315 பாத்திமா அன்னை ஆலயம், பாத்திமாநகர்


பாத்திமா அன்னை ஆலயம்.

இடம் : பாத்திமாநகர்

மாவட்டம் : புதுக்கோட்டை
மறை மாவட்டம் : தஞ்சாவூர்
மறை வட்டம் : புதுக்கோட்டை

நிலை : கிளைப்பங்கு

பங்கு : புனித வியாகுல அன்னை ஆலயம், அரசடிப்பட்டி

பங்குத்தந்தை : அருட்தந்தை சவேரியார்

குடும்பங்கள் : 79
அன்பியங்கள் : 2

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு மறுவாரம் மாலை 07.00 மணிக்கு என சுழற்சி முறையில்.

மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை மாலையில் அன்னையின் தேர்பவனியும், ஜெபமாலையும் நடைபெறும்.

திருவிழா : ஜூன் மாதத்தில்.

வழித்தடம் : புதுக்கோட்டை -ஆலங்குடி வழியாக மணிப்பள்ளம் சாலையில் பாத்திமா நகர் அமைந்துள்ளது.

புதுக்கோட்டை - ஆலங்குடி மெயின்ரோடு வழியில் வம்பன் 4 ல் ரோட்டில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

வரலாறு :

விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட அழகிய கிராமம் பாத்திமாநகர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு தவளப்பள்ளம் என்ற ஊரிலிருந்து வந்து ஒருவர், அவரின் சொந்த இடமான இப்பகுதியில் வீடுகட்டி வாழ்ந்தார். அதனால் ஒத்தவீடு என்று பெயர் வைத்து அழைக்கப்பட்டது.

அதன்பின்னர் மக்கள் ஒவ்வொருவராக இங்கு வந்து குடியேறினார்கள். காரணம், தவளப்பள்ளம் போக்குவரத்திற்கு வசதியாக இல்லை என்பதால் இங்கேயே குடியேறிவிட்டனர்.

ஆரம்பத்தில் ஒரு சிறு ஓலைக்குடில் கட்டப்பட்டு ஜெபமாலை செய்யப்பட்டு வந்தது. பின்னர் இவ்வூர் 1973 ம் ஆண்டு முதல் அன்னையின் பெயரால் பாத்திமா நகர் என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்த ஆலயம் சிறியதாக இருந்ததால் 1988 ம் ஆண்டு புதிய ஆலயம் கட்டப்பட்டு தஞ்சை மறை மாவட்ட ஆயர் மேதகு பாக்கியம் ஆரோக்கியசாமி ஆண்டகையால் அர்ச்சிக்கப்பட்டது. அது சமயம் ஊர் பாத்திமாநகர் என்று இருப்பதால் ஆலயத்தையும் பாத்திமா மாதா ஆலயம் என்று பெயர் சூட்டப்பட்டது.

அதன் பிறகு தூய பாத்திமா அன்னையின் அருளால் இவ்வூர் இறை மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கப் பெற்றதால், அன்னையிடம் மிகுந்த விசுவாசிகளாக காணப்படுகின்றனர்.

இவ்வருட திருவிழா 14-06-2019 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு கரையினர் நவநாள் சிறப்பு திருப்பலியை சிறப்பித்தனர். இன்று கிராமத்தினர் இணைந்து இரவு 07.00 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி சிறப்பிக்கின்றனர். நாளை ஞாயிறு காலை சிறப்பு திருப்பலியுடன் கொடியிறக்கப்பட்டு திருவிழா இனிதே நிறைவு பெறுகின்றது.