239 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், உப்பளம்


புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்

இடம் : சவேரியார் நகர், உப்பளம், பாண்டிச்சேரி

மறை மாவட்டம் : புதுவை - கடலூர் உயர் மறை மாவட்டம்.

நிலை : பங்குதளம்

சிற்றாலயம் : புனித அந்தோணியார் ஆலயம், நேதாஜி நகர் 3, உப்பளம்

பங்குத்தந்தை : அருட்தந்தை அருள் புஷ்பம்

குடும்பங்கள் : 900+
அன்பியங்கள் : 22

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மற்றும் காலை 07.30 மணிக்கு

தினமும் திருப்பலி : காலை 06.00 மணிக்கு

திங்கள் மாலை 06.00 மணிக்கு புனித சவேரியார் நவநாள், திருப்பலி

மாதத்தின் முதல் புதன் கனவின் புனிதரான சூசையப்பர் தேர்பவனி, திருப்பலி, சுகமளிக்கும் அற்புத கூட்டம் மற்றும் சமபகிர்வு விருந்து.

திருவிழா : மார்ச் மாதம் 04- ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையில்.

சிறப்புகள் :

கி.பி 1545 ம் ஆண்டு நாகப்பட்டினத்திலிருந்து மைலாப்பூர் செல்லும் வழியில் கடற்கொந்தளிப்பால் புனித சவேரியார் தரையிறங்கி கிறிஸ்தவ மறையை போதித்த இடம் உப்பளம் பகுதியாகும்.

தற்போது காணப்படும் புதிய ஆலயமானது அருட்தந்தை சாமிநாதன் அவர்களின் பணிக்காலத்தில் கட்டப்பட்டு மேதகு ஆயர் மைக்கேல் அகஸ்டின் முன்னிலையில், கர்தினால் சைமன் லூர்துசுவாமி அவர்களால் 22-09-2000 அன்று அர்ச்சிக்கப் பட்டது.

ஆரம்பத்தில் திருஇருதய பேராலயத்தின்22-09-2000 அன்று தனிப்பங்காக உயர்த்தப் பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை சாமிநாதன் அவர்கள் பொறுப்பேற்றார்.

06-12-2017 அன்று துயிலும் நிலையில் உள்ள புனித சூசையப்பர் திருச்சுரூபம் நிறுவப்பட்டது.

1622 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி அவர்களால் புனித பிரான்சிஸ் சவேரியார் புனிதராக உயர்த்தப்பட்டதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 04 ம் தேதி ஆரம்பித்து 12 ம் தேதி பெருவிழா சிறப்பாக கொண்டாடப் படுவது தனிச்சிறப்பு.