தூய கார்மேல் அன்னை ஆலயம்
இடம் : காக்காவேரி, காக்காவேரி அஞ்சல், இராசிபுரம் வட்டம், 637408
மாவட்டம் : நாமக்கல்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : நாமக்கல்
நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் :
1. புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், பட்டணம்
2. புனித மரியன்னை ஆலயம், ஒடுவன்குறிச்சி
3.சீராப்பள்ளி (ஆலயம் இல்லை)
4. வடகம் (ஆலயம் இல்லை)
பங்குத்தந்தை : அருட்பணி. S. இராஜப்பா
குடும்பங்கள் : 200
அன்பியங்கள் : 9
திருப்பலி நேரங்கள் :
ஞாயிறு : காலை 08.30 மணிக்கு திருப்பலி.
திங்கள், புதன், வியாழன் : காலை 06.30 மணிக்கு திருப்பலி.
செவ்வாய், வெள்ளி, சனி : மாலை 06.30 மணிக்கு திருப்பலி.
மாதத்தின் முதல் வெள்ளி : மாலை 06.30 மணிக்கு திருப்பலி, நோயாளிகளுக்கான சிறப்பு செபம் மற்றும் எண்ணெய் பூசுதல்.
மாதத்தின் முதல் சனி : புனித பனிமய அன்னை கெபியில் மாலை 06.30 மணிக்கு செபமாலை, திருப்பலி, தேர்பவனி.
திருவிழா : ஜீலை 16ம் தேதியை மையமாகக் கொண்டு ஒரு வாரம்.
மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி. ஜெகராஜ்
2. அருட்பணி. அந்தோணிசாமி
3. அருட்பணி. தாவீது
4. அருட்பணி. மெல்கியோர்
5. அருட்பணி. ஜோசப் ரொசாரியோ
6. அருட்பணி. இருதயராஜ்
7. அருட்பணி. பெஞ்சமின் சந்தனராஜ்
8. அருட்பணி. பீட்டர் ராஜ்
9. அருட்பணி. கார்மேல் கிருபாகரன்
10. அருட்சகோதரி. அனுன்ஸியா மேரி
11. அருட்சகோதரி. அனாக்கிளாத்தா மேரி
12. அருட்சகோதரி. அந்தோணியம்மாள்
13.அ ருட்சகோதரி. எத்தல் பர்ட்
14. அருட்சகோதரி. மங்களம்
15. அருட்சகோதரி. கிரேசிலின் மேரி
16. அருட்சகோதரி. அல்போன்ஸ் பாத்திமா மேரி
17. அருட்சகோதரி. அருணா
18. அருட்சகோதரி. தெரேஸ் பாத்திமா
19. அருட்சகோதரி. ஆரோக்கிய மேரி
20. அருட்சகோதரி. அல்போன்ஸ்
21. அருட்சகோதரி. குழந்தை தெரேசு
22. அருட்சகோதரி. மேரி ஸ்டெல்லா அருள்
23. அருட்சகோதரி. நோயலின் ராஜா மணி
24. அருட்சகோதரி. அல்பீனா மேரி
25. அருட்சகோதரி. மரிய ரோஸ்
26. அருட்சகோதரி. ஆரோக்கிய மேரி (சோபியா)
வழித்தடம் : நாமக்கல்- இராசிபுரம்- காக்காவேரி.
சேலத்திலிருந்து சுமார் 31 கி.மீ தூரத்திலும், ஆத்தூரிலிருந்து சுமார் 50 கி.மீ தூரத்திலும், நாமக்கல்லிலிருந்து சுமார் 34 கி.மீ தூரத்திலும், இராசிபுரத்திலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்திலும் காக்காவேரி தூய கார்மேல் அன்னை ஆலயம் உள்ளது.
Location Map : https://maps.app.goo.gl/TsLwZWssz6WCzEx58
காக்காவேரி ஆலய வரலாறு :
கி.பி 1687 களில் அருட்பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும், மதுரை நாயக்கனிடமிருந்து மைசூர் இராயனின் ஆட்சிக்குள் சேலம் சேர்க்கப் பட்டதாலும், ஆன்றைய கொங்கு நாட்டுப் பகுதிகளான வெள்ளாண்டிவலசு, கருமத்தாம்பட்டி, காக்காவேரி ஆகிய பணித்தளங்களை மதுரை இயேசு சபையினர், மைசூர் மிசனுக்கு கொடுத்து விட்டனர்.
தொட்டியம் அருகிலுள்ள சேர்வைக்காரன்பட்டியிலிருந்து அன்றைய கிறிஸ்தவ மக்கள் மதுரையின் எல்லையில் இருந்துள்ளனர். 1887 க்கு பிறகு சில வேளாளர் இனத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் காக்காவேரி பகுதியில் குடியேறினர். அணைக்கரைப் பாளையத்திற்குப் (வெள்ளாண்டிவலசு) பதிலாக, காக்காவேரி அருட்பணி. மானுவேல் டிசூசா அடிகளாரின் உறைவிடமானது. இவரது பணிக்காலத்தில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. ஆலயம் கட்டுவதற்கும் பெரும் தடைகள் இருந்தன. ஆனாலும் கிறித்தவ மக்கள் மனந்தளராது இப்பகுதியில் மழையின்றி கடும் பஞ்சம் ஏற்பட்ட போது அன்னை மரியாளிடம் வேண்டிடவே, போதிய மழை பெய்தது. எனவே ஆலயம் கட்டுவதற்கான தடையும் நீங்கவே உத்தரிய மாதா (கார்மேல் மாதா) பெயரில் ஆலயம் கட்டப்பட்டது.
17 ஆம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் 4800 கிறிஸ்தவர்களைக் கொண்டு அருட்பணி. மெனேசஸ் அவர்கள் காக்காவேரி பகுதியில் பணியாற்றியுள்ளார்.
காக்காவேரி இன்று :
1899 ல் திருத்தந்தையின் வேதபோதக நிர்வாக சபை கும்பகோணத்தை மறைமாவட்டம் என ஒப்புதல் அளித்து அறிவித்தது. அச்சமயம் சேலம் பகுதியில் இருந்து வந்த மறைப்பணித்தளங்களான கோனேரிப்பட்டி, காக்காவேரி பங்குகள் முழுமையாகவும், மோகனூர், பேட்டப்பாளையம், கருப்பன்பட்டி ஆகியவற்றை உள்ளடக்கிய தோளூர்பட்டி பங்கின் மேற்கு பகுதியும் கும்பகோணம் மறைமாவட்டத்துடன் இணைக்கப் பட்டன.
26.05.1930 இல் 11 பங்குகளைக் கொண்டு சேலம் மறைமாவட்டம் உருவானது. இவற்றில் கும்பகோணம் மறைமாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு சேலம் மறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட 4 பங்குகளில் ஒன்று தான் காக்காவேரி.
நீர்வளத்தை உள்ளடக்கிய பழம்பெரும் ஊர் காக்காவேரி. சேலம் மறைமாவட்டம் உருவானபோது தூய கார்மேல் அன்னையின் பாதுகாவலில் இப்பங்குத்தளம் கிழக்கே மெட்டாலா, வடக்கே போதமலை, மேற்கே செண்பகமாதேவி, தெற்கே சேந்தமங்கலம், கொசவம்பட்டி, மோகனூர், பேட்டப்பாளையம் போன்ற பகுதிகளைக் கொண்டு பரந்து விரிந்து சிறந்து விளங்கியது.
இப்பங்கு ஆலயமானது முதலில் 1687 ஆம் ஆண்டிலும், தொடர்ந்து 1840 ஆண்டிலும், அதன் பின்னர் 1959 ஆம் ஆண்டிலும் என மூன்று காலகட்டங்களில் புதிதாக கட்டப்பட்டது.
காக்காவேரி பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்த கொசவம்பட்டி, மதியம்பட்டி, புதுப்பாளையம், இராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், செம்மேடு, பேட்டப்பாளயம் ஆகியன தனிப்பங்குகளானது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சேலம் மறை மாவட்டத்தின் மூத்த பங்குகளில் ஒன்றாக சிறந்து விளங்குகிறது காக்காவேரி. இத்தகைய சிறப்புக்களுக்கு காரணம் இப்பகுதியில் பல ஆண்டுகள் பணியாற்றிய மறைப் பணியாளர்களின் அயராத தொண்டாகும் என்பதே உண்மை.
அருட்பணி. செல்வம் பணிக்காலத்தில் புனித பனிமய அன்னை குடில் கட்டப்பட்டு, 08.07.2015 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
பாஸ்கா நாடகம் :
தவக்காலத்தின் பெரிய வாரத்தின் கடைசி மூன்று நாட்களில், பங்கின் ஆளுகையின் கீழ் உள்ள பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவ மக்களுக்கு இரவுப்பொழுதுகள் பயனுடையதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அருட்பணி. கெங்கணல் அவர்களின் எண்ணத்தில் உருவானது தான் பாஸ்கு நாடகம். இறைமகன் இயேசுவின் வாழ்க்கை சரிதையை மக்கள் நாடகமாக நடித்துக் காட்டினர். அருட்பணி. A. ஆரோக்கியராஜ் (1993 -1998) பணிக்காலத்தில் "அன்பின் காவியம்" என்ற பெயரில் ஒலி, ஒளி காட்சியாக இன்றளவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த முயற்சியானது அருகில் வாழும் கிராம மக்கள் அனைவருக்கும் சிறந்த நற்செய்தி அறிவிக்கின்ற பணியாக இருக்கின்றது என்பதே சிறப்புக்குரியது.
பங்கில் துறவற சபையாரின் பணிகள் :
1. மரியாளின் மாசற்ற திருஇருதய சபை கன்னியர்கள்:
18.08.1936 லிருந்து இந்த சபையின் அருட்சகோதரிகள் பங்கில் தூய மரியன்னை RC பள்ளியில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். 01.08.1964 முதல் பெண்களுக்கான உள் விடுதியையும் நடத்தி வருகிறார்கள்.
2. அமல அன்னை பிரான்சிஸ்கு சலேசிய சபை கன்னியர்கள்:
02.04.2005 முதல் இச்சபை அருட்சகோதரிகள் அரசப்பாளையம் கிராமத்தில் மருத்துவமனை அமைத்து மக்களுக்கு பல்வேறு சமூக பொருளாதார நிலைகளில் பயிற்சியும், உதவியும் செய்து வருகின்றனர்.
பங்கில் உள்ள பக்தசபைகள் :
1. மரியாயின் சேனை
2. பங்குப்பேரவை
3. இளையோர் இயக்கம்
4. அன்பியங்கள்
5. பீடச்சிறுவர்கள்
6. பாடகற்குழு
7. பாஸ்கா நாடகக்குழு
8. விழாக்குழுவினர்.
இல்லங்கள் :
1.மரியாவின் மாசற்ற திரு இருதய சபைக் கன்னியர் இல்லம்.
2. SMMI சபைக் கன்னியர் இல்லம்.
3. பங்குத்தந்தையர் இல்லம்.
4. SFS Hospital
5. St. Mary's home for childrens.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. Rev. Fr. Baulez (1871)
2. Rev. Fr. J. B. Paure Juillet (1873)
3. Rev. Fr. P. M. Teyssedre (1874 -1876)
4. Rev. Fr. C. Voinhee (1876-1878)
5. Rev. Fr. Joseph Bricaud (1979)
6. Rev. Fr. F. Loigeon (asst)
7. Rev. Fr. C. Chassam (1920-1926)
8. Rev. Fr. S. Ambrose (asst)
9. Rev. Fr. S. Arputhasamy (1926)
10. Rev. Fr. C. Guinkenal (1926-1929)
11. Rev. Fr. S. Depigny (1929-1930)
12. Rev. Fr. Matthew Thekkedam (asst)
13. Rev. Fr. I. Massol (1930-1937)
14. Rev. Fr. Bulliard (1938)
15. Rev. Fr. T. C. Thomas (asst)
16. Rev. Fr. Mathew Pulichal (1938-1949)
17. Rev. Fr. Andrew Venga Thanam (1949-1957)
18. Rev. Fr. S. Savarimuthu (asst)
19. Rev. Fr. M. S. Ignatius (asst)
20. Rev. Fr. S. C. Sebastian (asst)
21. Rev. Fr. George Edathy Parambil (1957-1961)
22. Rev. Fr. J. L. Hourmand (1961-1974)
23. Rev. Fr. M. Arulsamy (asst)
24. Rev. Fr. S. Arul Sundaram (asst)
25. Rev. Fr. I. Sonal (asst)
26. Rev. Fr. M. Arokiam (asst)
27. Rev. Fr. Peterose (asst)
28. Rev. Fr. P. Martin (asst)
29. Rev. Fr. M. Alphonse (asst)
30. Rev. Fr. S. Amalraj (asst)
31. Rev. Fr. T. Schoeser (asst)
32. Rev. Fr. A. X. Irudayam (asst)
33. Rev. Fr. A. Sebastian (asst)
34. Rev. Fr. Revel (asst)
35. Rev. Fr. Victor Sundararaj (asst)
36. Rev. Fr. Peter Kariathira (1974-1977)
37. Rev. Fr. C. S. Antoni Samy (1977-1981)
38. Rev. Fr. S. Pushpanathan (1981-1984)
39. Rev. Fr. N. S. Irudayanathan 1984-1988)
40. Rev. Fr. N. J. Kulandairaj (1988-1990)
41. Rev. Fr. K. S. Pious (1990-1993)
42. Rev. Fr. P. T. Joseph Pazhayaparambil (1991)
43. Rev. Fr. A. Arokiaraj (1993-1998)
44. Rev. Fr. S. John Joseph (1998-2003)
45. Rev. Fr. M. Gnanapragasam (2003-2008)
46. Rev. Fr. A. Belavendiram (2008-2011)
47. Rev. Fr. M. Selvam (2011-2016)
48. Rev. Fr. D. Stephen Soruphan (2016-2018)
49. Rev. Fr. S. Rajappa (2018 till today)
பழைமையும், புதுமையும் ஒருங்கே பெற்ற, தூய கார்மேல் அன்னை ஆலயம் வாருங்கள்..! இறைவனின் ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்லுங்கள்..!
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. S. இராஜப்பா அவர்கள்.