743 புனித சவேரியார் ஆலயம், வேப்பலோடை


புனித சவேரியார் ஆலயம்

இடம்: வேப்பலோடை

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: குறுக்குச்சாலை

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித வியாகுல மாதா ஆலயம், சிப்பிகுளம்

பங்குத்தந்தை: அருட்பணி. R. சந்தியாகு

குடும்பங்கள்: 6

ஞாயிறு திருப்பலி காலை 10:30 மணிக்கு

திருவிழா: நவம்பர் மாதம் 24-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 03-ம் தேதி

வழித்தடம்: தூத்துக்குடி -வேம்பார் -வேப்பலோடை

Location map: Rc church

https://maps.app.goo.gl/tSTkKbYxhwjnSEj49

வரலாறு:

வேப்பலோடை புனித சவேரியார் ஆலயம் சுமார் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்த ஆலயத்தை கத்தோலிக்க பரதவர்களான 50 வீட்டுக்காரர்கள் உருவாக்கி, ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 03-ம் தேதி திருவிழாவையும் நடத்தி வந்துள்ளனர்.

1947 ஆம் ஆண்டு புனிதருக்கு பல அடுக்குகளைக் கொண்ட சப்பரம் செய்து, சப்பர பவனியும் திருவிழாவையும் சிறப்பாக கொண்டாடினர். பின்னர் கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் தொழில்வளம் குறைந்ததால் பரதவ மக்கள் 40 வீட்டுக்காரர்கள், தூத்துக்குடி பூபாலராயர்புரத்தில்  குடியேறினார்கள். தற்போது வேப்பலோடையில் 10 கத்தோலிக்க குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றனர்.

ஆலயத்தில் உள்ள புனித சவேரியார் சொரூபம் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். 

காலப்போக்கில் ஆலயம் பழுதடைந்ததால் திரு. ஜான் மோத்தா அவர்கள் இலங்கையில் இருந்து இந்தியா வந்தபோது, ஆலயத்தை பார்வையிட்டு, ஆலயத்தை புதுப்பித்து மின்விளக்குகள் வசதியையும் செய்து கொடுத்தார்.

அருட்பணி. ஜான் சேவியர் பணிக்காலத்தில் ஆலயத்தை சுற்றி ஆறடி உயரம் கொண்ட மதிற்சுவர் 1989 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

தகவல்கள் மற்றும் புகைப்படம்: பங்குத்தந்தை அருட்பணி. R. சந்தியாகு அவர்கள்