866 புனித ஆரோக்கிய மாதா ஆலயம், பால்நெல்லூர் வல்லம் கண்டிகை

          

புனித ஆரோக்கிய மாதா ஆலயம்

இடம்: பால்நெல்லூர் வல்லம் கண்டிகை

மாவட்டம்: காஞ்சிபுரம்

மறைமாவட்டம்: செங்கல்பட்டு

மறைவட்டம்: காஞ்சிபுரம்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்கு: புனித அமல அன்னை ஆலயம், எச்சூர்

பங்குத்தந்தை அருட்பணி. X. வினோத் குமார்

குடும்பங்கள்: 120

அன்பியங்கள்: 5

ஞாயிறு திருப்பலி காலை 07:45 மணி

நாள்தோறும் திருப்பலி மாலை 06:30 மணி

ஒவ்வொரு மாதத்தின் 08ஆம் தேதி ஆரோக்கிய அன்னை நவநாள் திருப்பலி

திருவிழா: ஏப்ரல் 28 ஆம் தேதி கொடியேற்றம், மே 07ஆம் தேதி நற்கருணை பெருவிழா, மே 08ஆம் தேதி திருத்தேர் பெருவிழா.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி.‌ இருதயராஜ் இராசுலு (late)

2. அருட்பணி.‌ A. M. அந்தோனிசாமி

3. அருட்பணி.‌ S. N. லூயிஸ்

4. அருட்பணி.‌ S. E. சகாயராஜ்

5. அருட்பணி. S. L. செல்வராஜ்

6. அருட்பணி. A. வேளாங்கண்ணி

7. அருட்பணி. வினோத் ரொசாரியோ 

1. அருட்சகோதரி. R. ஜெசிந்தா

2. அருட்சகோதரி. J. ரபேக்கா

3. அருட்சகோதரி. T. அனஸ்தாசியா

4. அருட்சகோதரி. M. சூசைமேரி

5. அருட்சகோதரி. A. இனிகோ

வழித்தடம்: ஸ்ரீபெரும்புதூர் -ஒரகடம் சாலையில், வல்லம் என்னும் இடத்தில் இருந்து வலதுபுறமாக சுமார் 1கி.மீ தூரம் சென்றால், இவ்வாலயத்தை அடையலாம்.

சிங்கபெருமாள்கோயில் -ஸ்ரீபெரும்புதூர் சாலையில், வல்லம் என்னும் இடத்தில் இருந்து இடதுபுறமாக 1கி.மீ தூரம் சென்றால், பால்நெல்லூரில் உள்ள இவ்வாலயத்தை வந்தடையலாம்.

Location map: Our Lady of Good Health Catholic Church

https://maps.app.goo.gl/QvccPurPabiawZ5K9

வரலாறு:

ஆந்திராவில் உள்ள குண்டூர் பகுதியில் வெள்ளம் மற்றும் பஞ்சம் ஏற்பட்டு, அங்கிருந்த மக்கள் தங்களுடைய பிழைப்பிற்காக தமிழ்நாடு வந்து கீழச்சேரி பகுதியில் குடிபெயர்ந்தனர். பின்னர் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பண்ணூர், மொளச்சூர், வளர்புரம், நெமிலி, பால்நெல்லூர் வல்லம் கண்டிகை பகுதிகளுக்கு குடிபெயர்ந்து, விவசாயத்தை தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர்.

1887-1892 வரை ஐரோப்பா, மங்களூர், கேரளா மற்றும் கோவா ஆகிய இடங்களில் இருந்து வந்த அருட்பணியாளர்கள் பால்நெல்லூர் மற்றும் வல்லம் கண்டிகையை மையமாகக் கொண்டு ‌கூடுவாஞ்சேரி, தெரேசாபுரம், திருப்பெரும்புதூர், பொதூர், முடிச்சூர், படப்பை, ஏலக்காய்மங்கலம், பண்ருட்டி, மதுவந்தாங்கல், எழிச்சூர், எச்சூர் ஆகிய இடங்களில் தங்களுடைய மறைப்பரப்பு பணியை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்பொழுது மழை மலை மாதா கெபி அமைந்துள்ள இடத்தில், பம்பை மாதா எனும் பெயரில் ஒரு சிற்றாலயம் அமைத்து, வழிபாடு நடத்தியதாக கூறப்படுகிறது.

பால்நெல்லூர் வல்லம் கண்டிகையின் வரலாறு மிகப் பழைமையானது என்பதால், ஆரம்ப காலத்தில் இங்கு பணிபுரிந்த அருட்பணியாளர்களைப் பற்றிய குறிப்புகளை கண்டறிய முடியவில்லை.

மிகப் பழைமையான பால்நெல்லூர் வல்லம் கண்டிகையின் அருட்பணியாளர்களைப் பற்றிய சரியான தரவுகள் 1892 ஆம் ஆண்டிலிருந்து தான் நமக்கு கிடைத்திருக்கின்றன.

1892-1893 வரை அருட்பணி. A. H. ஜோதோப் அவர்கள் பால்நெல்லூர் வல்லம் கண்டிகையை மையப்பகுதியாகக் கொண்டு, சுற்றியுள்ள கிராமங்களில் மறைப்பணியாற்றினார்.  

தொடர்ந்து 1893-1897 வரை அருட்பணி. R. பிரான்சிஸ் அவர்கள் பணிபுரிந்தார்.

1897-1900 அருட்பணி. A. அமண்டு.

1900-1902 அருட்பணி. பெரைரா.

1902-1904 அருட்பணி. C. ஜோசப்.

1904-1909 அருட்பணி. மு. அற்புதம்.

1909-1911 அருட்பணி. S. பைக்சோ.

1911-1914 அருட்பணி. ரத்தினம்.

1914- 1917 அருட்பணி. L. X. தியாஸ்.

1917-1922 அருட்பணி. J. F. நொரானா.

1922 ஆம் ஆண்டு முதல் பால்நெல்லூர் வல்லம் கண்டிகை தனிப் பங்காக பிரிந்து, சென்னை மயிலை உயர்மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி.‌ R. லூர்துசாமி சஞ்சீவி அவர்கள் 1922-1930 வரை பணியாற்றினார்.

1930-1931 அருட்பணி. பிரான்காசோ.

1931-1933 அருட்பணி.‌ A. S. ராயன்.

1933-1936 அருட்பணி. B. F. கொலாக்கோ.

1936-1939 அருட்பணி. ஜியோ பெர்னாண்டஸ்.

1939-1946 அருட்பணி. P. லோபோ. இவரது முயற்சியால் ஊரின் நடுவில் புதிய ஆலயம் கட்ட திட்டமிடப்பட்டு, அதற்குத் தேவையான உபகரணங்கள் அந்தமானில் இருந்து கொண்டு வந்ததாகவும், ஆலயச்சுவர் 2அடி அகலம் கொண்டு சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டதாகவும், மூன்று வாயில்களிலும் கோபுரங்கள் அமைக்கப்பட்டதாகவும் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

மேலும் அருட்பணி. P. லோபோ அவர்கள் ஆலயத்திலிருந்து வல்லம் வரை சாலை கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. 

1946-1950 அருட்பணி. J. F. கொமனிசஸ்.

1950-1956 அருட்பணி. C. இன்னையா.

1956-1960 அருட்பணி. D. அந்தோனிதாஸ்.

1960-1961 அருட்பணி.‌ J. N. ரோட்ரிகஸ்.

1961-1969 அருட்பணி. ஜேக்கப் தாமஸ்.

1969-1974 அருட்பணி. ஜோசப் சொல்லானல்.

1974-1976 பணிபுரிந்த அருட்பணி. P. K. மேத்யூ பணிக்காலத்தில் ஆலயத்திற்கு முதன் முதலாக ஒலிப்பெருக்கி வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆலயத்தின் தரையில் ஏற்பட்ட விரிசலை பங்கு மக்களின் உதவியுடன் சரி செய்தார்.

1976-1988 அருட்பணி. P. C. தாமஸ் பணிக்காலத்தில், ஆலயத்தின் தூண்களை மட்டும் விட்டு விட்டு, ஆலய சுற்றுச்சுவர்களை இடித்து விட்டு, மீண்டும் புதிதாக கட்டினார்.‌ ஆலயத்தின் வலது மற்றும் இடது புறம் உள்ள கோபுரங்கள் பழுதடைந்ததால் அவற்றை இடித்து மாற்றம் செய்தார். கார்மேல் சபை அருட்சகோதரிகளை பங்கில் பணிபுரிய அழைத்து வந்து, அவர்கள் தங்கிட இடமும் கொடுத்தார்.

1988-2000 அருட்பணி C. J. மணி.‌ மரியாயின் சேனை தொடங்கப்பட்டது. ஆலய முன்புற கோபுரம் சாயும் நிலையில் இருந்ததால், அதனை தாங்கும் விதமாகவும் தலைவாயில் ஒன்றை எழுப்பினார்.

2000-2004 அருட்பணி.‌ G. ஜான் குரியன்.‌ பழைய பங்குத்தந்தை இல்லத்தை இடித்து விட்டு புதிதாக கட்டினார்.‌ தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தங்கும் விடுதியைக் கட்டினார்.‌ பூண்டி மாதா கெபி, குழந்தை இயேசு கெபி ஆகியவற்றை கட்டினார்.

2004-2008 அருட்பணி.‌ G. டெரி ஸ்டீபன். ஆலயத்திற்கு புதிதாக மணிக்கூண்டு கட்டப்பட்டு 07.05.2005 அன்று மேதகு ஆயர் நீதிநாதன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, மறைமாவட்ட முதன்மை குரு அருட்பணி. அருள்ராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் தொடக்கப்பள்ளியின் பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்டியெழுப்பினார். 

2008-2013 அருட்பணி.‌ N. B. சாலமோன்.‌ ஆலயத்தின் மேற்கூரை ஓடுகளை மாற்றம் செய்து, இரும்பு ஓடுகளை நிறுவினார். ஆலயத்தை புதுப்பித்து, கோபுரங்களை இரண்டு கோபுரங்களாக மாற்றி,  பீடத்தை புதுப்பித்து 19.08.2012 அன்று மேதகு ஆயர் நீதிநாதன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.‌

2013-2018 அருட்பணி. ஆரோக்கிய ரேமண்ட்.‌ ஒவ்வொரு மாதமும் 08ஆம் தேதி நவநாள் சிறப்பிக்கும் வழக்கத்தை தொடங்கினார். பங்குத்தந்தை இல்லத்தை புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொண்டார். SPICMA உதவியுடன் பள்ளிக்கூடத்திற்கு கூடுதல் அறைகள் கட்டப்பட்டது. தனியார் ஆக்கிரமிப்பு நிலம் மீட்டெடுக்கப்பட்டது.

2018-2023 அருட்பணி. X. வினோத் குமார். பங்குத்தந்தை இல்லம் புதுப்பிக்கப்பட்டு, அதைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு, உள் தோட்டம் அமைக்கப்பட்டது. 

ஆலயத்தைச் சுற்றி திருச்சிலுவைப்பாதை நிலைகள், கொடிமரம், ஆலயத்தைச் சுற்றி நடைபாதை மற்றும் இரும்பு வேலி அமைக்கப்பட்டு மேதகு ஆயர் நீதிநாதன் அவர்களால் 22.02.2020 அன்று திறந்து வைக்கப்பட்டது.

திருச்சிலுவைப்பாதை நிலைகளுக்கு நடுவில், திருச்செபமாலை நிலைகளை ஆலயத்தைச் சுற்றி அமைத்து 08.10.2020 அன்று மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.

பங்கின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வாக புனித சூசையப்பர் மற்றும் நல்லாயன் கெபிகளை அமைத்து, 08.08.2021 அன்று மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.

பங்கில் பணியாற்றிய மறைந்த அருட்பணி.‌ சாலமோன் நினைவாக திருவிழா மேடை மற்றும் நடைபாதை அமைத்து 28.04.2022 அன்று திறந்து வைக்கப்பட்டது.

பழுதடைந்து போன புனித அந்தோனியார் கெபியை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிய கெபி கட்டப்பட்டு 03.05.2022 அன்று மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது. 

ஆலய பீடம் புதிதாக அமைக்கப்பட்டு,  08.05.2022 அன்று அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டு, பங்கின் நூற்றாண்டு விழா சிறப்பிக்கப் பட்டது.‌ இவ்வாறு அருட்பணி. வினோத் குமார் பணிக்காலத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

2023 மே 27 முதல் அருட்பணி. சாம்சன் அவர்கள் பங்குத்தந்கையாக பொறுப்பேற்றுள்ளார்.

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மரியாயின் சேனை

2. பீடச் சிறுவர் சிறுமியர்

3. தோழமை சகோதரிகள்

பங்கில் உள்ள கெபிகள்:

1. மழை மலை மாதா கெபி

2. காவல் தூதர் கெபி

3. தூய லூர்து மாதா கெபி

4. புனித சூசையப்பர் கெபி

5. புனித அந்தோனியார் கெபி

6. நல்லாயன் கெபி

7. குழந்தை இயேசு கெபி

பங்கின் பள்ளிக்கூடம்: R.C.M தொடக்கப்பள்ளி.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:  பங்குத்தந்தை அருட்பணி. வினோத் குமார் அவர்கள்.