601 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், ஏகணிவயல்

          

புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் 

இடம் : ஏகணிவயல்

மாவட்டம் : புதுக்கோட்டை 

மறைமாவட்டம் : தஞ்சாவூர் 

மறைவட்டம் : புதுக்கோட்டை

பங்குத்தந்தை : அருட்பணி. S. பால்ராஜ், MMI

உதவிப் பங்குத்தந்தை : அருட்பணி. சகாய சஜிபன், MMI

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்குகள்:

1. விளங்குளம் 

2. தேடாக்கி

3. பில்லங்குடி

4. பானாவயல் 

5. பயிர்கொல்லை

6. ஒல்லனூர் 

7. மைவயல் 

8. கீழ்குடி 

9. மண்ணகுடி 

10. கட்டுமாவடி

11. தட்டானிவயல்

12. நாகுடி 

13. பூந்தோட்டம் 

14. பெருமகளூர் 

15. மேட்டுப்பாளையம் 

16. புதுகிராமம் 

17. கொளக்குடி 

குடும்பங்கள் : 218 (கிளைப்பங்குகள் சேர்த்து 485)

அன்பியங்கள் : 8

வழிபாட்டு நேரங்கள் : 

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு.

நாள்தோறும் திருப்பலி : காலை 06.00 மணிக்கு. 

சனி மாலை 06.00 மணிக்கு செபமாலை, திருப்பலி. 

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.00 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை. 

மாதத்தின் முதல் சனி மாலை 06.00 மணிக்கு திருப்பலி தேர்பவனி மற்றும் ஆசீர்வாதம். 

திருவிழா : மே 21 ம் தேதி கொடியேற்றம், 30 ம் தேதி தேர்பவனி, 31 ம் தேதி திருவிழா. 

மண்ணின் மைந்தர்கள் :

1. அருட்பணி. ஞானதுரை 

2. அருட்பணி. டேவிட் செல்வகுமார். 

வழித்தடம் : 

புதுக்கோட்டை -அறந்தாங்கி - ஏகணிவயல் 18வது கி மீ.

(பேருந்து வழித்தடம் அறந்தாங்கி -கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைபட்டினம்)

Location map : St. Arokiyamatha Church

Eginivayal, Tamil Nadu 614630

https://maps.app.goo.gl/TMz6LvtdDKYnoJCa6

வரலாறு :

ஏகணிவயல் பெயர்க்காரணம்:

வயலும் வயல் சார்ந்த இடமும் மருதத்திணை. ஏகமான (ஏராளமான) வயல்கள் நஞ்செய் நிறைந்த இடம். 

ஏகமான கனிகள் நிறைந்த ஊர். 

ஏகமான கழனிகள் நிறைந்த ஊர்.

இந்த ஊரில் நெல் வேளாண்மையே முதன்மை தொழிலாக இருப்பதால், ஏகமான வயல்கள் நிறைந்த ஊரே ஏகணி(னி)வயல் எனப் பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. 

ஆலய வரலாறு :

ஏகணிவயல் மக்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு முன்பாக தனிச்சி அம்மன் எனும் குலதெய்வத்தை வணங்கி வந்துள்ளனர். தனிச்சி அம்மன் ஆலயம் இன்றும் கோட்டமனை (கோட்டைமனை) என்னும் இடத்தில் உள்ளது. 

தனிச்சி அம்மன் எனும் பெண் தெய்வத்தை இவர்கள் காலம்காலமாக வழிபட்டு வந்துள்ளதால், கிறிஸ்தவ மதத்தை தழுவிய பின்னர் தங்கள் குல தெய்வமாக மீண்டும் பெண்தெய்வமாக தேர்ந்தெடுக்கும் பொருட்டு, புனித ஆரோக்கிய அன்னையை தேர்ந்தெடுத்துள்ளனர் என கூறப் படுகிறது. 

இம்மக்கள் சுமார் 17 -ஆம் நூற்றாண்டில் (1650 களில்) கிறிஸ்தவம் தழுவியிருக்க வேண்டும். 

தொடக்கத்தில் ஒரு ஓலைக்குடில் ஆலயம் கட்டப்பட்டது.

அதன்பிறகு ஓடு வேய்ந்த ஆலயமும், அதனைத் தொடர்ந்து ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த ஆலயமும் கட்டப்பட்டது. 

தொடக்க காலங்களில் பட்டுக்கோட்டை பங்கின் கிளைப்பங்காகவும், அதன்பிறகு அறந்தாங்கி பங்கின் கிளைப் பங்காகவும் ஏகணிவயல் செயல்பட்டு வந்தது. 1988 ஆம் ஆண்டு ஏகணிவயல் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. A. சவரிமுத்து அவர்கள் பொறுப்பேற்றார். 

நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் சோலைவனமாக காட்சி தரும் ஏகணிவயலில் மாதாகோவில் குளத்தின் அருகினிலே அழகுற அமையப் பெற்ற எழில்மிகு புதிய ஆலயமானது அருட்பணி. A. சவரிமுத்து மற்றும் அருட்பணி. ஜான் பிரிட்டோ ஆகியோரின் பணிக்காலத்தில் கட்டப்பட்டு, 03.10.1993 அன்று அப்போதைய தஞ்சை மறைமாவட்ட ஆயர் மேதகு ஆரோக்கிய சாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

அருட்பணி. லோக்கையா பணிக்காலத்தில் 2006 ஆம் ஆண்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. 

21.05.2019 அன்று அருட்பணி. S. பால்ராஜ் MMI அவர்களின் முயற்சியால் ஆலய பீடம் மற்றும் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. 

அருட்பணி. S. பால்ராஜ் MMI அவர்களின் முயற்சியால், மக்களின் ஒத்துழைப்புடன் பீடத்தை சுற்றி SS Steel Gate அமைக்கப்பட்டு, மாதாவிற்கு தங்க கிரீடம் சூட்டப்பட்டு 08.09.2020 அன்று அருள்பணி. U. சவரிமுத்து (புதுக்கோட்டை மறைவட்ட முதல்வர்) அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

தனிச்சிறப்பு :

இவ்வாலயத்தில் ஏராளமான புதுமைகள் நடந்து வருவதால், சின்ன வேளாங்கண்ணி என அன்னையின் விசுவாசிகளால் புகழப்படுகிறது. இதனை மக்களிடம் எடுத்துச் சொன்னவர் இங்கு பங்குத்தந்தையாக இறைப்பணியாற்றிய அருட்பணி. மரியபிரிட்டோ அடிகளார் அவர்கள். மிக உயரமான கொடிக் கம்பம் அமைத்து,  வேளாங்கண்ணி மாதா பெரிய கொடியை கம்பீரமாக பட்டொளி வீச பறக்கச் செய்தவரும் அவரே.

குறிப்பாக மே 21 ம் தேதி திருவிழாவிற்கு  பயன்படுத்தப்படும் கொடியானது, வேளாங்கண்ணி திருத்தல பேராலயத்திலிருந்து புனிதம் செய்யப்பட்டு, எடுத்து வரப்பட்டு கொடியேற்றப்படுகிறது. 

ஆண்டுதோறும் அன்னையின் திருவிழா மே 21ந்தேதி கொடியேற்றப் பட்டு, மே 31வரை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 9 நாட்கள் மண்டகப்படி தாரர்களால் அன்னையின் சுரூபம் சின்னவீதி யில் சப்பரங்களில் மற்ற புனிதர்களுடன் எடுத்து வரப்படுகிறது. பின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பெறும். மே 30 ம் தேதி இரவு பெரிய தேர்பவனி பெரியவீதி வழியாக ஊரைச் சுற்றி, வாணவேடிக்கை, மேளதாளத்துடன் சிறப்பாக நடைபெறும்.

புனித சின்னப்பர் கெபி:

ஜூன் மாதம் முதல் வாரத்தில் இக்கெபியில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு, அன்பின் விருந்தும் (அன்னதானம்) வழங்கப்படுகிறது. 

பங்கில் உள்ள நிறுவனங்கள் :

1. புனித ஆரோக்கிய அன்னை மக்கள் மன்றம் 

2. தூய மரியன்னை R.C உயர்நிலைப் பள்ளி 

பள்ளிக்கூட வரலாறு :

1948 -ஆம் ஆண்டு ஆர். சி. துவக்கப் பள்ளி என்னும் பெயரில் துவக்கப் பட்டது. 

1949 ஆம் ஆண்டு ஜனவரியில் மறைதிரு. அந்தோனிசாமி பெல்லோரா அவர்களின் முயற்சியால் தற்காலிக அங்கீகாரம் பெறப் பட்டது. 

1950 நவம்பர் 11 ம் தேதியன்று மறைதிரு ஜான்வர் -டிசோசா முயற்சியால் பள்ளிக்கு அரசின் நிரந்தர அங்கீகாரம் பெறப்பட்டது. 

1964 ஆம் ஆண்டு 01.08.1964 அன்று ஆறாம் வகுப்பு துவங்கி, தூய மரியாள் ஆர். சி உயர் துவக்கப்பள்ளி என்ற பெயரால் நடத்தப்பட்டது. 

1976 ஆம் ஆண்டில் பள்ளிக்கு புதிய கட்டிடமானது கட்டப்பட்டு, 22.02.1976 அன்று தஞ்சை ஆயர் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு, புதுகை ஆட்சியர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

1991 ஆம் ஆண்டு ஏகணிவயலின் முதல் பங்குத்தந்தையாகவும், பள்ளியின் தாளாளராகவும் பொறுப்பேற்ற அருட்பணி. அ. சவரிமுத்து அவர்களின் முயற்சியால் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. 

1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அருட்பணி. ஜான் பிரிட்டோ அடிகளார் பொறுப்பேற்று கீற்றுக் கொட்டகையை ஓட்டு கட்டிடமாக மாற்றினார். 

1995 ஆம் ஆண்டு அலுவலக அறையோடு இணைந்த கழிப்பறை, தண்ணீர் வசதி, மின்விசிறி வசதிகள் செய்யப்பட்டன. 

2000 ஆம் ஆண்டில் புதிய பள்ளிக்கூட கட்டிடமானது கட்டப்பட்டு, 06.06.2000 அன்று தஞ்சை மறைமாவட்ட ஆயர் மேதகு டாக்டர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

2012 - 2013 ஆம் கல்வியாண்டு முதல் பள்ளியானது MMI சபை அருட்பணியாளர்களைக் கொண்டு இயக்கப் பட்டது. 

2014 ஆம் ஆண்டு அருட்பணி. ரெக்ஸ் குமார் MMI அவர்களின் முயற்சியால் போர்வெல் ஒன்று அமைக்கப் பட்டது. மேலும் 2015 ஆம் ஆண்டு கழிப்பறைகள் கட்டப் பட்டது. 

2016 ஆம் ஆண்டு அருட்பணி. ரெக்ஸ் குமார் அவர்களின் முயற்சியாலும், தஞ்சை மறைமாவட்ட ஆயர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ் அவர்களின் உதவியாலும் தொடக்கப்பள்ளி கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. 

2017 ஆம் ஆண்டு அருட்பணி. S. பால்ராஜ் MMI அவர்களின் முயற்சியால் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது. 

2019 ஆம் ஆண்டு அருட்பணி. S. பால்ராஜ் MMI அவர்களின் முயற்சியாலும், மேதகு ஆயர் அவர்களின் உதவியாலும் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. 

2018-2019 ஆம் கல்வியாண்டில் இப்பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.

2018 -2019 ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அருட்பணி. S. பால்ராஜ் MMI அவர்களின் முயற்சியால் மின்விளக்குகள், மின் விசிறிகள் புதிதாக அமைக்கப்பட்டன. மாணவர்களுக்கு சிறப்பு ஆங்கில பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்கள் 4 குழுக்களாக  பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர். 

2018 ல் ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களை அருட்பணி. S. பால்ராஜ் MMI அவர்களும், MMI சபை குருக்களும் பார்வையிட்டு பல உதவிகளை செய்தனர். 

இவ்வாறாக ஏகணிவயல் தூய மரியன்னை ஆர்.சி உயர்நிலைப் பள்ளி இப்பகுதி மக்களுக்கு சிறந்த கல்வியையும், ஒழுக்க நெறிமுறைகளையும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள் :

1. பங்குப்பேரவை

2. மரியாயின் சேனை 

3. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

4. இளையோர் இயக்கம்

5. இளம் பெண்கள் இயக்கம் 

6. பீடப்பூக்கள் 

7. பாடகற்குழு 

8. மறைக்கல்வி 

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி. சவரிமுத்து (1988-1993)

2. அருட்பணி. ஜான் பிரிட்டோ (1993-1998)

3. அருட்பணி. ஆரோக்கியசாமி (1998-2003)

4. அருட்பணி. ஜெரால்டு (2003-2005)

5. அருட்பணி. லோக்கையா (2005-2010)

6. அருட்பணி. மரிய பிரிட்டோ (2010-2013)

7. அருட்பணி. S. ரெக்ஸ் குமார், MMI (2013-2017)

8. அருட்பணி. S. பால்ராஜ், MMI (2017 முதல் தற்போது வரை..)

பங்கில் பணியாற்றிய MMI உதவிப் பங்குத்தந்தையர்கள்

1) அருட்பணி. கரோலின் சிபு (2013- 2014) 

2) அருட்பணி. அனிஷ் (2014-2015)

3) அருட்பணி. ராபின்சன் (2017) 

4) அருட்பணி. இகனஸ் தாஸ் (2018) 

5) அருட்பணி. சகாய ஜான் பிரிட்டோ (2018-2019)

6) அருட்பணி. சகாய சஜீபன் (2019- 2020)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. S. பால்ராஜ் MMI.