298 கார்மெல் குழந்தை இயேசு திருத்தலம், தஞ்சாவூர்


கார்மெல் குழந்தை இயேசு திருத்தலம்.

ஆலய பாதுகாவலி : கார்மெல் மாதா

இடம்: புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர்

மாவட்டம் : தஞ்சாவூர்
மறைமாவட்டம்: தஞ்சாவூர்

நிலை : திருத்தலம்

திருத்தல அதிபர் : அருட்பணி. வெண்சஸ்லாஸ், OCD.

திருத்தல திருவழிபாட்டு நிகழ்வுகள்:

திருப்பலி நேரம் : தினமும் காலை 06.00 மணி

வியாழன் நவநாள் திருப்பலிகள் :

காலை 06.00 மணி
காலை 09.00 மணி
 காலை 11.00 மணி
மாலை 06.00 மணி.

எல்லா நாளும் மதியம் 03.00 மணி. இரக்கத்தின் செபம்

முதல் வியாழன் :
எல்லா திருப்பலிக்குப்பின் புனித எண்ணெய் மந்திரித்து பூசப்படும். 11.00 மணி திருப்பலிக்குப்பின் அன்பு விருந்து நடைபெறும்.
3ம் வியாழன் அற்புதத் தேர் பவனி.

எல்லா மாதமும் பௌர்ணமி அன்று முழு இரவு செபம் நடைபெறும்.

திருவிழா:

ஜனவரி கடைசி வியாழன் கொடியேற்றத்தோடு ஆரம்பித்து, பிப்ரவரி முதல் வியாழன் அன்று திருவிழா மற்றும் ஆடம்பர அலங்கார தேர் பவனி நடைபெறும். 10,000க்கும் அதிகமாக மக்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆலய வரலாறு:

கார்மெல் குழந்தை இயேசு திருத்தலம் தஞ்சாவூரில் புதுக்கோட்டை ரோட்டில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி. மீட்டர் தொலைவில் புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் இயற்கை எழில் மத்தியில் அமைந்துள்ளது.

இவ்வாலயம் கார்மெல் மாதாவிற்காக 50 ஆண்டுகளுக்கு முன் கார்மெல் சபை துறவிகளால் எழுப்பப்பட்டது. பின் 35 ஆண்டுகளாக குழந்தை இயேசுவுக்கு நவநாள் செபம் எழுப்பி இன்று எல்லா வியாழக்கிழமைகளிலும் 3000 க்கும் அதிகமான மக்கள் வந்து செல்கின்றனர். முதல் வியாழக்கிழமைகளில் 5000க்கும் அதிகமாக மக்கள் வந்து செல்கின்றனர்.

"நீ என்னை மகிமை செய்யச் செய்ய நான் உன்னை ஆசிர்வதிப்பேன்" என்று வாக்களித்த குழந்தை இயேசு இன்று வரை தம்மைத் தேடி வந்த அத்தனை பேர் வாழ்விலும் அற்புதம் புரிந்துகொண்டே இருக்கிறார். அன்றாடம் சாட்சி சொல்பவர்கள் ஏராளம். தினமும் மக்கள் அற்புதம் காணும் புண்ணிய பூமியாக கார்மெல் குழந்தை இயேசு திருத்தலம் அமைந்துள்ளது.

தகவல்கள் அனைத்தையும் திரட்டி தட்டச்சு செய்து கொடுத்தவர் : அருட்பணி சுரேந்தர் OCD.