830 புனித அன்னாள் ஆலயம், தேவதானம்

       

புனித அன்னம்மாள் (அன்னாள்) ஆலயம்

இடம்: தேவதானம், தேவதானம் அஞ்சல், 614702

மாவட்டம்: திருவாரூர்

மறைமாவட்டம்: தஞ்சாவூர்

மறைவட்டம்: பட்டுக்கோட்டை

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. பட்டிமார்

2. மேட்டாங்குளம்

3. தோலி. காளைக்காரன்வெளி

4. தெற்கு மண்ணுக்குமுண்டான்

5. ஏரிக்கரை

6. பாம்புகாணி

7. கர்ணாவூர்

8. மறவாதி

9. காந்தாரி

10. பெருகவாழ்ந்தான்

11. புத்தகரம்

12. நொச்சியூர் -பாலவாய்

13. சிறுபட்டாக்கரை

14. கீழநம்மங்குறிச்சி

15. இடைச்சுமூலை

16. எளவானூர் சோத்திரியம்

17. நாச்சிக்குளம்

18. கீழக்காடு

19. பின்னத்தூர்

20. சிறுபனையூர்

21. எடையூர்

22. வடசங்கேந்தி

23. மானங்காத்தான் கோட்டகம்

24. கெழுவத்தூர்

25. வடக்கு நாணலூர்

26. சிங்கமங்கலம்

பங்குத்தந்தை அருட்பணி.‌ T. ஆரோக்கிய பாஸ்கர் 

குடும்பங்கள்: 750 (கிளைப்பங்குகள் சேர்த்து)

அன்பியங்கள்: 10

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு காலை 08:00 மணி ஆராதனை, நற்கருணை ஆசீர், 08:30 மணி திருப்பலி

நாள்தோறும் காலை 06:30 மணி திருப்பலி

சனிக்கிழமை மாலை 06:00 மணி ஜெபமாலை, 06:30 மணி புனித அன்னம்மாள் நவநாள் திருப்பலி 

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 06:00 மணி ஆலயத்தைச் சுற்றி ஜெபமாலை புனித அன்னம்மாள் தேர்பவனி, நவநாள் திருப்பலி

திருவிழா: ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் ஆரம்பித்து, மே மாதம் முதல் வாரத்தில் நிறைவு பெறும்.

வரலாறு:

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை தரணியில், ஆழித் தேரோடும் திருவாரூர் மாவட்டத்தில் பிறப்பெடுக்கின்ற பொன்னி நதியின் செல்லப்பிள்ளையாம் கோரையாற்றின் கரையினிலே திருநகர் தான் தேவதானம். எல்லா மதங்களையும் சேர்ந்தவர்களும் அன்போடும் உறவோடும் வாழும் புண்ணிய பூமி.‌

மயிலை மறைமாவட்டத்தின் ஒரு பங்காக மன்னார்குடி இணைந்திருந்த போது, தேவதானம் மற்றும் அதனை சூழ்ந்த சுமார் 30 கிராம மக்கள் அருட்சாதனங்கள் பெற வழியின்றி தவித்தனர். அனைத்து கிராம மக்களின் வேண்டுகோளிற்கிணங்க மயிலை ஆயரால், தேவதானம் மன்னார்குடி பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு, திருத்துறைப்பூண்டி பங்குடன் இணைக்கப் பட்டது.

1946 ஆம் ஆண்டு தேவதானம் தனிப் பங்காக உயர்த்தப்பட்டு, அருட்பணி. அனஸ்தாசியோ டி கோஸ்தோ அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று வழிநடத்தினார்.‌

தற்போதைய பங்கு ஆலயத்திற்கு அரை கி.மீ தெற்கே தான் முதன் முதலில் புனித அன்னம்மாள் ஆலயம் இருந்தது.  

1947 ஆம் ஆண்டு தற்போது உள்ள இடத்தில் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, மயிலை மறைமாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தஞ்சை மறைமாவட்டம் 1953 ஆம் ஆண்டு உருவான பின்னர், 16.07.1953 அன்று தஞ்சை மறைமாவட்ட முதல் ஆயர் மேதகு சுந்தரம் ஆண்டகை அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.‌

1961 ஆம் ஆண்டு தூய அடைக்கலம் அன்னை கன்னியர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டது.

அருட்பணி.‌ A. R. அல்போன்ஸ் பணிக்காலத்தில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு செ. இலா. கபிரியேல் அர்ச்சிக்கப்பட்டது.‌

2016 ஆம் ஆண்டு மேதகு ஆயர் M. தேவதாஸ் அம்புரோஸ் அவர்களால், பங்குத்தந்தை இல்லம் மற்றும் புனித அன்னாள் அரசினர் உதவி பெறும் நடுநிலைப் பள்ளியும் புதுப்பிக்கப்பட்டது.‌ 

மேதகு ஆயர் அவர்களின் ஆயர் திருநிலைப்பாட்டின் 20 ஆம் ஆண்டு நினைவாக மக்களின் பேராதரவுடன் 22.09.2017 அன்று ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. 

2019 ஆம் ஆண்டு கஜா புயலில் பாதிப்படைந்த கிராம ஆலயங்களை மேதகு ஆயர் அவர்கள் புதுப்பித்துக் கொடுத்துள்ளார். 

நன்கொடையாளர்களின் நிதியுதவியுடன் நிறுவப்பட்ட கொடிமரமானது 30.07.2021 அன்று முன்னாள் பங்குத்தந்தை அருள்பணி. A. R. அல்போன்ஸ் அவர்களால் புனிதம் செய்து திறந்து வைக்கப்பட்டது.‌

பங்கில் உள்ள கெபிகள்:

1. புனித ஆரோக்கிய மாதா கெபி

2. புனித அன்னம்மாள் கெபி

பங்கில் உள்ள கல்விக்கூடம் மற்றும் அருட்சகோதரிகள் இல்லம்:

1. புனித அன்னாள் தொடக்கப் பள்ளி

2. அடைக்கல அன்னை சபை அருட்சகோதரிகள் இல்லம்.

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மறைக்கல்வி

2. மரியாயின் சேனை

3. புனித வின்சென்ட் தே பவுல் சபை

4. இளைஞர் மன்றம்

5. இளம் பெண்கள் இயக்கம்

6. பீடச் சிறுவர்கள் குழு

7. அன்பியங்கள்

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. அனஸ்தாசியோ தி கோஸ்தோ (1946-30.08.1955)

2. அருட்பணி. P. R. தாமஸ் (30.08.1955-26.04.1962)

3. அருட்பணி.‌ A. ஜேக்கப் ஆண்டனி (26.04.1962-07.06.1964)

4. அருட்பணி.‌ J. இஞ்ஞாசிமுத்து (07.06.1964-23.06.1969)

5. அருட்பணி.‌ P. C. மைக்கேல் (23.06.1969-05.08.1973)

6. அருட்பணி.‌ A. சேவியர் (05.08.1973-06.08.1976)

7. அருட்பணி.‌ A.  ஆரோக்கிய சாமி (06.08.1976-19.02.1981)

8. அருட்பணி. K. அந்துவான் (19.02.1981-10.09.1983)

9. அருட்பணி. K. மைக்கேல் (10.09.1983-06.07.1985)

10. அருட்பணி. M.  தோமையர் (06.07.1985-14.06.1988)

11. அருட்பணி.‌ A. R. அல்போன்ஸ் (14.06.1988-07.06.1994)

12. அருட்பணி.‌ A. ஜான்பிரிட்டோ (07.06.1994-04.06.1996)

13. அருட்பணி.‌ S. ஜான் விக்டர் (04.06.1996-21.06.2003)

14. அருட்பணி.‌ A. மரியதாஸ் (21.06.2003-18.08.2009)

15. அருட்பணி.‌ A. ஆண்டனி டேனியல் (18.08.2009-02.06.2010)

16. அருட்பணி.‌ A. பீட்டர் டேமியன் (02.06.2010-27.05.2016)

17. அருட்பணி.‌ P. அமிர்தராஜ் (27.05.2016--05.06.2022)

18. அருட்பணி. T. ஆரோக்கிய பாஸ்கர் (05.06.2022 ....)

வழித்தடம்: கிழக்கு கடற்கரைச் சாலையில்,  பட்டுக்கோட்டை நாச்சிக்குளம். இங்கிருந்து 6கி.மீ தொலைவில் தேவதாதனம் அமைந்துள்ளது.

திருத்துறைப்பூண்டி -நாச்சிக்குளம் -தேவதானம்

மன்னார்குடி -வேதபுரம் -தேவதானம்.

Location Map: St. Anne's Parish Church https://maps.app.goo.gl/3tAyuCrwXziqNmzv9

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. T. ஆரோக்கிய பாஸ்கர் அவர்கள்