714 அன்னை வேளாங்கண்ணி ஆலயம், ஒட்டன்சத்திரம்

   

அன்னை வேளாங்கண்ணி ஆலயம்

இடம் : ஒட்டன்சத்திரம் 

மாவட்டம்: திண்டுக்கல்

மறைமாவட்டம்: திண்டுக்கல்

மறைவட்டம்: திண்டுக்கல். 

கிளைப்பங்குகள்:

1. புனித சவேரியார் சிற்றாலயம், இடையகோட்டை

2. தூய ஆரோக்கிய அன்னை சிற்றாலயம், தா. புதுக்கோட்டை 

3. புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயம், வெள்ளியன் வலசு 

4. வீரலப்பட்டி

பங்குத்தந்தை : அருள்பணி.‌ S. அகஸ்டின் ஜேக்கப்

Mob: +91 98656 95812

குடும்பங்கள் : 240

அன்பியங்கள் : 5 

ஞாயிறு திருப்பலி : காலை 08:00 மணி

வார நாட்களில் திருப்பலி : செவ்வாய், வெள்ளி மாலை 06:30 மணி

சனிக்கிழமை மாலை 06 30 மணிக்கு புனித ஆரோக்கிய அன்னையின் நவநாள் திருப்பலி, அன்னையின் தேர்பவனி, நற்கருணை ஆசீர், குணமளிக்கும் வழிபாடு, எண்ணெய் பூசுதல்

திருவிழா: ஆகஸ்ட் 31-ம் தேதி கொடியேற்றம், செப்டம்பர் 08-ம் தேதி தேர்பவனி, பெருவிழா திருப்பலி, செப்டம்பர் 09-ம் தேதி கொடியிறக்கம்

வழித்தடம் :

திண்டுக்கல் -பழனி வழித்தடத்தில் ஒட்டன்சத்திரம் அமைந்துள்ளது.

ஆலய வரலாறு :

விவசாயத்தை முக்கியத் தொழிலாக கொண்ட மக்கள் வாழும் பகுதி தான் திண்டுக்கல் மாவட்டத்தின், ஒட்டன்சத்திரம் என்னும் அழகிய ஊர். ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் உப்பிலியபுரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டதாக அறியமுடிகிறது. முந்தைய வருவாய் ஆவணங்கள், நிலம் வர்த்தக ஆவணங்கள் (கிரைய பத்திரம்) போன்றவற்றில் உப்பிலியபுரம் என்ற பெயரை காணமுடிகிறது.

இங்கு தமிழகத்திலேயே கோயம்பேடுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகிறது. மேலும் காய்கறி சந்தையைப் போன்றே தயிர், வெண்ணெய் -க்கு (பாலில் இருந்து பிரித்தெடுக்கும் வெண்ணெய்) புகழ் பெற்ற ஊர். இவைகளுக்காக சுமார் 600 கடைகள் உள்ள மிகப்பெரிய சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தயிர், வெண்ணெய் அனுப்பப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒட்டன்சத்திரம் ஊரில் அமைந்துள்ள வேளாங்கண்ணி மாதா ஆலய வரலாற்றைக் காண்போம்....

திருச்சி மறைமாவட்டம் பழனி தூய மிக்கேல் அதிதூதர் பங்கின் ஒரு பகுதியாக ஒட்டன்சத்திரம் செயல்பட்டு வந்தது. அப்போது சிறிய கெபி ஆலயம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. 

1948 ஆம் ஆண்டு ஒட்டன்சத்திரம் பகுதியில் ஆர்.சி லயோலா ஆரம்பப் பள்ளியும், விருப்பாச்சி ஊரில் நடுநிலைப் பள்ளியும் அருள்தந்தை.‌ லூர்து ராஜா அவர்களால் துவங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பள்ளியில் பணியாற்றி வந்த கத்தோலிக்க ஆசிரியர்கள் சிலர் இப்பகுதியில் குடியேறத் தொடங்கினர். இவர்களின் ஆன்மீகத் தேவைக்காக  02.08.1964 அன்று முதல் அருள்தந்தை.‌ சூசை ராஜ் அவர்களால் திருப்பலி நிறைவேற்றும் வழக்கம் உருவானது. காலப்போக்கில் பழனி பங்கின் பங்குத்தந்தை -யர்களால் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. தொடர்ந்து பணியின் நிமித்தமாக பலர் ஒட்டன்சத்திரம் பகுதியில் குடியேறத் தொடங்கினர்.

இவ்வாறு இறைமக்களின் எண்ணிக்கை உயர்ந்த பின்னர், ஞான காரியங்களுக்காக பழனி பங்கிற்கு சென்று வரும் நிலையில் இருந்ததால், ஒட்டன்சத்திரம் பகுதியில் வாழ்ந்த கத்தோலிக்க குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பு செய்யப்பட்டு, தனிப் பங்காக மாற்ற பங்குத்தந்தையர்களால் மறைமாவட்டத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அருள்பணி.‌ K. தேவராஜ் அடிகளார் அவர்களால் பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது.

இதன் பயனாக 31.07.1991 அன்று மேதகு ஆயர் S. லாரன்ஸ் கபிரியேல் ஆண்டகை அவர்களால் ஒட்டன்சத்திரம் தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. ஜேம்ஸ் செல்வநாதன் அவர்கள் பணிப் பொறுப்பேற்று சிறப்புற வழிநடத்தி வந்தார். 

பழைய ஆலயத்தில் இடவசதி இல்லாததால், அதனை அகற்றிவிட்டு புதிய ஆலயத்திற்கு 09.05.1993 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 27.11.1994 அன்று ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.

அருள்பணி. அகஸ்டின் ஜேக்கப் பணிக்காலத்தில் புதிய ஆலய மணி வைக்கப்பட்டு 07.08.2021 அன்று மறைமாவட்ட முதன்மைக் குரு அருள்பணி.‌ P. பீட்டர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

புதுமைகள்:

தாராபுரம், பொள்ளாச்சி, அரவக்குறிச்சி, கோவை போன்ற பகுதிகளைச் சேர்ந்த புற்றுநோய், கிட்னி, தொண்டைவலி, இதயநோய் என பல்வேறு நோய்கள் நீங்கிய மக்கள் சாட்சியம் பகிர்ந்துள்ளனர். 

பிற சமயத்தைச் சார்ந்த பல்வேறு மக்கள் ஆலயம் வந்து வேண்டுதல் செய்து, தங்களது வேண்டுதல் நிறைவேறியதால் மாதாவிற்கு புடவை காணிக்கை கொடுத்து நன்றி செலுத்தி வருகின்றனர். 

மேலும் செப்டம்பர் மாதம் 08-ம் தேதி மாலையில் தாராபுரம் CSI சபை ஆலயத்திலிருந்து துவங்கி நடைபெறும் தேர்பவனியிலும், ஏராளமான பிற சமய மற்றும் சபை மக்கள் பங்கேற்று திருவிழாவை ஒற்றுமையாக கொண்டாடி வருவது தனிச் சிறப்பு.

பங்கில் உள்ள சபைகள் இயக்கங்கள்:

1. பங்குப்பேரவை

2. மரியாயின் சேனை

3. புனித வின்சென்ட் தே பவுல் சபை

4. பீடச்சிறார் 

5. பாடகற்குழு

6. திருவழிபாட்டுக்குழு

7. மறைக்கல்வி

பங்கில் கெபிகள்:

வேளாங்கண்ணி மாதா கெபி

கொடிமர மாதா கெபி

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருள்பணி.‌ S. ஜேம்ஸ் செல்வநாதன் (1991-1996)

2. அருள்பணி.‌ M. ஜான் பீட்டர் (1996-2003)

3. அருள்பணி.‌ R. அத்தனாஸ் (2003-2008)

4. அருள்பணி.‌ சே. அ. சேசுராசு (2008-2013)

5. அருள்பணி.‌ V. டேவிட் ராஜ் (2013-2018)

6. அருள்பணி.‌ S. அகஸ்டின் ஜேக்கப் (2018 முதல் தற்போது வரை..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:

பங்குத்தந்தை அருட்பணி. S. அகஸ்டின் ஜேக்கப்