292 கிறிஸ்து அரசர் ஆலயம், இராஜகோபால் கண்டிகை


கிறிஸ்து அரசர் ஆலயம்

இடம் : இராஜகோபால் கண்டிகை

ஊராட்சி : எருமையூர்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மறை மாவட்டம் : செங்கல்பட்டு

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய விண்ணேற்பு அன்னை ஆலயம், தர்காஸ்

பங்குத்தந்தை : அருட்தந்தை அருள் ஆனந்த்

குடும்பங்கள் : 110
அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி : காலை 09.30 மணிக்கு

திருவிழா : நவம்பர் மாதத்தில் மூன்று நாட்கள்.

வரலாறு :

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சிற்றாலயமாக துவக்கப்பட்டு, இரண்டு தலைமுறைகளுக்கு பின்னர் அருட்தந்தை அதிரூபன் அவர்களின் முயற்சியால் இப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் புதுப்பிக்கப்பட்டு 07-06-2013 அன்று மேதகு ஆயர் நீதிநாதன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

தர்காஸ் பங்கின் கிளைப் பங்காக இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

திருவிழா மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. முதல் நாள் கொடியேற்றம், இரண்டாம் நாள் நற்கருணைப் பெருவிழா, மூன்றாம் நாள் கிறிஸ்து அரசரின் ஆண்டுப் பெருவிழா மற்றும் தேர் பவனி என ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

இந்த ஆலயத்திற்கு தாம்பரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன : M 18S, M18H, M55B.

இறங்குமிடம் : தர்ககாஸ் மெயின் ரோடு பிள்ளையார் கோவில் பேருந்து நிலையம்.