811 புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், கீழமுடிமன்

   
புனித ஞானப்பிரகாசியார் ஆலயம். 

இடம்: கீழமுடிமன்

மாவட்டம் : தூத்துக்குடி

மறை மாவட்டம் : தூத்துக்குடி

மறை வட்டம் : குறுக்குச் சாலை

நிலை :  பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், பாஞ்சைக் குடியிருப்பு

2. புனித இஞ்ஞாசியார் ஆலயம், பசுவந்தனை

3. புனித லூர்து அன்னை ஆலயம், கவர்ணகிரி

4. புனித காணிக்கை அன்னை ஆலயம், ஆரைக்குளம்

5. புனித யாகப்பர் ஆலயம், பொம்மையாபுரம்

6. புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், கீழமங்கலம்

ஆலயம் இல்லாத 4 ஊர்கள்

1. ஓட்டப்பிடாரம்

2. தெற்கு பரும்பூர்

3. ஆலிமா நகர்

4. துறைச்சாமிபுரம் 

பங்குத்தந்தை: அருட்பணி. பென்சிகர் அமல் (2021 ஆம் ஆண்டு முதல்..)

குடும்பங்கள்: 190

அன்பியங்கள்: 9

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணி

திங்கள், வியாழன், காலை திருப்பலி காலை 06:00 மணி  

செவ்வாய், புதன், வெள்ளி, சனி மாலை திருப்பலி மாலை 07:00 மணி

பங்கு திருவிழா: மே மாதம் 12- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி  21- ஆம் தேதி புனித  ஞானப்பிரகாசியாருக்கு திருவிழா திருப்பலியுடன், சிறப்பாக  கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாறு:

கீழமுடிமன் தொடக்கத்தில் (1839 ஆம் ஆண்டு) காமநாயக்கன்பட்டி மறைபரப்பு தளத்தோடு இணைந்திருந்த, 13 சிற்றூர்களில் ஒன்றாகும். 

1911- ஆம் ஆண்டில்  முதல் கிறிஸ்தவர்களாக கீழமுடிமன்னில் 163 பேர் மனம் திரும்பினர். 1925 - ஆம் ஆண்டு இவ்வூர் தருவைகுளத்தோடு இணைக்கப் பட்டிருந்தது. அமெரிக்க செல்வந்தர் கெவின் கிரிப்பின் உதவியால், அருள்பணியாளர் அடைக்கலநாதர் பணிக்காலத்தில், 1930 ஆம் ஆண்டு புனித ஞானப்பிரகாசிரியர் ஆலயம் கட்டப்பட்டது. 

1936 ஆம் ஆண்டு முதல் கீழமுடிமன் தனிப் பங்காக உருவானது. முதல் பங்குப் பணியாளராக அருள்தந்தை. லூர்துநாதர் பணியாற்றினார். இதுவரை 34 பங்குத்தந்தையர்கள் பணியாற்றியுள்ளனர். தற்போது 35-வது பங்குத்தந்தையாக அருட்தந்தை. பென்சிகர் அமல் பனியாற்றுகின்றார். 

2011 ஆம் ஆண்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, ஆலய பவளவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.

கீழஈரால், குறுக்குச்சாலை போன்ற புதிய பங்குகள் இப்பங்கிலிருந்து உருவானவை ஆகும். பல்வேறு  காலக்கட்டங்களில் தொடரப்பட்ட பல அருட்பணியார்களின் உழைப்பால் பல அருஞ் செயல்கள் நடைந்துள்ளன. 

பங்கில் அமலவை என்ற அருள்சகோதரிகள்  சபையும், லசால் சபை சகோதரர்களும் கல்வி மறறும் ஆன்மீக பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். 

கீழ முடிமன்னில் 5 அன்பியங்கள் அன்பு, உண்மை, சமன்மை, தோழமை, நயன்மை ஆகிய அன்பியங்கள் வழியாக இறையாட்சியின் விழுமியங்கள் வாழ்வாக்கப்படுகின்றன. 

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புக்கள்:

1. திருக்குடும்ப சபை

2. ஒளிச்சுடர்

3. இளையோர் இயக்கம்

4. மறைக்கல்வி 

பங்கின் பள்ளிக்கூடங்கள்:

1. புனித வளன் தொடக்கப்பள்ளி, கீழமுடின்

2. ஆர்.சி தொடக்கப்பள்ளி, பொம்மையாபுரம்

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. Rev.Fr. Lourdu Nather (1936–1939)

2. Rev.Fr. Payapaly F.J (1939–1941)

3. Rev.Fr. J.V. Boopaul (1941–1942)

4. Rev.Fr. D. Swaminathar (1942–1943)

5. Rev.Fr. A.M. Kagoo (1943-1945)

6. Rev.Fr. Rosario Corera (1945–1947)

7. Rev.Fr. G. Soosainather (1947–1948)

8. Rev.Fr. Marianus (1948–1951)

9. Rev.Fr. Pusphanather (1951–1953)

10. Rev.Fr. Mascarenhas (1953–1954)

11. Rev.Fr. A.M. Kagoo (1954–1961)

12. Rev.Fr. Hermas M. (1961–1963)

13. Rev.Fr. G. Francis (1963–1964)

14. Rev.Fr. Pancras Fdo (1964–1967)

15. Rev.Fr. Devasahayam Fdo (1967–1969)

16. Rev.Fr. Rajareegam (1969) 

17. Rev.Fr. Arthur James (1969–1970)

18. Rev.Fr. Venantius Fdo (1970–1973)

19. Rev.Fr. Theophilus Fdo (1973)

20. Rev.Fr. Soosai Marian (1973–1976)

21. Rev.Fr. Rubert Arulvalan (1976–1978)

22. Rev.Fr. Julian Fdo (1978–1981)

23. Rev.Fr. Joseph Leon (1981-1984)

24. Rev.Fr. Vijayan (1984-1990)

25. Rev.Fr. Jeyaseelan (1990–1994)

26. Rev.Fr. M.G. Victor (1994–1997)

27. Rev.Fr. X.D. Selvaraj (1997–2002)

28. Rev.Fr. Venice Kumar (2002–2007)

29. Rev.Fr. Antony Duglas (2007–2012)

30. Rev.Fr. Antony Micheal Vincent (2012- 2014)

31. Rev.Fr. Irudayaraj M. (2014 - 2015)

31. Rev.Fr. Santheestan (2015-2018)

33. Rev.Fr. Visenthi Sahaya Ubertus (2018)

34. Rev.Fr. Viniston (2018-2021)

35. Rev.Fr. Benzigar Amal 2021....

வழித்தடம் : 

தூத்துக்குடியிலுருந்து 30 கி.மீ தொலைவிலும், கோவில்பட்டியிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் கீழமுடிமன் அமைந்துள்ளது.

Location map: https://g.co/kgs/43zPth

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. பென்சிகர் அமல் அவர்கள்.