இடம் : சின்னப்பம்பட்டி, சின்னப்பம்பட்டி அஞ்சல், ஓமலூர் தாலுக்கா, 636306
மாவட்டம் : சேலம்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : மேட்டூர்
நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய செல்வநாயகி அன்னை ஆலயம், எடப்பாடி
பங்குத்தந்தை : அருள்பணி. D. பிரான்சிஸ் ஆசைத்தம்பி
குடும்பங்கள் : 12
அன்பியம் : 1
சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு திருப்பலி.
திருவிழா : ஜனவரி மாதத்தில் மூன்றாவது வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு.
வழித்தடம் : எடப்பாடி -கொங்கணாபுரம் -எட்டிக்குட்டை மேடு -சின்னப்பம்பட்டி.
வரலாறு :
சின்னப்பம்பட்டி ஆலயமானது சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்தது. 1686 -ம் ஆண்டில் எடப்பாடி பங்கில் நடைபெற்ற பாஸ்கா விழாவின் போது காலரா நோய் பரவியது. இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள் மடிந்து போயினார். எனவே சேலம், சின்னப்பம்பட்டி ஆகிய ஊர்களுக்கு மக்கள் புலம் பெயர்ந்தனர். இவ்வேளையில் தான் சின்னப்பம்பட்டியில் கிறிஸ்தவம் துளிர் விட ஆரம்பித்தது.
சின்னப்பம்பட்டியிலும் குடிபெயர்ந்த மக்களுக்காக தொடக்கத்தில், ஓலை குடிசை ஆலயம் அமைத்து, புனித செபஸ்தியாரை பாதுகாவலராகக் கொண்டு மக்கள் இறைவனை வழிபட்டு வந்தனர்.
அக்காலத்தில் திரு. சின்னப்பசெட்டி என்பவரின் கனவினில் புனிதர் தோன்றி, பூதப்பாடி என்கிற ஊரில் புனித செபஸ்தியார் சுரூபம் இருப்பதாகவும், அதனை எடுத்து வந்து இவ்வாலயத்தில் வைக்க வேண்டும் என்று கூறியதைத் தொடர்ந்து, அவ்வாறே செய்யப்பட்டது.
தொடர்ந்து மக்களால் ஓடு வேய்ந்த ஆலயம் கட்டப்பட்டது.
இங்கு வாழ்ந்த மக்கள் வேலை தேடி சேலம், மும்பை, சென்னை, திருச்சி போன்ற பல ஊர்களுக்கும் சென்றனர். ஜனவரி மாதம் நடைபெறும் திருவிழாவில் அனைவரும் ஒன்றுகூடி திருவிழாவை சிறப்பிப்பார்கள்.
புதிய ஆலயம் அமைக்க எடப்பாடி பங்குத்தந்தை அருள்பணி. அல்போன்ஸ் அவர்களின் முயற்சியால்,
சின்னப்பம்பட்டியில் வசிக்கும் நல்லுள்ளங்கள் தாராளமாக கொடுத்த நிலத்தில், அருள்பணி. P. சேவியர் அவர்களின் பணிக்காலத்திலிருந்து, ஒவ்வொரு திருவிழாவின் போது மிகுதியாக கிடைக்கும் நிதிகளிலிருந்தும், அருள்பணி. லாசர், மற்றும் அருள்பணி. ஜான் போஸ்கோ பால் ஆகியோரின் காலத்தில் பெறப்பட்ட நிதியிலிருந்தும், மக்களின் ஒத்துழைப்புடன் தற்போது உள்ள புதிய ஆலயம் கட்டப்பட்டு, 2007 ம் ஆண்டு அர்ச்சிக்கப் பட்டது.
அருள்பணி. ஜேக்கப் அவர்களின் பணிக்காலத்தில் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டது. மேலும் ஆலயத்தை புதுப்பித்து, ஆலயத்தை சுற்றிலும் சுற்றுச்சுவரும் கட்டப்பட்டது.
தகவல்கள் : பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன், அருள்சகோதரர் மற்றும் ஆலய கோவில்பிள்ளை.
தகவல்கள் சேகரிப்பு : SPB காலனி பங்கின் பீடச்சிறுவன்.