173 அலங்கார உபகார மாதா திருத்தலம், கன்னியாகுமரி


தூய அலங்கார உபகார மாதா திருத்தலம்

இடம் : கன்னியாகுமரி

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்

நிலை : திருத்தலம்

கிளை : புனித அந்தோணியார் ஆலயம், அஞ்சுகூட்டுவிளை

பங்குத்தந்தை : அருட்பணி #ஜோசப் #ரொமால்ட்

இணை பங்குத்தந்தையர்கள் :

அருட்பணி டோனிஜெரோம்
அருட்பணி சகாய ஸ்டாலின்
அருட்பணி வில்பிரட்

குடும்பங்கள் : 4500
அன்பியங்கள் : 91

ஞாயிறு திருப்பலி : காலை 05.00 மணி
காலை 07.00 மணி
காலை 11.00 மணி (ஆங்கிலம்)
மாலை : 04.00 மணி

திருவிழா : டிசம்பர் மாதத்தில் பத்து நாட்கள்.

வரலாறு :

புனித அலங்கார உபகார மாதா திருத்தலம் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் #கன்னியாகுமரி -யில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த கத்தோலிக்க ஆலயமாகும். இது புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும்.

இத்திருத்தலம் 100 ஆண்டுகள் பழமையானது.

இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவரான புனித தோமையார் 1ஆம் நூற்றாண்டில் கன்னியாகுமரி வருகை தந்தார். கன்னியாகுமரி வாழ் மக்கள் கிறித்தவ மறையைத் தழுவினர். ஆனால் இவர்கள் மத்தியில் ஆன்மீகப் பணி புரியவும், வழிபாடுகள் நிறைவேற்றவும் குருக்கள் எவருமே இருக்கவில்லை. 15ஆம் நூற்றாண்டில் கன்னியாகுமரியில் தூய புனித சூசையப்பர் ஆலயம் போர்த்துகிசிய ஆளுகையின் கீழ் இருந்தது. நெருப்பில் இந்த ஆலயம் அழிந்தது. 1496, 1526 ஆண்டு கல்வெட்டுக்கள் கன்னியாகுமரியில் பரதவர்கள் கத்தோலிக்க மறையைத் தழுவியிருந்தனர் என்பதற்கான அடையாளங்களாக உள்ளன.

கன்னியாகுமரியில் 16ஆம் நூற்றாண்டில் மகிழ்ச்சி மாதா ஆலயம் இருந்தது. இந்த ஆலயமே கன்னியாகுமரி வாழ் பரதவ குலகிறிஸ்தவர்களுக்கு பங்கு ஆலயமாக விளங்கிற்று.

1542-ம் ஆண்டு புனித பிரான்சிசு சவேரியார் கன்னியாகுமரி மகிழ்ச்சி மாதா குடிசைக் கோவிலுக்கு வருகை தந்தார், திருப்பலியும் நிறைவேற்றினர். புனித சவேரியார் முத்துக்குளித்துறை கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள் கூடியதும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்திகளைக் கூறியும் நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார். 1544ஆம் வருடம் பிரான்சிஸ் மன்சில (francis mansilasu) இறைப்பணி செய்துவந்தார். 1548 ஆம் வருடம் வடுகப்படையினர் கன்னியாகுமரியை முற்றுகையிட்டு சூறையாடினர். அச்சமயத்தில் பிரான்சிசு சவேரியார் கன்னியாகுமரி கிறித்தவர்களுடன் பாறையில் தங்கி இறைப்பணியைச் செய்துவந்தார். 1548ஆம் வருடம் இயேசு சபையின் மறைப்பரப்பு தளமாக இருந்தது.

1700 ஆம் வருடம், மகிழ்ச்சி மாதா குடிசைக் கோவில் தூய அலங்கார மாதா ஆலயமாக மாற்றினர். இந்த ஆலயம் உரோமை கட்டிடக்கலையில் கட்டப்பட்டது. தங்கப் பீடம் உருவக்கப்பட்டது. இந்த தங்கப் பீடத்தில் அலங்கார மாதாவின் அற்புத சுருபத்தை வைத்தனர். 1798 மாதாவின் தங்கதேர் உருவாக்கப்பட்டது. 1833 இல் புனித சூசையப்பர் தங்கதேர் உருவக்கப்பட்டது.

1544-ம் ஆண்டு தூய பிரான்சிசு சவேரியார் கன்னியாகுமரி மகிழ்ச்சி மாதா ஆலயத்துக்கு வருகை தந்தார். பழமைவாய்ந்த இந்த ஆலயத்தில் சவேரியார் திருப்பண்டம் அடங்கிய கதிர் பாத்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, 7 புனிதர்களின் திருப்பண்டம் அடங்கிய வெள்ளிப் பாத்திரமும் வைக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு அற்புதங்கள் நடைபெற்று வருகின்றன. உள்நாட்டிலிருந்து மட்டுமன்றி பல்வேறு நாடுகளிலிருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். உள்ளூரில் இருந்து இந்து, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தோரும் வருகின்றனர். இந்நிலையில், திருச்சபை சட்டத்தின் கீழ் 2011 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சனிக்கிழமை காலை நடைபெற்ற தேதி திருவிழா திருப்பலியில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் இந்த ஆலயத்தைத் திருத்தலமாக அறிவித்தார்.

முக்கிய நிகழ்வுகள் :

1700 ஆம் ஆண்டு தூய அலங்கார மாதா திருத்தலம் உருவானது.

1798 ல் மாதாவின் தங்கத்தேர் உருவானது.

1833 ல் தூய சூசையப்பர் தங்கத்தேர் உருவானது.

31-05-1900 ல் தற்போதைய திருத்தல அடிக்கல் நாட்டப்பட்டது.

1911 ல் தூய உபகார மாதா, தூய சூசையப்பர், திரு இருதய ஆண்டவர் சுரூபங்கள் இத்தாலியிலிருந்து கொண்டு வரப்பட்டது.

1914 ல் புதிய திருத்தலத்தில் முதல் திருப்பலி நிறைவேற்றப் பட்டது.

1917 ல் 103 அடி நீள வெளிநாட்டு கப்பலின் இரும்பு கொடிமரத்தை, தூத்துக்குடி வணிகர் மாதாவிற்கு காணிக்கையாக கொடுத்தார்.

1930 ல் மணக்குடி தாமரைக்குளம், குமரியிலிருந்து பிரிக்கப்பட்டு தனிப்பங்காக உயர்த்தப் பட்டது.

1943 ல் கோவளம், குமரியிலிருந்து பிரிக்கப்பட்டு தனிப் பங்கானது.

1954 ல் ஆலய பெரிய கோபுர வேலை தொடரப்பட்டது.

1955 ல் தங்கச்சிலுவை நிறுவப்பட்டது.

1956 ல் ஆலயப் பணிகள் நிறைவு பெற்றது.

1990 ல் ஆரோக்கியபுரம், குமரியிலிருந்து பிரிந்து தனிப் பங்கானது.

1999 ல் சின்னமுட்டம் தனிப் பங்கானது.

2001 ல் புதுக்கிராமம் தனிப் பங்கானது.

2003 ல் முதல் பங்குப்பேரவை அமைத்தல்

2009-2010 ல் ஆராதனை ஆலயம் கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டது.

2011 ல் திருத்தலம் -ஆக உயர்த்தப் பட்டது.

2012 ல் நற்கருணை ஆலயம் அர்ச்சிப்பு.

2014 ல் தங்கத்தேர் புதுப்பிப்பு.

சிறப்புகள் :

கடல் மட்டத்தில் இருந்து 13 அடி ஆழத்தில் இவ்வாலய அஸ்திவாரம் இருக்கிறது.

ஆலய சிம்மாசன பீடத்தில் வீற்றிருப்பவர் தூய உபகார அன்னை ஆவார்.

இந்த கோவிலின் முந்தைய கோவில் பீடத்தில் வீற்றிருப்பவர் தூய அலங்கார அன்னை.

இந்த இரு பெயர்களையும் இணைத்து "அலங்கார உபகார அன்னை" என்று கன்னியாகுமரி மக்கள் அழைத்து வருகின்றனர்.

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி-யில் இத்திருத்லம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.