133 புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், வில்லுக்குறி


புனித ஞானப்பிரகாசியார் ஆலயம்

இடம் : வில்லுக்குறி.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

பங்குத்தந்தை : அருட்பணி ஜெயக்குமார்
இணை பங்குத்தந்தை : அருட்பணி சகாய அருள் தேவ்.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித செபஸ்தியார் ஆலயம், மாடத்தட்டுவிளை.

குடும்பங்கள் : 157
அன்பியங்கள் : 4

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு.

புதன் கிழமை மாலையில் நவநாள் திருப்பலி.

திருவிழா : ஆகஸ்ட் மாதக் கடைசியில் பத்து நாட்கள்.

வில்லுக்குறி வரலாறு :

கி.பி 1909 ஆண்டில் வில்லுக்குறி என்னும் ஊரில் வாழ்ந்த மக்கள் மரத்தால் ஆன சிலுவையில் ஜெபித்து வந்தார்கள். அருட்தந்தை ரபேல் அவர்களின் முயற்சியால் 1909 ஆம் ஆண்டில் ஞானப்பிரகாசியார் குருசடியாக மாற்றப் பட்டது.

நாளடைவில் மீனவ மக்கள் இணைந்து அதிகமான இடத்தை குருசடிக்கு வாங்கினர். 1918 ஆம் ஆண்டில் மாடத்தட்டுவிளை தனிப்பங்கான போது அதன் கீழ் வில்லுக்குறி கிளைப் பகுதியும் இருந்தது.

சிலுவை வடிவிலான குருசடி ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு 25.10.1957 அன்று மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது