241 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், சிராயன்குழி


புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்

இடம் : சிராயன்குழி

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய ஜெபமாலை அன்னை ஆலயம், காஞ்சிரகோடு

பங்குத்தந்தை : அருட்பணி அருளப்பன்

குடும்பங்கள் : 155
அன்பியங்கள் : 6

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு

வெள்ளிக்கிழமை திருப்பலி : மாலை 05.30 மணிக்கு

திருவிழா : செப்டம்பர் மாதத்தில் ஐந்து நாட்கள்.

சிறப்புகள் :

ஆரம்பத்தில் சிராயன்குழி மக்கள் காஞ்சிரகோடு பங்கின் அன்பிய பகுதியாக செயல்பட்டு வந்தனர்.

சிராயன்குழியில் புனித மிக்கேல் குருசடி கட்டப்பட்டு வெள்ளிக்கிழமைகளில் திருப்பலியும் நடத்தப்பட்டு வந்தது.

இங்கிருந்து காஞ்சிரகோடு ஆலயம் செல்வதற்கு சற்று தொலைவு காணப்பட்டதால் ஆலயம் கட்ட வேண்டும் என்று இம்மக்கள் விரும்பினர். அதன்படி இந்த குருசடி விரிவாக்கம் செய்யப்பட்டு ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்டு ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டு கிளைப்பங்காக உயர்த்தப்பட்டது.

புனித மிக்கேல் அதிதூதர் வழியாக இறைவனின் ஆசீர்வாதங்களை பெற்று மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க இட நெருக்கடி ஏற்பட்டதால் புதிய ஆலயம் கட்டப்பட்டு 17-09-2017 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

தற்போது பங்குத்தந்தை அருட்தந்தை அருளப்பன் அவர்களின் வழி நடத்துதலில் பங்கு மக்கள் சிறப்பாக செயல்பாடுகளால் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

நாகர்கோவில் - திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் சிராயன்குழியில் இவ்வாலயம் அமைந்துள்ளது.