு நகலூர்  தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.

இந்த காலக்கட்டத்தில் பணிபுரிந்த M.E.P சபை குருக்களில் அருள்தந்தை. பார்த்தோன் அவர்களும் ஒருவர். இவர் கொடிவேரி மற்றும் நகலூர் பங்குகளை கவனித்து வந்தார்.

1861 -ஆம் ஆண்டு அருள்தந்தை.‌ பார்த்தோன் அடிகளார் பங்குத்தந்தையாக பணிபுரிந்த காலத்தில் பங்குமக்களின் நிதியுதவியுடன் ஆலயம் கட்டப்பட்டது. அந்த காலகட்டத்தில் கொள்ளை நோய் இப்பகுதியை தாக்கவே, பலர் மரணமடைந்தனர். 

நகலூர் மக்கள் இறைவன் மீது நம்பிக்கை கொண்டு பங்கின் நான்கு திசைகளிலும் சிலுவைமரம் அமைத்து புனித செபஸ்தியாரிடம் வேண்டியுள்ளனர். சில நாட்களிலே நோயிலிருந்து விடுபட்ட மக்கள், புனித செபஸ்தியாரை பங்கின் பாதுகாவலராய் கொண்டு, இறைவனை வழிபட்டனர். அதற்கு சாட்சியாக சிலுவைமரம் இன்றும் ஆலயத்தின் எதிரே காட்சியளிக்கின்றது.

1888 -ஆம் ஆண்டு முதல் பங்கில் திருவருட்சாதனங்கள் வழங்கப்பட்டதன் சாட்சியங்கள் இன்றும் பாதுகாப்பாய் உள்ளன.

1920 -ஆம் ஆண்டு ஆலயத்திலேயே தொடக்கக் கல்வியானது பயிற்றுவிக்கப்பட்டது. 

பழைய ஆலயம் அகற்றப்படாமலேயே 1924 ஆம் ஆண்டு அருள்தந்தை. தோமினிக் அடிகளார் புதிய ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டினார்.‌ வீட்டுக்கு ஒருவர் தினமும் வந்து ஆலயப்பணி செய்து, கட்டுமானப்பணிகள் நிறைவு பெற்று  12.09.1925 அன்று மேதகு ஆயர் அகுஸ்தீன் ரூவா (மைசூரு மறைமாவட்ட ஆயர்) அவர்களால் புனிதம் செய்யப்பட்டு புனித செபஸ்தியார் மற்றும் புனித லூர்து அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

புனித செபஸ்தியார், புனித லூர்து அன்னை மற்றும் திருஇருதய ஆண்டவர் சுரூபங்கள் இத்தாலி நாட்டிலிருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு ஆலயத்தில் வைக்கப்பட்டு, இன்றுவரை நாடி வருகின்ற ஏராளம் அன்பர்களுக்கும் அருள்வரங்களை நல்கி வரும் ஆலயமாகத் திகழ்கின்றது.

முன்னாள் கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு அம்புரோஸ் ஆண்டகை 1925 ஆம் ஆண்டு இவ்வாலயத்தில் திருமுழுக்குப் பெற்றார். அதன் நினைவாக கல்வெட்டு பதியப்பட்டுள்ளது.

1979 -ஆம் ஆண்டு முதல் துணைப் பங்கான புனித வனத்து சின்னப்பர் ஆலயம் சிறிய அளவில் ஏற்படுத்தப்பட்டது.

1989 -ஆம் ஆண்டு நகலூர் பிரிவில் உள்ள தூய ஆரோக்கிய அன்னை கெபி கட்டப்பட்டது. உதகை மறைமாவட்ட பொன்விழா நினைவாக 2000 -ஆம் ஆண்டில் ஆரோக்கிய அன்னை கெபி கட்டப்பட்டது. 

அருள்தந்தை. பார்த்தோன் அடிகளாரால் கட்டப்பட்ட ஆலயம் பழுதடைந்தபோது 2002 -ஆம் ஆண்டில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, குழந்தை இயேசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

அருள்தந்தை. ஜோசப் இருதயராஜ், SDB அவர்கள் ஒருவருட பணிக்காய் நகலூர் வந்த போது 2003 -ல் அன்பியங்கள் ஏற்படுத்தப்பட்டது. 

கரடிக்கல் புனித அந்தோனியார் ஆலயம் 2008 -ஆம் ஆண்டில் கிளைப்பங்காக துவக்கப்பட்டது.

2009 -ஆம் ஆண்டு அப்போதைய பங்குத்தந்தை அருள்தந்தை. ரொசாரியோ அவர்களின் முயற்சியினால் பாப்புலர் மிஷன் தியானம் நடைபெற்றது. கிறிஸ்தவ விசுவாசம் இப்பங்கில் மேலும் தழைத்தோங்க இத்தியானம் பேருதவியாக இருந்தது. மேலும் தற்போதுள்ள பீடப்பகுதி அருள்தந்தை. ரொசாரியோ அவர்களால் புதுப்பிக்கப் பட்டது.

2011 -ஆம் ஆண்டில் குழந்தை இயேசு ஆலயம் நற்கருணை ஆலயமாக அர்ச்சிக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு நற்கருணை ஆலயத்தின் பாதையில் புனிதர்களின் கெபி அமைக்கப்பட்டது.

உதகை மறைமாவட்ட வைரவிழா நினைவாக, 2015 -ஆம் ஆண்டு, புனித மிக்கேல் அதிதூதர் கெபி நிறுவப்பட்டு மேதகு ஆயர் அமல்ராஜ் அவர்களால் புனிதம் செய்யப்பட்டது.

எண்ணற்ற இறைமக்கள் தவக்காலத்தில் இவ்வாலயம் வருவதைக் கண்டு, 2017 -ஆம் ஆண்டில் இயேசுவின் சிலுவைப்பாடுகளின் 14 நிலைகளும் அமைக்கப்பட்டு, மேதகு ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 

தற்போது இந்தியாவிலேயே முதன் முறையாக பாடகற்குழுவின் பாதுகாவலியாம் புனித செசிலியா -வின் அற்புத கெபி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

னித ஆரோக்கிய அன்னை சிற்றாலயம், நகலூர் பிரிவு:

அருள்தந்தை‌. ஜார்ஜ் இஞ்சிபரம்பில் அவர்கள், கேரளாவில் புனித அல்போன்ஸா நினைவிடத்தில் அமைந்துள்ள ஆலய அமைப்பைப் போன்று நகலூர் பிரிவில் 1989 -ஆம் ஆண்டு, ஜெபமாலையை குறிக்கும் வண்ணமாக 53 அடி உயர கோபுர புனித ஆரோக்கிய அன்னை கெபி கட்டினார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் திருவிழா சிறப்பாக நடைபெறும். 

2005 -ஆம் ஆண்டு அருள்தந்தை. M. C. மைக்கேல் மேனாம்பரம்பில் அவர்கள் மக்களின் ஆன்மீக நலனுக்காக கெபியுடன் இணைந்த சிற்றாலயத்தை ஏற்படுத்தி, கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

ஆலய கோபுரம் பழுதடைந்ததால்,  தற்போதைய பங்குத்தந்தை அருள்தந்தை. ஜோசப் அமலதாஸ் அவர்களால் 2019 -ஆம் ஆண்டு கோபுரம் சீரமைக்கப்பட்டு உதகை மறைமாவட்ட ஆயர் மேதகு  அமல்ராஜ் அவர்களால் அர்ச்சித்து புனிதம் செய்யப்பட்டது.

பங்கின் சபைகள்/ இயக்கங்கள்:

1. மரியாயின் சேனை

2. இளந்தளிர் இயக்கம்

3. இளையோர் இயக்கம்

4. பீடப்பணியாளர்கள் குழு

5. பாடகற்குழு

6. பெண்கள் பணிக்குழு

7. பங்குப்பேரவை

8. திருவழிபாட்டுக்குழு

9. மறைக்கல்வி

10. நிதிக்குழு

பங்கில் உள்ள அருட்சகோதரிகள் இல்லம்:

புனித சூசையப்பர் சகோதரிகள் இல்லம்

பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள்:

1. புனித செபஸ்தியார் RC தொடக்கப்பள்ளி

2. புனித செபஸ்தியார் உயர்நிலை பள்ளி. (தமிழ் வழி )

3. St. Sebastian's High school. (English medium)

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1640 - மதுரை மிஷனரி குருக்களின் வருகை

1779- M.E.P குருக்களின் வருகை

1871- அருட்திரு. சூசை பார்த்தோன்

1881- அருட்திரு. S. பைனாஸ்

1883- அருட்திரு. ரிச்சர்ட்

1885- அருட்திரு. கர்பினோம்

1888-1890 அருட்திரு. பார்த்தோன்

1890-1891 அருட்திரு. லவ்யேர்

1891-1893 அருட்திரு. லபெர்காய்ஸ்

1893-1897 அருட்திரு. சேவ் விசில்லார்ட்

1897-1901 அருட்திரு. ரோக்கஸ் பெரின்

1901-1902 அருட்திரு. பெடிட்

1902-1906 அருட்திரு. கியூபால்

1906-1914 அருட்திரு. சாபத்

1914-1918 அருட்திரு. மரியானுஸ்

1918-1927 அருட்திரு. தோமினிக்கு

1927-1932 அருட்திரு. பால்

1932-1938 அருட்திரு. அம்புரோஸ்

1938-1940 அருட்திரு. சின்னச்சாமி

1940-1941 அருட்திரு. லெக்ரான்ட்

மே1941-அக்டோபர்1941 அருட்திரு. கௌவுச்

1941-1942 அருட்திரு. ரெனால்ட்

1942-1943 அருட்திரு. அன்னச்சாமி

1943-1945 அருட்திரு. உத்திரியம்

1945-1947 அருட்திரு. பென்டிமன்ட்

1947-1948 அருட்திரு. அரக்கால்

1948-1949 அருட்திரு. ரீகன்ட்

1949-1950 அருட்திரு. புயொலோ

1950-1951 அருட்திரு. ஆபிரகாம் குட்டிலாம்பல்

1951 அருட்திரு. டிசோஷா

1951-1957 அருட்திரு. ஜோசப் கலபார்கல்

1957-1958 அருட்திரு.டெசட்

1958-1959 அருட்திரு. C. A. ஆண்டனி

1959-1964 அருட்திரு. ஜோசப் கடாம்பள்ளி

1964-1966 அருட்திரு. R. J. அமல்ராஜ்

1966-1970 அருட்திரு. J. F. ஸ்டீபன

1970-1974 அருட்திரு. தாமஸ் தக்கபிரா

1974-1976 அருட்திரு. ஆபிரகாம் குட்டிலாம்பல்

1976-1989 அருட்திரு. ஜார்ஜ் இஞ்சிபெரம்பில்

1987-1988 ஆம் ஆண்டு உதகை ஆயர் மேதகு. அமல்ராஜ் ஆண்டகை அவர்கள்  இப்பங்கில் துணை பங்குத்தந்தையாக பணியாற்றினார்

1989-1992 அருட்திரு. குழந்தை ராஜன்

1992-1996 அருட்திரு.‌ ஆசீர்வாதம்

1996-1998 அருட்திரு.‌ ஸ்டீபன்

1998-2000 அருட்திரு.‌ ராஜகுமாரன்

2000-2007 அருட்திரு.‌ M. C. மைக்கேல்

2007-2011 அருட்திரு. ரொசாரியோ

2011-2016 அருட்திரு. சார்லஸ் பாபு

2016 முதல் அருட்திரு.‌ ஜோசப் அமலதாஸ்

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்திரு. ஜோசப் அமலதாஸ்

தகவல்கள் சேகரிப்பில் உதவி: பங்கு ஆலய இளையோர்