புனித லூசியாள் ஆலயம்
இடம்: இரயுமன்துறை, பூத்துறை P.O., 629176
Phone: 04651-240638
மாவட்டம்: கன்னியாகுமரி
மறைமாவட்டம்: திருவனந்தபுரம் உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: தூத்தூர்
நிலை: பங்குத்தளம்
பங்குத்தந்தை: அருட்பணி. ரெஜீஸ்பாபு
குடும்பங்கள்: 800
அன்பியங்கள்: 18
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு காலை 05.30 மணி ஜெபமாலை, 06.00 மணி திருப்பலி மற்றும் காலை 08.00 மணி திருப்பலி
நாள்தோறும் திருப்பலி காலை 06.00 மணி
மாதத்தின் முதல் வெள்ளி மாலை 05.00 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி தொடர்ந்து ஆராதனை, ஜெபக்கொண்டாட்டம்
ஒவ்வொரு மாதத்தின் 13-ம் தேதி சிறப்பு திருப்பலி. இதில் பல இடங்களில் இருந்தும் ஏராளமான இறைமக்கள் பங்கேற்கின்றனர்
மாதத்தின் 1-ம் தேதியில் மாலையில் புனித குழந்தை இயேசுவின் தெரசாள் குருசடியில் திருப்பலி நடைபெறும்
மாதத்தின் முதல் செவ்வாய் மாலை புனித அந்தோனியார் குருசடியில் திருப்பலி
மாதத்தின் 8-ம் தேதி மாலையில் வேளாங்கண்ணி மாதா குருசடியில் திருப்பலி
அற்புத மாதா சிற்றாலயத்தில் திங்கள், புதன், வெள்ளி காலை 07.00 மணிக்கு திருப்பலி
ஒவ்வொரு மாதத்தின் 16-ம் தேதி அற்புத மாதா சிற்றாலயத்தில் திருப்பலி, ஆராதனை
திருவிழா: டிசம்பர் மாதம் 04-ம் தேதி முதல்13-ம் தேதி வரையிலான பத்து நாட்கள். 13-ம் தேதி பெருவிழா சிறப்பாக கொண்டாடப் படுகிறது
பங்கின் சிற்றாலயம்: அற்புத மாதா சிற்றாலயம், சமத்துவபுரம்
மண்ணின் இறையழைத்தல்கள்:
அருள்தந்தையர்கள்:
1. Rev.Fr. Francis D. Silva (late)
2. Rev.Fr. Maria Dominic. Z
3. Rev.Fr. Pancretius
4. Rev.Fr. Gladin Alex
5. Rev.Fr. Lucian Thomas
6. Rev.Fr. Churchil, IVD
7. Rev.Fr. Sam Mathew, Kottar Diocese
8. Rev.Fr. Arun Jani, OdeM
9. Rev.Fr. Desus, MSFS
அருள்சகோதரிகள்:
1. Sr. Albeera (late)
2. Sr. Suma
3. Sr. Prema
4. Sr. Sony
5. Sr. Dyana
6. Sr. Subha
7. Sr. Helena (Selvi)
8. Sr. Anitha Mary
வழித்தடம்: மார்த்தாண்டம் -இரயுமன்துறை
Location map: https://maps.app.goo.gl/PAjhsvS1a2obEnRT9
இரயுமன்துறை புனித லூசியாள் ஆலய வரலாறு:
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், தூத்தூர்
ஊராட்சிக்கு உட்பட்ட ஐந்து கிராமங்களில் இரையுமன்துறை கிராமமும் ஒன்று. இது திருவனந்தபுரம் உயர் மறைமாவட்டத்தின் ஆளுகையில் வரும் தூத்தூர் மறைவட்டத்தின்
கீழ் செயல்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க மீன்பிடித்தொழிலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இக்கிராமத்தில், கத்தோலிக்க நம்பிக்கை முழுவதும் பரந்து விரிந்து காணப்படுகிறது.
தொடக்க காலங்களில் இரையுமன்துறை இறைமக்கள் வள்ளவிளை ஆலயத்திற்கு திருப்பலியில் பங்கேற்க சென்று வந்தனர். அப்போது பெரியவர்கள் திருப்பலியில் பங்கேற்று ஆசீர்வாதம் வழங்கும் போது துண்டு (Towel) விரித்து அதில் ஆசீர்வாதங்களைப் பெற்று விட்டு, இரையுமன்துறை வந்து துண்டை விரித்து ஆசீர்வாதத்தை இங்குள்ள மக்களுக்கு பகிர்ந்தளிப்பார்கள். அந்த அளவில் விசுவாசம் நிறைந்த மக்களாக வாழ்ந்து வந்தனர்.
கி.பி 19 ஆம் நூற்றாண்டின் நடுவில் தூத்தூர் பங்கோடும், 1969 –ஆம்
ஆண்டிற்கு முன் பூத்துறை பங்கோடும் இணைந்து செயல்பட்டது. பூத்துறை பங்கோடு இணைந்து செயல்பட்டாலும் இரையுமன்துறை கிராமத்திற்கு சொந்தமாக சிலுவை வடிவிலான ஆலயம் ஒன்று கடற்கரையை நோக்கி இருந்தது. அந்த ஆலயத்தின் வால்பகுதியே தற்போது இரையுமன்துறை கிராமத்தின் சமூக நலக்கூடமாக செயல்பட்டு வருகிறது.
ஆலயத்தின் பழைமையும், நவீனத்தின் தாக்கமும் இம்மக்களை புதிய ஆலயம்
வடிவமைக்கத் தூண்டியது. இதனால் 1990 டிசம்பர் 13– ஆம் நாள் அப்போதைய
பங்குத்தந்தை அருட்பணி. ஜெயராஜ். பி. ஜாய்ஸ் அவர்களால் புதிய ஆலயத்திற்கான அடிக்கல்லானது பழைய ஆலயத்தின் வடக்குப் பகுதியில் கல்லறைத் தோட்டம், புனித குழந்தை தெரசாள் குருசடி மற்றும் பங்குப்பணியாளர் இல்லம் ஆகியவற்றை உள்ளடக்கி போடப்பட்டது. அன்றைய காலத்தில் ரூ. 25 இலட்சம் என்னும் திட்ட மதிப்பீட்டில் ஆலயம், மணிக்கூண்டு, பங்குத்தந்தை இல்லம் ஆகியன கட்டப்பட்டது.
முழுவதும் வெண்மை நிற கண்ணாடிகளால், ஒரு குடை போன்ற
அமைப்பில் ஆலயத்தினுள் எந்த தூண்களுமின்றி வடிவமைக்கப்பட்டது.
ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட 2 வருடத்திற்குள் மக்களின் பெரும் உழைப்பால் 1992 – ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் நாள் அருட்பணி. ஜெறோம். ஜி.
பர்ணாண்டஸ் பங்குப்பணியாளராக இருந்த காலத்தில், மேதகு பேராயர்
சூசைபாக்கியம் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. ஆலய கட்டுமானப் பணிகளின் போது பங்கு மக்கள் அனைவரும் தன்னலம் பாராது தங்களது உழைப்பை வழங்கினார்கள். குறிப்பாக ஆலய மேற்கூரை கான்கிரீட் பணிகளின் போது பங்கின் இளையோர், பெரியவர்கள், சிறார் என அனைவரும் இணைந்து பணிசெய்தது பாராட்டுக்குரியது.
1991 ஆம் ஆண்டில் ஆலய மேல்மாடி கான்கிரீட் வார்க்கப்பட்டு, அதில் கடற்கரை மணல் நிரப்பப்பட்டு, சுற்றிலும் வண்ணச் சேலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு டிசம்பர் 4-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை திருவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.
ஆலயம் கட்டப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவை கண்டதால் ஆலயத்தை
காலத்திற்கேற்ப வடிவமைக்க எண்ணிய அருட்பணி. மல்பின் சூசை அவர்கள், 2017
பெப்ரவரி மாதம் ஆலய புனரமைப்பு பணியைத் தொடங்கினார். அந்தப் பணியானது 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 – ஆம் நாள் நிறைவடைந்து, திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேராயர் சூசைபாக்கியம் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. ஆலயத்தின் நீளம் கூட்டப்பட்டு, ஆலயத்தை சுற்றியுள்ள வெள்ளை கண்ணாடிகள் மாற்றப்பட்டது. அக்கண்ணாடிகள் யாவும் ஓவியங்கள் வரையப்பட்ட கண்ணாடிகளாக மாற்றப்பட்டது. மேலும் ஆலயம் முழுவதும் குளிரூட்டப் பட்டதாக (A/C) மாற்றப்பட்டது. திருவனந்தபுரம் உயர் மறைமாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் குளிரூட்டும் வசதி செய்யப்பட்ட முதல் ஆலயம் இதுவாகும்.
பழைய ஆலயத்தின் ஒருபகுதி மண்டபமாக மாற்றப்பட்டது.
அருட்பணி. ரஜீஸ் பாபு அவர்கள் தற்போது 2019 – ஆம் ஆண்டு முதல்
பங்குப்பணியாளராக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
பழைமையான கற்சிலுவை ஒன்றும் இங்கு உள்ளது.
ஆலயத்தில் புதுமைகள் நிறைந்த பழைமையான புனித லூசியா சுரூபம் உள்ளது தனிச்சிறப்பு.
ஆலயத்தின் குருசடிகள்:
1. புனித குழந்தை இயேசுவின் தெரசாள் குருசடி
2. புனித அந்தோனியார் குருசடி
3. புனித வேளாங்கண்ணி மாதா குருசடி
ஆலய பங்கேற்பு அமைப்புகள்:
1. திருஇருதய சபை (ஆண் & பெண்)
2. கார்மெல் மாதா சபை
3. மாதா சபை
4. மரியாயின் சேனை
5. புனித வின்சென்ட் தே பவுல் சபை (1. புனித லூசியாள், 2. புனித கிளாரா, 3. புனித அந்தோனியார்)
பங்குத் திருவிழாவும், பங்குத்தந்தையர்களும்:
1. 1992 -புனித லூசியாள் ஆலய அர்ச்சிப்பு திருவனந்தபுரம் ஆயர் மேதகு. சூசைபாக்கியம் அவர்களால் பங்குத்தந்தை ஜெறோம். ஜி. பர்ணாண்டஸ் அவர்கள் காலத்தில் முதல்
திருவிழா கொண்டாடப்பட்டது.
2. (1993 - 1994) அருட்பணி. வின்சென்ட்
3. (1994 - 1995) அருட்பணி. அகஸ்டின் ஜாண்
4. (1995 - 1996) அருட்பணி. ஆல்பர்ட்
5. (1996 - 1997) அருட்பணி. வில்லியம் லூர்தய்யன்
6. (1997 - 1999) அருட்பணி. ஜோய் டெறி. டி. போஸ்கோ (கிளாரட் சபை)
7. (1999 - 2000) அருட்பணி. தொபியாஸ் (கோட்டாறு மறைமாவட்டம்)
8. (2000 - 2001) அருட்பணி. டைசன்
9. அருட்பணி. போள். ஜி (2001 மே மாதம் முதல் 2003 நவம்பர் வரை)
10. (2003 - 2005) அருட்பணி. பெபின்சன்
11. (2005 - 2007) அருட்பணி. ஜாண் பீட்டர் (திரு இரத்த சபை)
12. (2007 - 2009) அருட்பணி. றசல் இக்னேசியஸ்
13. (2009 - 2011) அருட்பணி. ஜெரால்டு
14. (2011 - 2013) அருட்பணி. வில்பிரட்
15. (2013 - 2018) அருட்பணி. மல்பின் சூசை
16. அருட்பணி. சேவியர் (இரண்டு மாதங்கள்)
17. அருட்பணி. ஆன்சல் ஆண்டணி (2018 – 2019)
18. அருட்பணி. ரஜீஷ்பாபு (2019 – மே முதல் தற்போது)
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. ரஜீஷ்பாபு