620 புனித இஞ்ஞாசியார் ஆலயம், இஞ்ஞாசியார்புரம்

   

புனித இஞ்ஞாசியார் ஆலயம் 

இடம் : இஞ்ஞாசியார்புரம், தூத்துக்குடி -628002

மாவட்டம் : தூத்துக்குடி 

மறைமாவட்டம் : தூத்துக்குடி 

மறைவட்டம் : தூத்துக்குடி 

நிலை : பங்குத்தளம் 

பங்குத்தந்தை : அருட்பணி. சேவியர் அருள்ராஜ்

குடும்பங்கள் : 950

வழிபாட்டு நேரங்கள் : 

ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணி 07.15 மணி மாலை 05.15 மணி

நாள்தோறும் திருப்பலி காலை 06.00 மணி

திருவிழா : ஜூலை மாதத்தில் 

Location map : St. Ignatius Church

Kandhasamy Puram, Thoothukudi, Tamil Nadu 628002

https://maps.app.goo.gl/Mxz7aY1Yh2wW61An7

வரலாறு :

கி.பி 1929 -1930 காலகட்டத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட முதல் ஆயர் மேதகு Dr. பிரான்சிஸ் திபூர்சியுஸ் ரோச், SJ அவர்கள் ஏழை மாணவர்களின் கல்விக்காக புனித இஞ்ஞாசியார் பள்ளிக்கூடத்தை இஞ்ஞாசியார்புரத்தில் துவங்கினார். 

பின்னர் ஒரு சிறு ஆலயம் எழுப்பப்பட்டு புனித இஞ்ஞாசியாருக்கு அர்ப்பணிக்கப் பட்டது.  புனித இஞ்ஞாசியாரின் பாதுகாவலில் இவ்வூர் "இஞ்ஞாசியர்புரம்" என ஆனது. தொடர்ந்து தூத்துக்குடி திருஇருதய ஆண்டவர் கதீட்ரல் பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது.

மேதகு ஆயர் தாமஸ் பெர்னாண்டோ அவர்களால் இஞ்ஞாசியார்புரம் 1964  ம் ஆண்டு தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. T. சவேரியார்புரம், சிலுவைபட்டி, அலங்காரதட்டு, இராஜபாளையம் ஆகியன இஞ்ஞாசியார்புரத்தின் கிளைப் பங்காக ஆயின. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. ஜோப் டிரோஸ் அவர்கள் பணிப் பொறுப்பேற்றார். 

1970  -1974 காலகட்டத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த பெரிய ஆலயம் கட்டப்பட்டு, மேதகு ஆயர் M. அம்புரோஸ் அவர்களால் 19.06.1974 அன்று அர்ச்சிக்கப் பட்டது. 

மேலும் இதே  காலகட்டத்தில் (1970 -1974) புனித லூர்து மாதா கெபி ஆலயத்தின் தென்பகுதியிலும், வேளாங்கண்ணி மாதா கெபி இஞ்ஞாசியார்புரம் சந்திப்பிலும் (junction) கட்டப்பட்டு புனிதப் படுத்தப் பட்டது. 

1984 ஆம் ஆண்டு இஞ்ஞாசியார்புரத்திலிருந்து தாளமுத்துநகர் பங்கு உருவானது. 2001 ஆம் ஆண்டில் இஞ்ஞாசியார்புரத்தின் சில பகுதிகளை பிரித்து ஸ்டேட் பாங்க் காலனி (State Bank Colony) பங்கு உருவானது. 

2009-2012 காலகட்டத்தில் ஆலய மண்டபம் கட்டப்பட்டு, ஆலயத்தின் பக்கவாட்டில் இருபுறமும் புதிதாக கட்டப்பட்டதுடன், பலிபீடமும் புதுப்பிக்கப்பட்டது.

பங்கில் உள்ள கெபிகள் :

புனித லூர்து மாதா கெபி 

அன்னை வேளாங்கண்ணி கெபி. 

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி. ஜோப் டிரோஸ் (1964-1967)

2. அருட்பணி. கபிரியேல் (1967-1969)

3. அருட்பணி. பங்கிராஸ் M. ராஜா (1969-1970)

4. அருட்பணி. அந்தோணிசாமி (1970-1974)

5. அருட்பணி. ஆல்வின் (1974-1975)

6. அருட்பணி. C. சேவியர் (1975-1979)

7. அருட்பணி. அந்தோணிபிச்சை (1979-1981)

8. அருட்பணி. ஜோசப் பென்சிகர் (1981-1983)

9. அருட்பணி. திபூசியஸ் (1983-1984)

10. அருட்பணி. சிலுவை இஞ்ஞாசி (1984-1989)

11. அருட்பணி. குரூஸ் ஆன்றனி (1989-1992)

12. அருட்பணி. ஜோசப் சேவியர் (1992-1997)

13. அருட்பணி. பென்சன் (1997-2002)

14. அருட்பணி. M. தாமஸ் (2002-2007)

15. அருட்பணி. சேவியர் S. மரியான் (2007-2012)

16. அருட்பணி. சகாயம் S. M. (2012-2014)

17. அருட்பணி. ஆன்றனிதாஸ் (2014-2019)

18. அருட்பணி. சேவியர் அருள்ராஜ் (2019 முதல் தற்போது..)

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. சேவியர் அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலில், தூத்துக்குடி மறைமாவட்ட இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.