194 தூய அமலோற்பவ அன்னை ஆலயம், விலவூர்


தூய அமலோற்பவ அன்னை ஆலயம்

இடம் : விலவூர் : கன்னியாகுமரி

மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : கிளைப்பங்கு

பங்கு : தூய மரியன்னை ஆலயம், முளகுமூடு

பங்குத்தந்தை : அருட்பணி டோமினிக் கடாட்சதாஸ்

இணை பங்குத்தந்தை : அருட்பணி ஆரோக்கிய தாஸ்

குடும்பங்கள் : 40
அன்பியங்கள் : 2

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு

செவ்வாய்க்கிழமை : மாலை 06.00 மணிக்கு திருப்பலி, தொடர்ந்து அன்பியங்கள் நடைபெறும்.

திருவிழா : டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் மூன்று நாட்கள்.

வழித்தடம் :

நாகர்கோவில்-திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் அழகியமண்டபம் CSI ஆலயத்திற்கருகே உள்ள சிறிய சாலை வழியாக வந்தால் இவ்வாலயத்தை அடையலாம்.

வரலாறு :

விலவூரில் கி.பி 1963 ஆம் ஆண்டு ஓலையால் கட்டப்பட்டு மாதா குருசடியாக செயல்பட்டு வந்தது. கி.பி 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ICM சபை அருட்சகோதரிகள் முளகுமூட்டிலிருந்து வந்து இப்பகுதி குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மறைக்கல்வி போதித்தனர்.

கி.பி 1991 ஆம் ஆண்டில் கத்தோலிக்க சேவா சங்கத்தினரும், முளகுமூடு அருட்தந்தை லாரன்ஸ் அவர்களும் இணைந்து மக்களுக்கு ஆன்மீக விழிப்புணர்வு கொடுத்ததால் 1991 ல் இரண்டரை சென்ட் நிலம் வாங்கப்பட்டு 20.10.1992 அன்று முளகுமூடு பங்கின் கிளைப் பங்காக ஆனது.

21.11.2000 அன்று ஆலயம் விரிவு படுத்த ஆறு சென்ட் நிலம் வாங்கப்பட்டது. பின்னர் ஆலயம் அழகுற புதுப்பிக்கப்பட்டது.