187 புனித அந்தோணியார் ஆலயம், இரும்பிலி


புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : நெசவாளர் தெரு, இரும்பிலி

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்

ஆயர் : மேதகு நசரேன் சூசை
பங்குத்தந்தை : அருட்பணி அருள்சீலன்

நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை

குடும்பங்கள் : 97
அன்பியங்கள் : 3

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு

திருவிழா : ஜூன் மாதத்தில் பத்து நாட்கள்

மண்ணின் மைந்தர்கள் :
அருட்பணி. A. M. செபஸ்தியான்

அருட்சகோதரி. மேரி டெய்சி.

வரலாறு :

தொடக்கத்தில் ஒரு சிறு குருசடி கட்டப்பட்டு மக்கள் ஜெபித்து வந்தனர்.

09-09-1951 ல் ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 30-08-1959 ல் கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு ஆஞ்ஞிசுவாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

முதலில் மாத்திரவிளை மற்றும் ரீத்தாபுரம் பங்குகளின் கிளைப்பங்காக இருந்தது. 1997 ஆம் ஆண்டு முதல் களிமார் பங்கின் கிளைப் பங்காக ஆனது. பின்னர் தனிப்பங்காக உயர்த்தப் பட்டது.

ஆலயத்திற்கருகில் புனித அந்தோணியார் குருசடி அமைக்கப்பட்டுள்ளது.

இரும்பிலி பகுதியில் சற்றே உட்புறமாக நெசவாளர் தெருவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

வழித்தடம் :

கருங்கல் - குளச்சல் வழித்தடத்தில், இரும்பிலி ஜங்சனில் இருந்து உட்புறமாகவும், ஆலஞ்சி -பனவிளை வழியாகவும் இவ்வாலயத்திற்கு வரலாம்.