645 புனித வியாகுல மாதா ஆலயம், தெற்கு கீரனூர்

      

புனித வியாகுல மாதா ஆலயம் 

இடம் : தெற்கு கீரனூர், இளையான்குடி தாலுகா 

மாவட்டம் : சிவகங்கை 

மறைமாவட்டம் : சிவகங்கை 

மறைவட்டம் : பரமக்குடி 

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : தூய சகாய அன்னை ஆலயம், சாலைக்கிராமம் 

பங்குத்தந்தை : அருள்பணி. மா. ரமேஷ் 

குடும்பங்கள் : 80

திருப்பலி : மாதத்தில் இரண்டு நாட்கள் 

திருவிழா : செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் ஆரம்பித்து பத்து நாட்கள். 

வழித்தடம் : பரமக்குடியிலிருந்து இளையான்குடி வழித்தடத்தில் சாலைக்கிராமம் செல்லும் சாலையில் தறிகொம்பன் நிறுத்தத்தில் இறங்கி, சுமார் ஒரு கி.மீ சென்றால் தெற்கு கீரனூரை அடையலாம். 

Location map : 

https://g.co/kgs/zbzpSA

வரலாறு :

புலவர் நக்கீரன் தென்னிந்திந்தியாவின் கடைக்கோடி எல்லைப் பகுதியான இலங்கைக்கு தெற்கு நோக்கி பயணம் செய்த போது, அவர் கடைசியாக வந்தடைந்த ஊர் இது. ஆகவே இவ்வூர் அவரது பெயரால் தெற்கு கீரனூர் எனப் பெயர் பெற்றது. 

சுமார் 129 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் பணிபுரிந்து வந்த இயேசு சபை குருக்கள், தெற்கு கீரனூரில் ஆலயம் அமைக்கு கொடுத்த ரூ. 1700 ஐ கொண்டு புனித வியாகுல அன்னைக்கு ஆலயம் கட்டப்பட்டது. 

பழைய ஆலயம் இடிக்கப்படாமலே புதிய ஆலயத்திற்கு 29.06.1991 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 22.05.2002 அன்று சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு எட்வர்ட் பிரான்சிஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

தவக்காலத்தின் 40 நாட்களும் சிலுவைப்பாதை நடைபெறும். தைப் பொங்கல்விழாவை, பொங்கல் வைத்து புனித அந்தோனியார் பொங்கல் என்ற பெயரில் கொண்டாடுவர். 

ஆலயத்தில் உள்ள பக்தசபைகள் :

மரியாயின் சேனை 

சிறுவர் மன்றம் 

நற்செய்தி பணியாளர்கள்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. மா. ரமேஷ்.