481 புனித மங்கள மாதா ஆலயம், மங்களபுரம்


புனித மங்கள மாதா ஆலயம்

இடம் : மங்களபுரம், மங்களபுரம் அஞ்சல், இராசிபுரம் தாலுக்கா, 636202.

மாவட்டம் : சேலம்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : ஆத்தூர்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், திருமனூர்

பங்குத்தந்தை : அருட்பணி. சார்லஸ்

குடும்பங்கள் : 40
அன்பியங்கள் : 2

ஞாயிறு திருப்பலி காலை 08.00 மணிக்கு.

திருவிழா : மே மாதம் 24,25,26 ஆகிய மூன்று நாட்கள்.

வழித்தடம் : திருமனூரிலிருந்து இராசிபுரம் வழியாக 8கி.மீ தொலைவில் மங்களபுரம் உள்ளது.

வரலாறு

சேலம் மறைமாவட்டத்தில் மங்கள மாதாவுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஒரே ஆலயம் என்ற பெருமை வாய்ந்தது, மங்களபுரம் மங்கள மாதா ஆலயம்.

திருமனூர் பங்கின் கிளைப்பங்காக மங்களபுரத்தில் வீற்றிருக்கும் மங்கள மாதா ஆலயமானது, 50 ஆண்டுகால பழைமையும், சிறப்பும் வாய்ந்த ஆழகிய ஆலயமாகும்.

கி.பி.1970 ஆம் ஆண்டில் மங்களபுரத்தில் அருட்பணி. மரிய ரொடீசினி அடிகளின் முயற்சியால் ஆலயம் கட்டப்பட்டு, 08.02.1970 அன்று அன்றைய சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு. செல்வநாதர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, வாழப்பாடி பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது.

2010 ஆம் ஆண்டில் திருமனூர் தனிப்பங்காக உயர்த்தப்படவே, இப்பங்கின் கீழ் மங்களபுரம் செயல்பட்டு வருகிறது. திருமனூர் பங்கின் முதல் பங்குத்தந்தையான அருட்பணி. ஞானராஜ் அடிகளார் அவர்கள், மங்களபுரம் ஆலயத்தைச்சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப திட்டமிட்டு, முயற்சிகள் மேற்கொண்டார். இவருக்கு பிறகு வந்த அருட்பணி. அலெக்ஸ் பிரபு அடிகளாரால் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

மங்களபுரம் மங்கள மாதா ஆலயமானது, 2020ம் ஆண்டான இவ்வாண்டை, பொன்விழா ஆண்டாக சிறப்பித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

ஆலய வளாகத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றும், வணிகவளாக கடைகள் இரண்டும் உள்ளன.

தகவல்கள் : பங்குத்தந்தை. அருட்பணி. சார்லஸ், மற்றும் பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் ஆலய கோவில்பிள்ளை.