இடம் : மார்த்தாண்டன்துறை (மார்த்தாண்டம்துறை)
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : திருவனந்தபுரம் உயர் மறை மாவட்டம்
மறை வட்டம் : தூத்தூர்
நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்கு :
புனித சூசையப்பர் ஆலயம், சூசைபுரம், மார்த்தாண்டன்துறை
பங்குத்தந்தை : அருட்பணி. அசிசி ஜோண் சுமேஷ்
குடும்பங்கள் : 1407
அன்பியங்கள் : 40
ஞாயிறு காலை 05.20 மணிக்கு முதல் திருப்பலி. காலை 08.00 மணிக்கு இரண்டாம் திருப்பலி. காலை 09.45 மணிக்கு மூன்றாவது திருப்பலி.
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 06.00 மணிக்கு திருப்பலி.
சனிக்கிழமை காலை 06.00 மணிக்கு திருப்பலி கெபியில்.
திருவிழா :
புனித வியாகுல மாதா திருவிழா செப்டம்பர் 15 -ஆம் தேதி நிறைவு பெறும் வகையில் பத்து நாட்கள்.
புனித லூர்து மாதா திருத்தல பெருவிழா பெப்ரவரி 11 -ஆம் தேதி நிறைவு பெறும் வகையில் ஏழு நாட்கள். 11 ஆம் தேதி ஆயர் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட பிரசாதம் (பச்சரிசி, பயிறு, கடலை, கருப்புக்கட்டி, தேங்காய் கலந்த கலவை) வழங்கப்படும். இதனை இறைமக்கள் நோய் நீக்கும் அருமருந்தாக பெற்றுச் சென்று நலமடைகிறார்கள்.
மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி. ஆன்றனி சேவியர் (late)
2. மேதகு பேராயர். சூசைபாக்கியம் (திருவனந்தபுரம் உயர் மறை மாவட்டம்)
3. அருட்பணி. வில்லியம் சிறில்
4. அருட்பணி. ஸ்டெல்லஸ் (late)
5. அருட்பணி. சில்வெஸ்டர்
6. அருட்பணி. ஜெறோம் அல்போன்ஸ்
7. அருட்பணி. பிரெடி சாலமன்
8. அருட்பணி. ஜோசப் பிரசாத்
9. அருட்பணி. மரிய தாமஸ் ஆஸ்டின்
10. அருட்பணி. ஆன்ஸலம் சரோஜம்
11. அருட்பணி. ஜோஸ் பிராங்க்ளின்
12. அருட்பணி. மைக்கேல் ஆல்பினோ (late)
13. அருட்பணி. டோனி லூயிஸ் போள்
14. அருட்பணி. பிரபின்
15. அருட்பணி. ஜெனிஸ்டன்
16. அருட்பணி. சபரியார்.
அருட்சகோதரிகள் :
1. அருட்சகோதரி. நான்சி (late)
2. அருட்சகோதரி. ஸ்டெல்லா
3. அருட்சகோதரி. செலின் ஆன்றனி
4. அருட்சகோதரி. பிரிஜிட்
5. அருட்சகோதரி. அன்னமேரி
6. அருட்சகோதரி. சுபி பெர்க்மான்ஸ்
7. அருட்சகோதரி. இந்திரா
8. அருட்சகோதரி. ஹெலன்மேரி
9. அருட்சகோதரி. ரெஜி
10. அருட்சகோதரி. மெஸ்ரா சில்வா
11. அருட்சகோதரி. சுஜி
12. அருட்சகோதரி. டயானா
13. அருட்சகோதரி. சினி
14. அருட்சகோதரி. சுபி
15. அருட்சகோதரி. மேரி ஹிமா
16. அருட்சகோதரி. மேரி ஹிஸ்மா
வழித்தடம் :
நாகர்கோவில் -மார்த்தாண்டம் -களியக்காவிளை -கொல்லங்கோடு -மார்த்தாண்டன்துறை.
பேருந்துகள் : மார்த்தாண்டம் to bus no : 82, 82A, 82B, 82C, 82K, 82F, 82G, 83C, PCG.
நாகர்கோவில் to bus no : 382, 382A, 382M,
மணக்குடி, சின்னமுட்டம் to 302,
கருங்கல் to 383.
Location map : https://maps.google.com/?cid=10864990753652654040
ஆலய வரலாறு :
தென் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்மேற்கு எல்லைப்பகுதியான கொல்லங்கோடு கிராமத்தின் ஒரு கடலோர பகுதி தான் மார்த்தாண்டன்துறை. இக் கிராமம் தெற்கே அரபிக்கடலாலும் வடக்கே ஏ. வி. எம் கால்வாயாலும் சூழப்பட்டு எப்போதும் ஈரப்பதம் நிறைந்த காற்றைத் தந்து, இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக மனதை வருடிச் செல்கிறது.
பெயர்க்காரணம்:
மார்த்தாண்டன்துறைக்கு மூன்று பெயர்க்காரணங்கள் உள்ளன. அவற்றில் முதலாவதாக பழங்காலத்தில் சாலைவசதி இல்லாமையால் மக்கள் நடை பயணமாகவும் நீர்வழியாகவும் இடம்விட்டு இடம் செல்ல வேண்டியிருந்தது. ஆகவே அன்றைய மன்னராகிய மார்த்தாண்டவர்மா ஒரு கால்வாயை வெட்டி, கிழக்கே மண்டைக்காடு முதல் மேற்கே பூவார் வரை நீர் ஓடச் செய்தார். இந்தக் கால்வாயின் முக்கியப்பகுதி இவ்விடத்தில் வந்ததால் மன்னருடைய பெயரை இணைத்து மார்த்தாண்டன்துறை என பெயர் வந்ததாகவும்.....!
இரண்டாவதாக அரசர் மார்த்தாண்டவர்மாவின் காலத்தில் திருவிதாங்கூரில் வாழ்ந்து வந்த எட்டுவீட்டு பிள்ளைமார் குடும்பத்திற்கும், அரசருக்கும் ஆட்சியமைப்பது தொடர்பாக போர் நடந்ததாகவும், நீண்ட நாட்களாக நடந்த இப்போரில் கிறிஸ்தவர்களின் துணையால் எட்டுவீட்டு பிள்ளைகள் குடும்பம் படுதோல்வி அடைந்தது. எனவே இவர்களது குடும்பத்து பெண்களை அரசர் மார்த்தாண்டவர்மா சிறைபிடித்து நாடுகடத்தி, கிறிஸ்தவர்களுக்கு திருமணம் செய்து வைத்து இப்பகுதியில் குடியமர்த்தினார். இப்பெண்களை திருமணம் செய்ததில் முக்கிய படைவீரராக திகழ்ந்தவர் மார்த்தாண்டன். ஆகவே அவரது பெயரையும் இணைத்து மார்த்தாண்டன்துறை என அரசர் பெயரிட்டதாகவும்...
மூன்றாவதாக இதே காலகட்டத்தில் திருவிதாங்கூர் அரசருக்கும், டச்சுப் படைகளுக்கும் நடந்த மோதலில் மன்னர் வங்காளத்திலிருந்து ஒரு நீர்மூழ்கிப் படையை வரவழைத்து, கிறிஸ்தவர்களின் தலைமையில் குளச்சல் முதல் கேரளாவின் தென்பகுதியில் உள்ள எல்லா ஆசான்களையும் ஒருங்கிணைத்து 'கடலோர பாதுகாப்பு சேனைப்படை ' யை நிறுவினார். இதில் முக்கிய ஆசானாக மார்த்தாண்டன்துறை ஆசான் விளங்கியதால் இவ்விடத்திற்கு தனிமரியாதை உருவானது.
இதன் விளைவாக இங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் தங்களுக்கு ஒரு ஆலயம் தேவை என்பதை உணர்ந்து அரசிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க, கி.பி 1710 ம் ஆண்டு அரசரால் ஆலயம் கட்டப்பட்டது. ஆகவே இவ்வாலயம் அரசரால் கட்டப்பட்டதால் மார்த்தாண்டன்துறை எனப் பெயர் வந்ததாகவும் கூறப் படுகிறது.
இவ்வூர் மக்கள் பல போர்கள், கொடிய நோய்கள் தாக்குதல்களால் பல இடங்களில் சிதறுண்டு போய் குடியமர்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.
இவ்விடத்தில் சுமார் 5 முதல் 8 ம் நூற்றாண்டிற்கு முன்பே கிறிஸ்துவை பின்பற்றுகின்ற குடும்பங்கள் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து 1542 ல் புனித பிரான்சிஸ் சவேரியார் வருகையும், அதனைத் தொடர்ந்து கொச்சி- யில் வந்திறங்கிய வெளிநாட்டு மிஷனரி குருக்கள் திறந்த வெளிகளிலும், சிறு குடில்களிலும், சிறு ஆலயங்களிலும் மக்களைக் கூட்டி ஒருங்கிணைத்து வழிபாடுகளை நடத்தினர்.
மேலும் 1741 ல் நடந்த திருவிதாங்கூர் - டச்சுப் போரின் போது டச்சு படையினர் கடல்வழி வந்து போரிட்டனர். இப்போரில் கைதான பெல்ஜியம் நாட்டின் டிலனோய் (Dilnoy) பின்னர் திருவிதாங்கூர் படைத்தளபதியானர். இதன் வழியாக கிறிஸ்தவ குடும்பங்கள் பெருகியது. இந்தப் போரின் போது எல்லா ஊர்களிலும் இறந்தவர்களை இரகசியமாக புதைத்ததால், இன்றுவரை இப்பகுதியில் இறந்தவர்களை புதைத்தபின் கல்லறை கட்ட அனுமதி இல்லை என கூறுகின்றனர். இப்படி வளர்ந்து வந்த சமுதாயத்தை கல்வியறிவு புகட்ட ஒரு பள்ளிக்கூடம் தேவையென்பதை உணர்ந்து 1800 ல் மரச்சுவட்டிலும், (மரத்தின் நிழலில்), 1900 ம் ஆண்டு வரை ஓலைக் குடிசை பள்ளியிலும் கல்வி பயிற்றுவிக்கப் பட்டது. 1917 ல் செம்மண் கட்டியால் (மண்ணால் உருவாக்கப்பட்ட கல்) அருட்தந்தை. நேவிஸ் அவர்களால் கட்டப்பட்டது.
நாளடைவில் பழுதடைந்த கட்டிடத்தை புதுப்பித்து புதிய கட்டிடமாக 1938 ல் தாளாளர் அருட்தந்தை. பீட்டர் புத்தன்புரைக்கல் அவர்கள் உருவாக்கினார்.
நாளுக்கு நாள் மக்களின் விசுவாசம் அதிகரிக்க, 1939 இல் ஒரு கெபி கட்ட அடிக்கல் போடப்பட்டு, அனைவரின் ஒத்துழைப்புடன் பணிகள் நிறைவு பெற்று 11-11-1939 அன்று கொச்சி ஆயர் மேதகு டோம் அபிலியோ அகஸ்றோ அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. பல்வேறு புதுமைகள் இந்த கெபியில் நடந்ததால் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து ஜெபித்து ஆசீர்வாதங்களை பெற்றுச் சென்றனர். குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த கெபியில் வந்து ஜெபித்து குழந்தைப்பேறு பெற்று, சாட்சி பகிர்கின்றனர்.
பருத்தியூர் முதல் வள்ளவிளை வரை ஒரே பங்காக ஒருங்கிணைத்து, அருட்தந்தை. நேவிஸ் (1926-1930) அவர்கள் இங்கேயே தங்கி பணியாற்றினார்.
வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடி ஆகிய பங்குகளை ஒருங்கிணைத்து அருட்தந்தை. ஜோர்ஜ் கன்னாங்கரிக்கல் (1940-1948) அவர்கள் சிறப்பாக வழி நடத்தினார்கள்.
தொடர்ந்து அருட்தந்தை. மைக்கேல் ஜோண் (1948-1949) துணை பங்குத்தந்தை அருட்தந்தை. ஜோண் பனக்கலும் பணிபுரிந்தனர்.
பின்னர் அருட்தந்தை. பிலிப் அ. சேவியர் அவர்களும் தொடர்ந்து அருட்தந்தை. ஜோண் பனக்கல் அவர்களும் பணியாற்றினர்.
அருட்தந்தை. நிக்கோலஸ் டிக்கோஸ்ற்றா (1957-1968) பணிக்காலத்தில் மார்த்தாண்டம்துறை பங்கு, வள்ளவிளை பங்குடன் இணைக்கப்பட்டது. பின்பு அருட்தந்தை. றோக்கி பெர்னாண்டஸ் பணிக்காலத்தில் மார்த்தாண்டம்துறை தனிப்பங்காக பிரிக்கப்பட்டு, 05-05-1966 ல் அருட்தந்தை. பிரான்சிஸ் டி சில்வா முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.
1932 ல் திருவனந்தபுரம் உயர் மறை மாவட்டம் உருவானபோதும் மார்த்தாண்டம்துறை கொச்சி மறை மாவட்டத்தின் ஒருபகுதியாக இருந்தது. பின்னர் 1952 ல் முறைப்படி திருவனந்தபுரம் உயர் மறமாவட்டத்துடன் இணைந்தது.
இவ்வேளையில் பழைய ஆலயம் பழுதடைந்ததால் மாற்று இடத்தில் 15-03-1960 ல் புதிய ஆலயத்திற்கு உயர் மறை கர்தினால் ஜேம்ஸ் றோபர்ட் க்னோக்ஸ் அவர்களால் அடிக்கல் போடப்பட்டது.
அருட்தந்தை. சேவியர் அலெக்சாண்டர் அவர்களின் முயற்சியால் பள்ளிக்கூடம் உயர்நிலைப் பள்ளியாக 1978 ல் தரம் உயர்த்தப்பட்டது.
அருட்பணி. றோமன்ஸ் அவர்கள் புதிய ஆலயத்தின் பணிகளை தீவிரப்படுத்தினார். மேலும் அருட்தந்தை. றோமன்ஸ் அவர்களது முயற்சியால் பள்ளிக்கூடம் மேல்நிலைப்பள்ளியாக உயர்த்தப் பட்டு 25.10.1985 அன்று மேல்சபை உறுப்பினர் திரு. ஜே.பி. ஆர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
மேலும் அருட்தந்தை. ஜோண். டி. போஸ்கோ அவர்களின் பணிக்காலத்தில் Sisters of charity of St Ann சபை அருட்சகோதரிகளை வரவழைத்து, 15.07.1998 ல் அருட்சகோதரிகள் இல்லத்திற்கு அடிக்கல் போடப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 26.01.1999 அன்று மேதகு ஆயர் சூசை பாக்கியம் அவர்களால் திறக்கப்பட்டது.
இவ்வூரின் மக்கள்தொகை அதிகரித்ததால் அரசின் இலவச குடியிருப்பு திட்டத்தின் கீழ் கிடைத்த 133 வீடுகளோடு சேர்த்து 150 குடும்பங்கள் தரிசு நிலமான கலிங்கராஜபுரத்தில் குடியமர்த்தப் பட்டனர். இவர்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு இணங்க அருட்தந்தை. ஜோண் டி போஸ்கோ அவர்களின் தீவிர முயற்சியால் அனைவரின் ஒத்துழைப்புடன் ஒரு துணை ஆலயம் கட்டப்பட்டு 20-03-1997 அன்று ஆயர் மேதகு சூசை பாக்கியம் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. இவ்வாலயம் அமைந்துள்ள இடம் மண்ணின் மைந்தரான ஆயர் சூசை பாக்கியம் அவர்களின் நினைவாகவும், பாதுகாவலர் புனித சூசையப்பரின் நினைவாகவும் சூசைபுரம் என பெயர் சூட்டப்பட்டது.
மேலும் அருட்தந்தை. ஜோண். டி. போஸ்கோ அவர்களின் பணிக்காலத்தில் Sisters of charity St Ann சபை அருட்சகோதரிகளை வரவழைத்து, 15.07.1998 ல் அருட்சகோதரிகள் இல்லத்திற்கு அடிக்கல் போடப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 26.01.1999 அன்று மேதகு ஆயர் சூசை பாக்கியம் அவர்களால் திறக்கப்பட்டது.
அருட்பணி. ஆன்றோ ஜோரிஸ் அவர்களின் முயற்சியால் நற்கருணை ஆராதனை ஆலயம் கட்டப்பட்டு 11-02-2006 அன்று ஆயர் மேதகு சூசை பாக்கியம் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
மதர் தெரசா குருசடி:
ஊரின் அமைதியைக் காக்கும் பொருட்டு, அருட்தந்தை. ஆன்றோ ஜோரிஸ் அவர்களின் முயற்சியால், பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் மதர் தெரசா குருசடி கட்டப்பட்டு, 11.02.2010 அன்று மேதகு ஆயர் சூசை பாக்கியம் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டு, இந்த இடத்திற்கு மதர்தெரசா ஜங்சன் எனப் பெயரும் வழங்கப்பட்டது. அன்னை தெரசாவின் நாளில் குருசடியில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த குருசடியில் மக்கள் நாள்தோறும் வந்து ஜெபித்து இறைவனின் ஆசீர் பெற்றுச் செல்கின்றனர்.
புனித பிரான்சிஸ் சவேரியார், அருளாளர் தேவசகாயம் பிள்ளை மற்றும பல ஆன்மீக குருக்களின் கால்தடம் பதிந்த மார்த்தாண்டம்துறை, தற்போது பங்குத்தந்தை அருட்தந்தை. அசிசி ஜோண் சுமேஷ் அவர்களின் வழிகாட்டுதலில் சிறப்பாக வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மார்த்தாண்டம்துறை வெளிநாடு வாழ் இந்தியர்கள் சங்கம், அமீரகம்.
கடல் கடந்து சென்றாலும் மார்த்தாண்டம்துறை பங்கு மக்கள் அனைவரும் புனித வியாகுல மாதாவின் மீது மிகுந்த விசுவாசம் கொண்டவர்கள். ஆகவே அமீரகத்தில் பணிபுரியும் இப்பங்கு மக்கள் 2004 -ம் வருடம் Marthandamthurai Expatriates Association என்கிற அமைப்பைத் தொடங்கி இன்று வரை சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன் உறுப்பினர்கள் அனைவரும் இந்த நாட்டில் பணிபுரியும் மார்த்தாண்டம்துறை பங்கு மக்கள் ஆவார்கள். தற்போதைய உறுப்பினர்கள் எண்ணிக்கை - 80 ஆகும். புனித வியாகுல மாதா திருவிழா, அமீரகம். எல்லா வருடமும் செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரம் வெள்ளிக்கிழமையில் தேர் பவனியும், திருவிழா திருப்பலியும் ஒருங்கிணைத்து கொண்டாடி வருகின்றனர் என்பது தனிச்சிறப்பு.
மேலும், மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையிலும், விளையாட்டு ஆர்வத்தை வளர்க்கும் விதத்திலும் வருடத்திற்கு ஒருமுறை ஆண்டுவிழா கலைநிகழ்ச்சிகளும், ஒருமுறை விளையாட்டுப்போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :
1. மரியாயின் சேனை
2. பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை
3. திருஇருதய சபை
4. வியாகுல மாதா சபை
5. கார்மல் மாதா சபை
6. புனித வின்சென்ட் தே பவுல் சபை
7. இளைஞர் இயக்கம் (Jesus Youth)
8. Sodality.
Trust:
1. Mother Theresa Trust
2. Trivandrum Social Service Society (TSSS)
Parish Club :
Social Education Centre (SEC)
பங்கின் பங்குத்தந்தையர்கள் :
1. அருட்பணி. நேமீஸ் (1916 -1921)
2. அருட்பணி. நஸியான் (1921-1930)
3. அருட்பணி. சிறில் டிக்கோஸ்ற்றா (1930-1936)
4. அருட்பணி. பீற்றர் புத்தன்புரைக்கல் (1936-1940)
5. அருட்பணி. ஜோர்ஜ் கன்னாங்கரிக்கல் (1940-1948)
6. அருட்பணி. ஜோண் பனக்கல் (1940-1958)
7. அருட்பணி. பிலிப் அ. சேவியர் (1954-1956)
8. அருட்பணி. நிக்கோலஸ் டிக்கோஸ்ற்றா (1958-1961)
9. அருட்பணி. றோக்கி பெர்னாண்டஸ் (1961-1967)
10. அருட்பணி. பிரான்சிஸ் டி. செல்வா (1967-1971)
11. அருட்பணி. ஜெரால்ட் சில்வா (1971-1972)
12. அருட்பணி. பார்லோ டிக்றூஸ் (1972-1974)
13. அருட்பணி. சில்வெஸ்டர் மொறாயீஸ் (1975-1976)
14. அருட்பணி. சேவியர் அலெக்சாண்டர் (1976-1982)
15. அருட்பணி. றோமான்ஸ் (1982-1988)
16. அருட்பணி. சூசை பாக்கியம் (1988)
17. அருட்பணி. டோமினிக் ச. மரியா (1988-1989)
18. அருட்பணி. ஆன்ட்ரூ (1989-1990)
19. அருட்பணி. பிரான்சிஸ் த. ரொசாரியோ (1990)
20. அருட்பணி. ஆன்றனி பி. ஜே (1990-1994)
21. அருட்பணி. ஜோண் டி. போஸ்கோ (1994-1997)
22. அருட்பணி. ஆன்ட்ரூ கோஸ்மாஸ் (1997-1999)
23. அருட்பணி. டைசன் (1999)
24. அருட்பணி. ஜெறோம் ஜி. பெர்னாண்டஸ் (1999-2003)
25. அருட்பணி. நிக்கோலஸ் த (2003)
26. அருட்பணி. பெபின்சன் (து. பங்குத்தந்தை) (2003)
27. அருட்பணி. ஆன்ட்ரூ கோஸ்மாஸ் (2003-2006)
28. அருட்பணி. அருள்ராஜ் (து. பங்குத்தந்தை) (2004-2005)
29. அருட்பணி. ஆன்றோ ஜோரிஸ் (2005-2010)
30. அருட்பணி. ஜோணி (து. பங்குத்தந்தை) (2009-2010)
31. அருட்பணி. பாஸ்கர் ஜோசப் (2010-2012)
32. அருட்பணி. ஆன்றனி (து. பங்குத்தந்தை) (2011-2012)
33. அருட்பணி. கோஸ்மாஸ் தோப்பில் (2012-2015)
34. அருட்பணி. ஸ்டீபன் (2015-2016)
35. அருட்பணி. சேவியர் (து. பங்குத்தந்தை) (2015-2016)
36. அருட்பணி. சேவியர் (2016-2018)
37. அருட்பணி. இயேசுராஜ் (து. பங்குத்தந்தை) (2016-2017)
38. அருட்பணி. குழந்தை இயேசு (து. பங்குத்தந்தை) (2017-2018)
39. அருட்பணி. ஜேக்கப் ஸ்டெல்லஸ் (2018-2019)
40. அருட்பணி. அசிசி ஜோண் சுமேஷ் (2019 முதல் தற்போது வரை)
தகவல்கள் : பங்குத்தந்தை அருட்தந்தை. அசிசி ஜோண் சுமேஷ் மற்றும் பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் பங்கு உறுப்பினர்.
வரலாறு : பங்கின் குடும்ப அட்டை -யிலிருந்து எடுக்கப்பட்டது.