631 ஆரோக்கிய அன்னை ஆலயம், இறச்சகுளம்

             

மலையடிவார ஆரோக்கிய அன்னை ஆலயம் 

இடம் : சன்நகர், இறச்சகுளம்

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : கோட்டார் 

மறைவட்டம் : தேவசகாயம் மவுண்ட் 

நிலை : மறைப்பரப்பு தளம் 

பங்கு : புனித யூதா ததேயு ஆலயம், இறச்சகுளம்

பங்குத்தந்தை : அருள்பணி. பேட்ரிக் சேவியர் 

குடும்பங்கள் : 5

மாதத்தில் இரண்டாவது வியாழக்கிழமை மாலை 05.00 மணிக்கு திருப்பலி 

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி

ஆலய தொடர்பு எண் : 9626806503

வழித்தடம் : நாகர்கோவில் -இறச்சகுளம் அமிர்தா கல்லூரி அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 

Location map : 

https://maps.app.goo.gl/QPhLocA8ihyN4Rbk9

வரலாறு :

இயற்கை எழில் சூழ்ந்த கன்னியாகுமரி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில், இறச்சகுளம் அமிர்தா கல்லூரி அருகில் அமைந்துள்ளது மலையடிவார ஆரோக்கிய அன்னை ஆலயம். 

இப்பகுதியில் வசிக்கும் திரு. ஸ்டீபன் என்பவர் மாதாவின் மீது கொண்ட பக்தியால் வேளாங்கண்ணி மாதா குருசடி ஒன்றை கட்டினார். அதனை 2005 ம் ஆண்டு அன்றைய மார்த்தால் பங்குத்தந்தை அருள்பணி. பெர்பெச்சுவல் அவர்கள் அர்ச்சித்து திறந்து வைத்தார். 

பின்னர் 2019 ஆண்டு திரு. ஸ்டீபன் அவர்கள் தமக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை ஆலயத்திற்கு கொடுத்தார். 29.04.2019 அன்று ஆலயத்திற்கு இறச்சகுளம் பங்குத்தந்தை அருள்பணி. பெர்பெச்சுவல் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. 

அருள்பணி. பெர்பெச்சுவல் அவர்களின் குருத்துவ வெள்ளிவிழா ஆண்டு நினைவாக, அவரது முயற்சியால் மக்களின் ஒத்துழைப்புடன் 60 அடி நீளமும், 28 அடி அகலமும், 50 அடி உயரமும், கொண்ட ஆலயம் கட்டப்பட்டு, இத்துடன் 30 அடி உயர கொடிமரமும் வைக்கப்பட்டு 26.12.2020 அன்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு நசரேன் சூசை அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

முத்திபேறு பெற்ற மரிய ரபோல்ஸ் அவர்களின் திருப்பண்டம் ஆலய பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

குருசடியில்  வேளாங்கண்ணி மாதா சுரூபம் முதலில் நிறுவப்பட்டதால், ஆலயத்திலும் வேளாங்கண்ணி மாதா சுரூபம் நிறுவப்பட்டு இடத்தின் பெயரால் "மலையடிவார ஆரோக்கிய அன்னை ஆலயம்" என்று அழைக்கப் படுகிறது. 

பல்வேறு வேண்டுதல்களுடன் வருகிற மக்களுக்கு, தங்களது வேண்டுதல்கள் நிறைவேறுவதால், நாள்தோறும் பலரும் இவ்வாலயத்தை நாடி வருகின்றனர். இவர்களுக்காக தண்ணீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப் பட்டுள்ளது. மேலும் ஆரவாரமின்றி அமைதியான முறையில் ஜெபிப்பதற்காகவும் பலர் இவ்வாலயம் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

நோயாளிகள் இவ்வாலயத்தில் தங்கி இருந்து ஜெபித்து நலம் பெற்றுச் செல்கின்றனர். 

ஆலய வரலாறு : ஆலய அர்ச்சிப்பு விழா கையேடு.