464 புனித அடைக்கல அன்னை ஆலயம், கண்ணம்பாளையம்


புனித அடைக்கல அன்னை ஆலயம்

இடம் : கண்ணம்பாளையம்

மாவட்டம் : கோவை
மறை மாவட்டம் : கோவை
மறை வட்டம் : கோவை

நிலை : பங்குத்தளம்

பங்குத்தந்தை : அருட்பணி. D. ஆன்டனி ஜேசுராஜ்

குடும்பங்கள் : 280

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு காலை 06.15 மணி மற்றும் காலை 08.00 மணிக்கு திருப்பலி.

திங்கள், செவ்வாய், வியாழன் காலை 06.30 மணிக்கு திருப்பலி.

புதன், வெள்ளி மாலை 06.30 மணிக்கு திருப்பலி.

சனிக்கிழமை மாலை 06.30 மணிக்கு திருப்பலி, அடைக்கல மாதா நவநாள்.

மாதத்தின் முதல் வெள்ளி மற்றும் முதல் சனி சிறப்பு நவநாட்கள், ஆராதனை, மறையுரை.

திருவிழா : அக்டோபர் மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை.

மண்ணின் மைந்தர்கள் :

1.அருட்பணி. ஆல்பர்ட் செல்வராஜ் (late)
2.அருட்பணி. துரை வில்லியம்
3.அருட்பணி. ஹையசிந்
4.அருட்பணி. ஜாய் ஜெயசீலன்
5.அருட்பணி. அந்தோணி யேசு ராஜ்
6.அருட்பணி. பீட்டர் மரிய தாஸ்
7.அருட்பணி. அலெக்ஸ் அந்தோணி சாமி
8.அருட்பணி. அலெக்ஸ் ஆண்டனி லாரன்ஸ்

9.Bro.அல்போன்ஸ் (late)
10.Bro.அருள் சாமி (late)
11.Bro.சூசை பிரிட்டோ (late)
12.Bro. A. மத்தியாஸ் (late)
13.Bro.மத்தியாஸ் (late)
14.Bro.சிரில்
15.Bro.வில்லியம்
16.Bro.ஜெரால்டு
17.Bro. ஆல்பர்ட்

18.Sr. புளோரா மேரி (late)
19.Sr. பிலிப் (late)
20.Sr. செசிலி (late)
21.Sr. மார்த்தா (late)
22.Sr. ஜான் (late)
23.Sr. அகஸ்டா (late)
24.Sr. அடைக்கல மேரி (late)
25.Sr. ஆரோக்கிய மேரி (late)
26.Sr. சிமோனி (late)
27.Sr. கில்பர்ட் (late)
28.Sr. பசிலீசியா
29.Sr. டெய்சி
30.Sr. எமிலியானா
31.Sr. சாம் அமலி
32.Sr. ஜெரிகாட்
33.Sr. ஜோஸ்பின்
34.Sr. மார்க்ரெட் மேரி
35.Sr. பிலோமினா
36.Sr. ஜோஸ்பின் மேரி
37.Sr. ஜார்ஜியா
38.Sr. பிலோமினா
39.Sr. லில்லி செலின்
40.Sr. ஷோபியா
41.Sr. ஆரோக்கிய மேரி
42.Sr. லீமா
43.Sr. ஆஞ்சலின்
44.Sr. ஜெய மேரி
45.Sr. மேரி நிர்மலா
46.Sr. அன்னாமேரி
47.Sr. விக்டோரியா
48.Sr. விமலா ஜோவிதா
49.Sr. சாந்தி
50.Sr. ஷீலி
51.Sr. திவ்யா பிரின்ஸி
52.Sr. அடைக்கல மேரி
53.Sr. லில்லி புஷ்பம்
54.Sr. பிளசீடா

வழித்தடம் : கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பாப்பம்பட்டி பிரிவிலிருந்து 3கி.மீ தொலைவிலும் மற்றும் சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து 5கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

Church facebook link :
https://www.facebook.com/groups/503779226453877/

Location map : https://maps.google.com/?cid=1022213125386471049

வரலாறு :

கி.பி 1643 ஆம் ஆண்டில் இயேசு சபையை சார்ந்த குருக்களான அருட்பணி. பல்தசார் டி. கோஸ்டா, அருட்பணி. இம்மானுவேல் மார்ட்டின்ஸ் மற்றும் பலரால் சத்தியமங்கலம், கணுவாக்கரையைச் சேர்ந்த நெசவுத் தொழில் செய்யும் மக்கள் கிறிஸ்துவை அறிந்து, கிறிஸ்தவம் தழுவினர்.

இந்த மக்கள் 12 ஆம் நூற்றாண்டில் கொடிவேரி கிராமத்தில் வசித்ததற்கான சான்றாக தற்போது கிடைத்துள்ள கல்வெட்டிலிருந்து உறுதி படுத்தப் படுகிறது. (அக்கரை கொடிவேரி மற்றும் பெரிய கொடிவேரி என்பது ஒரே கிராமம் ஆகும். ஆனால் பவானி ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளது.)

கண்ணம்பாளையம் கிறிஸ்தவர்களின் தொடக்கம் கொடிவேரி கணுவக்கரையில் இருந்து தொடங்குகிறது. கண்ணம்பாளையம், பாலக்காடு மாவட்டத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது.

முதலில் 1646 இல் ஏற்பட்ட பஞ்சத்தினாலும், பிறகு மதுரை நாயக்கனார் மற்றும் மைசூர் திப்பு சுல்தான் இடையே நடந்த போரினால் அதிக அளவில் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மலபார் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். அவ்வேளையில் புனிதப் பணியில் இருந்த அருட்பணி. மார்ட்டின்ஸ், அருட்பணி. மார்க்கோலினி மற்றும் புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள காடுகளுக்கும், மலைகளுக்கும் சென்றனர். அதே சமயம் கணுவாக்கரை, கோபியைச் சேர்ந்த மக்கள் பல மைல் தூரம் பயணித்து கண்ணம்பாளையம் வந்தடைந்தனர்.

ஆகையால் கண்ணம்பாளையம் கிறிஸ்தவர்களின் தொடக்கம் கி.பி 1645 - கி.பி 1650 வரையில் ஆகும் எனப் படுகிறது.

அருட்பணி. அபே தொபியாஸ் அவர்களால் கண்ணம்பாளையத்தில் 1803 ஆம் ஆண்டு ஆலயம் கட்டப்பட்டது.

1848 இம் ஆண்டு வரை கருமத்தாம்பட்டி யின் கிளைப் பங்காக கண்ணம்பாளையம் செயல்பட்டு வந்தது. பின்னர் கோவை மறை மாவட்ட பங்கு தொடங்கும் போது கண்ணம்பாளையம் அதன் கிளைப் பங்காக ஆனது.

1892 இல் சவேரியார்பாளையம் தனிப்பங்கான போது அதன் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

1935 ஆம் ஆண்டு தனிப் பங்காக உயர்த்தப்பட்டு, அருட்பணி. கொல்லேர் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.

1942 ம் ஆண்டு ஆலயம் பழுது பார்க்கப்பட்டு சீர்படுத்தப் பட்டது. 1943 இல் ஆலய முகப்பு மாற்றப்பட்டு மேதகு ஆயர் உபகாரசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

அருட்பணி. ரத்தினநாதர் (1944-1946) அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து திருவுடல் திரு இரத்தப் பெருவிழா ஊர்வலம் வர அனுமதி பெற்றார்.

அருட்பணி. ஜான் பிச்சை (1946-1956) பணிக்காலத்தின் போது, இரண்டாம் உலகப் போர் நடந்து வந்ததால் ஏற்பட்ட பஞ்சத்தாலும், வேலையின்மையாலும், பஞ்சு தட்டுப்பாட்டாலும் நூல் இழைத்து நெசவு செய்ய முடியவில்லை. அச்சமயம் அருட்பணி. ஜான் பிச்சை அவர்களின் தனித்துவமான ஆளுமைத் திறனால், அங்கு வசித்த ஏராளமான நெசவாளர்களுக்கு அப்பகுதியில் உள்ள 'ஜவுளி நூற்பு ஆலை' யில் வேலை வாங்கிக் கொடுத்தார். இதன் மூலமாக அந்தப் பகுதியில் வாழ்வோர் இடம் பெயர்ந்து போகாமல், கிறிஸ்துவில் நம்பிக்கையுடன் வாழ்ந்தனர். மேலும் ஆலயத்திற்கு மின்வசதி செய்து கொடுத்தார். 1952 இல் மறை மாவட்ட உதவியோடு பங்குத்தந்தையின் அறையை புதுப்பித்தார். அருட்தந்தையின் உடல் குன்றிய போதும் அநேக மக்கள் கிறிஸ்தவ வழியில் நடக்கவும், கிறிஸ்தவ வாழ்வுக்குமான அழைப்பை ஏற்கவும் செய்தார்.

அருட்பணி. S. M. இராயப்பன் (1956-1967) பணிக்காலத்தில் 1958 -ஆம் ஆண்டு ஆலயத்தின் இருபுற பக்கங்களையும் விரிவு படுத்தினார். லூர்து மாதா காட்சி கொடுத்த நூற்றாண்டு நினைவாக, ஆலயத்தின் உள்ளே லூர்து மாதா கெபி ஒன்றைக் கட்டினார். 1963 இல் சிலுவைப்பாதைக்கான புதிய படங்கள் அர்ச்சிக்கப் பட்டதுடன், ஆலய பலிபீடம் புதுப்பிக்கப் பட்டது.

நல்லுள்ளம் படைத்த மக்களின் உதவியுடன் ஒரு ஆரம்பப்பள்ளி துவக்கப்பட்டது. 1916 ஆம் ஆண்டு அரசு அங்கீகாரம் பெறப் பட்டது. 1945 ஆம் ஆண்டு புனித காணிக்கை அன்னை சபை அருட்சகோதரிகளிடம் பள்ளிக்கூடம் ஒப்படைக்கப் பட்டது. 1958 ஆம் ஆண்டு பள்ளிக்கான புதிய கட்டிடம் கட்டப் பட்டது. பழைய பள்ளிக்கூடத்தை அருட்சகோதரிகள் புதுப்பித்து கன்னியர் இல்லமாக்கினர்.

1973 இல் ஆலயத்தின் முன்பகுதி நீட்டிக்கப்பட்டு சீர் செய்யப்பட்டது.

அருட்பணி. ஜோசப் பிரகாசம் அவர்களால் பலிபீடத்தில் தேவைக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டது.

1980 ஆம் ஆண்டு புதிய ஆலயத்திற்கான அடித்தளம் போடப்பட்டது. அருட்பணி. ஜான் சேவியரின் சிந்தனைகளைக் கொண்டு புதுவிதமான அந்த ஆலயப் பணிகள் நடந்து வந்தது. பணிகள் நிறைவு பெற்று 01.02.1990 அன்று அர்ச்சிக்கப் பட்டது. மேலும் மணிக்கோபுரம் கட்டப்பட்டு 01.10.1990 அன்று அர்ச்சிக்கப் பட்டது.

29.07.2000 அன்று பங்குத்தந்தை இல்லம் புதுப்பிக்கப்பட்டது.

மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே புதிய ஆலயம் கட்ட திட்டமிடப்பட்டு, 09.06.2017 அன்று மேதகு ஆயர் தாமஸ் அக்குவினாஸ் அவர்களால் அடிக்கல் போடப் பட்டது.

மக்களின் ஒத்துழைப்புடன் ஆலயம் கட்டப்பட்டு மேதகு ஆயர் தாமஸ் அக்குவினாஸ் (கோவை), மேதகு ஆயர் அமல்ராஜ் (உதகை), மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் (தருமபுரி) ஆகியோர்களால் 02.02.2019 அன்று அர்ச்சிக்கப் பட்டது.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. Fr. ஜான் பிச்சை
2. Fr. ராயப்பன்
3. Fr. ஜோசப் பிரகாசம்
4. Fr. ரெஜிஸ்
5. Fr. சதானந்தம்
6. Fr. ஜான் சேவியர்
7. Fr. அந்தோணி இருதயம்
8. Fr. ஆசீர்வாதம்
9. Fr. இருதய ராஜ்
10. Fr. ஜார்ஜ் ரொசாரியோ
11. Fr. அருள் முத்து
12. Fr. அலெக்ஸ் செல்வநாயகம்
13. Fr. D. ஆண்டனி ஜேசுராஜ்.

தகவல்கள் : ஆலய வரலாற்று மலரிலிருந்து எடுக்கப்பட்டது.