164 புனித அந்தோணியார் ஆலயம், அகரக்கட்டு


புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : அகரக்கட்டு

மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : பாளையங்கோட்டை

நிலை : பங்குதளம்

கிளைகள் :
1.அச்சன்புதூர்
2.பொய்கை
3. கொடிக்குறிச்சி
4. பெரியார் காலனி

பங்குத்தந்தை : அருட்பணி எட்வின் ராஜ்

குடும்பங்கள் : 850
அன்பியங்கள் : 12

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு

திருவிழா : ஜூன் மாதத்தில் 13 நாட்கள்.

வரலாறு :

அகரக்கட்டு தமிழ் நாட்டில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தென்காசி க்கும், ஆய்க்குடி க்கும் இடையே அமைந்துள்ளது.

அகரக்கட்டு தென்காசிக்கு வடக்கே 3 கி.மீ தொலைவிலும் தென்காசி மதுரை மாநில நெடுஞ்சாலைக்கு 2 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் ஆய்க்குடி பிராமணர்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக விளங்கியது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பிராமணர்கள் எழுதுவதற்கு பயன்படும் பனை ஓலையை கொண்டு வருவதற்கும், அவற்றை பாதுகாக்கவும் திருச்செந்தூருக்கு அண்மையில் உள்ள மூலக்காடு என்ற இடத்தில் இருந்து நாடார் சமுதாயத்தை சார்ந்த மக்களை அழைத்து வந்தனர். அதுவே அவர்கள், அகரக்கட்டு என்ற பிராமணர்கள் நிறைந்த இக் கிராமத்திற்கு வந்து குடியேறுவதற்கு காரணமாயிற்று.

முதலில் அவர்கள் பனை மரத்திலிருந்து வரும் கள் தயாரித்து பிழைத்து வந்தனர். பின்னர் விவசாயம் கற்று நில உரிமையாளர்களும் ஆனார்கள். நாளடைவில் தலித் மக்களும் அகரக்கட்டு பகுதிக்கு வேலைக்கு வந்து குடியேறினர்.

தற்போது இந்த பகுதி கிறிஸ்தவர்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் 2001 ம் ஆண்டு தான், இப் பகுதி மக்களின் ஆன்மீக வாழ்வுக்கு அச்சாரமான அகரக்கட்டு தனிப் பங்காக அங்கீகரிக்கப் பட்டது.

இங்கு பணிபுரிந்த அருட்பணி அந்து ஜோசப் அவர்கள் வேப்பமரம் மற்றும் புங்கைமரம் போன்ற நிழல்தரும் மரங்களை ஆலயத்தை சுற்றிலும் மற்றும் அகரக்கட்டு சாலையின் இருபுறமும் நட்டு வைத்தார்கள்.

காலையில் திருப்பலி முடிந்தவுடன், அருட்பணி அந்து ஜோசப் அவர்கள தெருவோர தண்ணீர் குழாய்களில் குடத்தில் தண்ணீர் பிடித்து தன் தோள்களில் சுமந்து ஒவ்வொரு மரத்திற்கும் தண்ணீரை ஊற்றி வளர்த்து வந்தார். மாலை வேளைகளிலும் இது போல தண்ணீர் ஊற்றி வந்தார்.

இன்று அகரக்கட்டு ஆலயம் மற்றும் சாலையில் இம்மரங்கள் குளிர்ச்சியையும் நிழலையையும் நல்ல காற்றையும் தந்து கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல். இப்பகுதிக்கு நல்ல வனப்பையும் தந்து கொண்டிருப்பதை காணலாம்.

அகரக்கட்டு பங்கு மக்கள் அருட்தந்தை அந்து ஜோசப் அவர்களின் இச் சமூக பணியை நன்றியோடு நினைவு கூறுகின்றனர்.

மேலும் பங்கு மக்களை இப்பகுதியில் பல சமூகம் சார்ந்த நற் செயல்கள் புரிந்திட அருட்தந்தை அவர்களின் செயல்பாடுகள் தூண்டுதலாகவும் திகழ்ந்தது.