604 புனித தோமினிக் சாவியோ ஆலயம், புலிவானந்தல்

     

புனித தோமினிக் சாவியோ ஆலயம் 

இடம் : புலிவானந்தல், போளூர் தாலுகா 

மாவட்டம் : திருவண்ணாமலை 

மறைமாவட்டம் : வேலூர் 

மறைவட்டம் : போளூர் 

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்குகள்:

1. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், அரும்பலூர் 

2. திருஇருதய ஆண்டவர் ஆலயம், கரைப்பூண்டி 

3. சனிக்கவாடி 

பங்குத்தந்தை : அருள்பணி. M. பாக்கியராஜ் மோயீசன்

குடும்பங்கள் : 136

அன்பியங்கள் : 5

ஞாயிறு காலை 08.00 மணிக்கு செபமாலை, 08.30 மணிக்கு திருப்பலி 

வாரநாட்களில் மாலை 06.30 மணிக்கு செபமாலை, 07.00 மணிக்கு திருப்பலி 

திருவிழா : மே 6 ம் தேதியை மையமாகக் கொண்ட ஐந்து நாட்கள். 

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருள்பணி. ஜான்துரை, Vellore (late) 

2. அருள்பணி. ஜெயசீலன், MSFS 

3. அருள்பணி. சூசைசேகர், இறையன்னை சபை

4. அருள்சகோதரி. ஜாய், கொன்சாகா சபை

5. அருள்சகோதரி. வெள்ளைரோஜா, கொன்சாகா சபை

6. அருள்சகோதரி. மலர்க்கொடி 

வழித்தடம் : 

போளூர் -சேத்துப்பட்டு வழித்தடத்தில் புளிவானந்தல் அமைந்துள்ளது. 

Location map :

https://maps.app.goo.gl/wmpXaAnrWUmW8B4P6

வரலாறு :

அழகிய சிறு கிராமமான புலிவானந்தல் பகுதியில் தொடக்கத்தில் சிறு ஆலயம் கட்டப்பட்டு, போளூர் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தின், சலேசிய சபை குருக்களால் வழிநடத்தப்பட்டு வந்தது. 

மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே புதிய ஆலயம் கட்டப்பட்டு பேரருள்பணி. ஜூவான் எட்மண்டோ வெச்சி, SDB (The Rector Major of the Salesian Congregation) மற்றும் பேரருள்பணி. லூசியானோ ஓடரிகோ, SDB (The General Councilor for the Mission) ஆகியோரால் 06.05.2001 அன்று அர்ச்சிக்கப் பட்டது.

2004 ஆம் ஆண்டில் புலிவானந்தல் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, சலேசிய சபையிடமிருந்து, வேலூர் மறைமாவட்ட குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. ஆரோக்கியசாமி அவர்கள் போறுப்பேற்று வழிநடத்தினார். 

மாதா கெபி ஒன்றும் உள்ளது. 

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

அன்பியம் 

பீடச்சிறார்

SYF இளைஞர் குழு

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல் : 

1. அருள்பணி. ஆரோக்கியசாமி (2004-2007)

2. அருள்பணி. ஜோசப் (2007-2010)

3. அருள்பணி. P. J. வின்சென்ட் (2010-2017)

4. அருள்பணி. M. பாக்கியராஜ் மோயீசன் (2017 முதல் தற்போது வரை..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. M. பாக்கியராஜ் மோயீசன்.