இடம் : வேளாங்கண்ணி
மாவட்டம் : நாகப்பட்டினம்
மறைமாவட்டம் : தஞ்சாவூர்
மறை வட்டம் : நாகப்பட்டினம்
நிலை : சிற்றாலயம்
செவ்வாய் மாலை 07.00 மணிக்கு செபமாலை மன்றாட்டு.
மாதத்தின் முதல் செவ்வாய் மாலை 07.00 மணிக்கு திருப்பலி.
திருவிழா : ஜனவரி மாதம் 20 ஆம் தேதி கொடியேற்றப்பட்டு, 26 ஆம் தேதி தேர்பவனியுடன் நிறைவு பெறும்.
வழித்தடம் : வேளாங்கண்ணி திருத்தலப் பேராலய பிரதான சாலையில், வலப்புறம் இவ்வாலயம் உள்ளது.
Location map :
St. Sebastian Church, Main Rd, Velankanni, Tamil Nadu 611111
வரலாறு :
வேளைநகரில் புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலப் பேராலயத்தின் அருகே அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலய வரலாற்றைக் காண்போம்.
கி.பி 1957 ஆம் ஆண்டில் வேளாங்கண்ணி வாழ் மக்களுக்கு ஏற்பட்ட வாந்தி, பேதி, அம்மை நோய்களின் பாதிப்பை போக்க பக்தர்கள், ஓலைகொட்டகை அமைத்து புனித செபஸ்தியார் சுரூபத்தை வைத்து வழிபட்டு வந்தனர்.
1967 ஆம் ஆண்டு முதல் புனித செபஸ்தியார் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
1977 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் வெள்ளத்தில் ஓலைகொட்டகை முழுவதும் சேதமடைந்தது. பின்னர் மக்களால் செங்கல், ஓடு, மரம், மணல் முதலிய பொருட்கள் வழங்கப்பட்டு சிற்றாலயம் அமைக்கப்பட்டது.
அதன்பின் 2002 ஆம் ஆண்டு இளைஞர்களின் பெரும் முயற்சியாலும், இறை மக்களின் நன்கொடைகளாலும் ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டு, அழகுற கட்டி முடிக்கப்பட்டு, 20.08.2004 அன்று வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை அருள்பணி. சா. அந்தோணிசாமி அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
1957 ஆம் ஆண்டு வைக்கப்பட்ட புனித செபஸ்தியார் சுரூபமானது, தற்போது ஆலயத்தின் மேற்கில் உள்ள கெபியில் வைக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலப் பேராலயம் செல்பவர்கள், மறவாமல் பேராலய பிரதான சாலையில் உள்ள இந்த எளிமையான அழகிய ஆலயம் செல்ல மறவாதீர்கள். ஆரவாரமின்றி அமைதியாக செபிக்க இவ்வாலயம் நமக்கு துணை நிற்கின்றது.