735 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், குமரன் திருநகர்

     

புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்

இடம்: குமரன்திருநகர், பாலகிருஷ்ணாபுரம் (P.O), 624005

மாவட்டம்: திண்டுக்கல்

மறைமாவட்டம்: திண்டுக்கல்

மறைவட்டம்: திண்டுக்கல்

நிலை: பங்குத்தளம்

பங்குத்தந்தை: அருட்பணி. சூ. ஸ்டீபன் கஸ்பார்

குடும்பங்கள்: 280+

அன்பியங்கள்: 15

ஞாயிறு திருப்பலி காலை 07:30 மணிக்கு

நாள்தோறும் திருப்பலி காலை 06:00 மணிக்கு

சனிக்கிழமை மாலை 06:30 மணிக்கு நவநாள், குணமளிக்கும் வழிபாடு, திருப்பலி

திருவிழா: அக்டோபர் மாதம் 2-ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள்.

வழித்தடம்: திண்டுக்கல் -தலைமை தபால் நிலையம். இங்கிருந்து கிழக்கு நோக்கி வந்தால் மழைநீர் சேகரிப்பு குளம். இதிலிருந்து சுமார் 20மீட்டர் சென்றால் இவ்வாலயத்தை அடையலாம்.

Location map: https://g.co/kgs/9rk37h

வரலாறு:

குமரன்திருநகரில் குடியேறி வாழ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் பெருமுயற்சியால் 1985 ஆம் ஆண்டு தூய ஆரோக்கிய அன்னை குருசடி கட்டப்பட்டு, இறைவனை வழிபட்டு வந்தனர். 

திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தின் கிளைப்பங்கான குமரன்திருநகரில், அந்நாள் வட்டார அதிபரும், இப்போதைய ஆயருமான மேதகு. P. தாமஸ் பால்சாமி அவர்களால் 1991 ஆம் ஆண்டு நிலம் வாங்கப்பட்டு, அன்னைக்கு சிற்றாலயம் கட்டப்பட்டது. அப்போதைய ஆயர் மேதகு கபிரியேல் ஆண்டகை அவர்களால் 1991 ல் திருச்சி மறைமாவட்டத்துடன் இணைந்திருக்கையில் சிற்றாலயமானது புனிதப் படுத்தப்பட்டு, அன்னையின் பிறப்பு விழா திருவிழாவாக கொண்டாடப்பட்டது. 

திண்டுக்கல் மறைவட்ட அதிபராக இருந்த பேரருட்தந்தை V. செல்வராஜ் அவர்களின் ஆசீருடன் 2002 ஆம் ஆண்டு சிற்றாலயத்தில் நற்கருணைப்பேழை நிறுவப்பட்டு, பல அருட்தந்தையர்களின் உதவியுடன் ஞாயிறு திருப்பலி வாரந்தோறும் நிறைவேற்றப்பட்டு வந்தது. இதன்பயனாக இறைமக்களின் ஆன்மீக வாழ்வு ஆழப்படுத்தப்பட்டு, வளர்ச்சிக்கு வித்திடப்பட்டது.

2003 அன்று மேதகு திருச்சி ஆயர் அந்தோணி டிவோட்டோ D.D. அவர்களால்,

ஏறக்குறைய 200 குடும்பங்களுடன், திண்டுக்கல் ஆலயத்திலிருந்து பிரிக்கப்பட்டு, திண்டுக்கல் மறைவட்டத்தின் 29-வது பங்காக குமரன்திருநகர்  தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி.‌ A. பீட்டர் ஜான் 08.09.2003 அன்று பணிப் பொறுப்பேற்று வழிநடத்தினார்.

புதிதாய் உருவான திண்டுக்கல் மறைமாவட்டத்தின் முதல் ஆயர் மேதகு P. அந்தோணி D.D.,STD அவர்களின் அனுமதியுடன் நன்கொடையாளரின் உதவியுடன் அச்சிடப்பட்ட நவநாள் கையேட்டை அருட்பணி. A. பீட்டர் ஜான் அவர்கள் 25.03.2004 முதல் நடைமுறைப் படுத்தினார்.

தொடர்ந்து பணியாற்றிய ஆறு பங்குத்தந்தையர்களும், நவநாளை சிறப்பாக வழிநடத்தி கொண்டாடினர்.

தற்போது பங்கின் ஏழாவது பங்குத்தந்தையாக பணியாற்றி வருகிற, அருட்பணி. சூ. ஸ்டீபன் கஸ்பார் அவர்கள் நவநாள் புத்தகத்தில் மாற்றங்கள் செய்து புதிதாக உருவாக்கி அன்னைக்கு புகழ்பாட, நவநாட்களில் ஜெபிக்க திண்டுக்கல் மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயர் மேதகு P. தாமஸ் பால்சாமி D.D., அவர்களின் ஆசீருடன் 08.09.2018 லிருந்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மரியாயின் சேனை

2. புனித வின்சென்ட் தே பவுல் சபை (பெண்கள்)

3. கத்தோலிக்க சங்கம்

4. அன்பியங்கள்

5. பாடற்குழு

6. இளையோர் இயக்கம்

7. பாலர் சபை

8. கோல்பிங் இயக்கம்

பங்கில் உள்ள பள்ளிக்கூடம்:

சகாய மாதா மெட்ரிகுலேஷன் பள்ளி

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி.‌ A. பீட்டர் ஜான் (2003-2004)

2. அருட்பணி. J. சேவியர் லூர்துசாமி (2004-2007)

3. அருட்பணி. A. சூசை ஆரோக்கியதாஸ் (2007-2011)

4. அருட்பணி.‌ J. செல்வராஜ் (2011-2012)

5. அருட்பணி. K. A. ஆரோக்கியசாமி (2012-2013)

6. அருட்பணி. A. டேவிட் செபாஸ்டின் (2013-2017)

7. அருட்பணி.‌ சூ. ஸ்டீபன் கஸ்பார் (2017 முதல்...)

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி.‌ சூ. ஸ்டீபன் கஸ்பார் அவர்கள்.

புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர்