731 புனித சூசையப்பர் ஆலயம், வேர்க்கொட்டு -இராமேஸ்வரம்

  

புனித சூசையப்பர் ஆலயம்

இடம்: வேர்க்கொட்டு, இராமேஸ்வரம், 623526

மாவட்டம்: இராமநாதபுரம்

மறைமாவட்டம்: சிவகங்கை

மறைவட்டம்: இராமநாதபுரம்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்கு: புனித பரலோக அன்னை ஆலயம், ஆத்திக்காடு

கடற்கரை -புனித அந்தோனியார் சிற்றாலயம்

பங்குப்பணியாளர்: அருட்பணி.‌ F. தேவசகாயம்

உதவிப் பங்குப்பணியாளர்: அருட்பணி.‌ X.‌ ஜேம்ஸ் ராஜா

குடும்பங்கள்: 422

அன்பியங்கள்: 20

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணி (பங்கு)

மாலை 05:30 மணிக்கு (கிளைப்பங்கு)

திங்கள், வியாழன் திருப்பலி: காலை 06:00 மணி

புதன், வெள்ளி, சனி திருப்பலி: மாலை 05:45 மணி

செவ்வாய் மாலை 05:15 மணிக்கு திருப்பலி (கடற்கரை புனித அந்தோனியார் சிற்றாலயம்)

திருவிழாக்கள்: 

புனித சூசையப்பர் பங்கு மே 01-ம் தேதி

கச்சத்தீவு புனித அந்தோனியார் தவக்கால இரண்டாவது வெள்ளி, சனி

கடற்கரை- புனித அந்தோனியார் ஜூலை 09-ம் தேதி

புனித பரலோக அன்னை ஆலயம் ஆகஸ்ட் 15-ம் தேதி

புனித ஆரோக்கிய அன்னை கெபி செப்டம்பர் 08-ம் தேதி

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்சகோதரி. விக்டோரியா, SMMI

2. அருட்சகோதரி. லியோனி தெரியா, SCC

Location map: https://maps.app.goo.gl/Wk1XTryYpRFCV8bC8

வரலாறு:

இயற்கை எழில் சூழ்ந்த அழகிய கடற்கரை ஊர் தான் இராமேஸ்வரம் தீவு. 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் சிறப்பான துறைமுகமாக இராமேஸ்வரம் விளங்கி வந்தது. கள்ளம் கபடமற்ற மக்களின் கண்ணியமான மீன்பிடிப்பில் தனித்துவமிக்க தீவாக ஒருகாலத்தில் திகழ்ந்தது. 

முற்காலத்தில் இராமேஸ்வரத்தில் மூலிகை சிறப்பு மிக்க வேர் கிடைத்து வந்தது. கிடைத்த இடம் புனித சந்தியாகப்பர் ஆலயம் இருந்த வேர்க்காடு என்னும் பகுதி ஆகும். ஆகவே மூலிகை வேர்களை ஏற்றுமதி செய்யும் பொருட்டு, படகுகளில் ஏற்றி கொட்டி வைத்த இடமே "வேர்க்கொட்டு" எனப் பெயர் பெற்றது.

கிறிஸ்தவ மீனவர்கள் அதிகம் வாழ்ந்த இப்பகுதியில் மணல்மேடுகள் அதிகம். இந்த மணல் மேடுகளில் மீனவர்கள், புனித சூசையப்பரை தங்களது பாதுகாவலராகக் கொண்டு, கூரைகொட்டகை ஆலயம் அமைத்து இறைவனை வழிபட்டு வந்தனர். இவ்வாலயத்தில் தங்கச்சிமடம் பங்கிலிருந்து அருட்பணியாளர்கள் அவ்வப்போது வந்து திருப்பலி நிறைவேற்றி வந்தனர். 

ஓலைகொட்டகை ஆலயம், ஓடு வேய்ந்த புதிய ஆலயமாக கட்டப்பட்டு 02.02.1985 அன்று, மதுரை பேராயர் மேதகு Dr. P. ஜஸ்டின் திரவியம், J.U.D., அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. கடலோடு போராடிய மீனவர்கள் வாழ்வு, விசுவாச வாழ்வாக மாற இவ்வாலயமும் பாதுகாவலரான புனித சூசையப்பரும் துணை நின்றனர்.

1987 ஆம் ஆண்டு மதுரை உயர் மறை மாவட்டத்திலிருந்து பிரிந்து, புதிதாக சிவகங்கை மறைமாவட்டம் உதயமானபோது முதல் ஆயராக மேதகு எட்வர்ட் பிரான்சிஸ் அவர்கள் பணிப் பொறுப்பேற்று வழிநடத்தினார். மேதகு ஆயர் அவர்களால் தங்கச்சிமடம் பங்கிலிருந்து பிரித்து, 20.11.1987 அன்று இராமேஸ்வரம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. டேவிட் சே. ச அவர்கள் பணிப் பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்திச் சென்றார்.

அருட்பணி.‌ மைக்கில்ராஜ். எஸ் பணிக்காலத்தில், புதிய ஆலய வெள்ளிவிழா நினைவாக விசுவாச திருக்கோபுரம் கட்டப்பட்டு, 01.05.2010 அன்று, சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு. செ. சூசை மாணிக்கம், D.D., அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

பங்கில் பணியாற்றும் SMMI அருட்சகோதரிகள்:

1. Sr. ஹெலன் சுகந்தி -தலைமைச் சகோதரி

2. Sr. அல்போன்சா

3. Sr. தெரசிட்டா

SMMI அருட்சகோதரிகள் (தஞ்சை). 24.05.1989 அன்று இச்சபை இல்லம் நிறுவப்பட்டது. கல்வி, மருத்துவம், குடும்பங்கள் மற்றும் நோயாளிகள் சந்திப்பு, சமுதாய, ஆன்மீக மேம்பாடு, நற்செய்தி அறிவிப்பு ஆகியவற்றை முக்கிய பணிகளாக சபை அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.

பங்கில் செயல்படும் பணிக்குழுக்கள் பக்த சபைகள்:

1. கிறிஸ்தவ வாழ்வுப் பணிக்குழு 

2. புனித சூசையப்பர் மற்றும் புனித பரலோக அன்னை பாடகற்குழுக்கள்

3. நற்செய்தி அறிவிப்பு பணிக்குழு

4. புனித சூசையப்பர், புனித பரலோக அன்னை மறைக்கல்வி மன்றங்கள்

5. புனித வளனார் இளையோர் இயக்கம்

6. புனித வின்சென்ட் தே பவுல் சபை

7. லீலி பீடப்பூக்கள்

8. வளனார் ஆசிரியர் பணிக்குழு

9. குடும்ப நலவாழ்வு பணிக்குழு

10. திருக்குடும்ப சபை

அன்பியங்கள்:

1. புனித லூர்து அன்னை

2. புனித ஜெபமாலை அன்னை

3. புனித வியாகுல அன்னை

4. புனித பாத்திமா அன்னை

5. கார்மேல் அன்னை

6. புனித காணிக்கை அன்னை

7. புனித செசிலியா

8. புனித சவேரியார்

9. புனித தோமையார்

10. புனித யோவான்

11. புனித பெனடிக்ட்

12. புனித பேதுரு

13. புனித பவுல்

14. புனித அந்தோனியார்

15. புனித அன்னை தெரசா

16. புனித இஞ்ஞாசியார்

17. புனித தொன்போஸ்கோ

18. புனித ஆரோக்கிய அன்னை

19. புனித தோமினிக் சாவியோ

20. புனித சூசையப்பர்

புனித ஜோசப் பள்ளி:

புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளி 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

நடுநிலைப் பள்ளியாக உயர்வு 1978 ஆம் ஆண்டு.

1989 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக உயர்வு.

2002 ஆம் ஆண்டு முதல் மேல் நிலைப் பள்ளியாக உயர்ந்தது.

2009 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு முதல் ஆங்கிலவழிக் கல்வி.

2014 ஆம் ஆண்டு முதல் 11 வகுப்பு ஆங்கிலவழிக் கல்வி.

பங்கில் பணியாற்றிய பங்குப்பணியாளர்கள் பட்டியல்:

1. அருட்பணி. D. டேவிட், SJ (1987-91)

2. அருட்பணி. P. S. அருள், SJ (1991-94)

3. அருட்பணி.‌ S சிங்கராயன், SJ (1994-96)

4. அருட்பணி.‌ K. சேசுராஜ் (1996-97)

5. அருட்பணி. A. சேசுராஜ் (1997-2003)

6. அருட்பணி.‌ R. S. இருதயராஜ் (2003-2007)

7. அருட்பணி. S. ஜேசு (2007-2008)

8. அருட்பணி.‌ S. மைக்கில் ராஜ் (2008-2012)

9. அருட்பணி. L. சகாயராஜ் (2012-2017)

10. அருட்பணி.‌ A. அந்தோணிசாமி (2017-2018)

11. அருட்பணி.‌ F. தேவசகாயம் (2018 முதல்..)

உதவிப் பங்குப்பணியாளர்கள்:

1. அருட்பணி.‌ வின்னி ஜோசப், SJ (1992-93)

2. அருட்பணி. கிறிஸ்டோபர், OFM Cap (1993-94)

3. திருத்தொண்டர். சத்தியமூர்த்தி (1994)

4. அருட்பணி. சகாயராஜ், OFM Cap (1995)

5. அருட்பணி.‌ சேவியர் ஜெய்சிங் (1995-96)

6. அருட்பணி. தெரஸ்நாதன், OFM Cap (1996)

7. அருட்பணி.‌ கிறிஸ்டோ,  OFM Cap (1996-97)

8. அருட்பணி. இம்மானுவேல் தாசன் (1997-98)

9. அருட்பணி. எட்வர்ட் ஜெயகுமார் (1998-99)

10. அருட்பணி. தைரியநாதன் (1999-2000)

11. அருட்பணி. மரிய அந்தோணி (2000-01)

12. அருட்பணி. ஞானதாசன் (2001-02)

13. அருட்பணி. அகஸ்டின் (2002-03)

14. அருட்பணி. அம்புரோஸ் லூயிஸ் (2004-2005)

15. அருட்பணி. தேவசகாயம் (2005-06)

16. அருட்பணி.‌ டன்ஸ்டன், கி. ச (2006-07)

17. அருட்பணி. ஸ்தனிஸ்லாஸ் (2007-08)

18.அருட்பணி. கென்னடி (2008-09)

19.திருத்தொண்டர். பாக்கியநரதன் (2009-10)

20. அருட்பணி. ஆரோக்கிய சாமி (2010-11)

21.அருட்பணி. சவரிமுத்து (2011-12)

22. அருட்பணி. தினேஷ் (2017-18)

23. அருட்பணி. ரிச்சர்ட், CSC (2018-19)

24. திருத்தொண்டர். ஜார்ஜ் வில்லியம், SMA (2019-20)

25. அருட்பணி. அ. சூசைராஜ், HGN (2020-21)

26. அருட்பணி. சே. ஜேம்ஸ் ராஜா (2021-2022)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குப்பணியாளர் அருட்பணி.‌ F. தேவசகாயம் அவர்கள்