புனித அந்தோணியார் ஆலயம்.
இடம் : மணலி (தக்கலை அருகில்)
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
நிலை: பங்கு தளம்
கிளைகள் :
1. புனித பாத்திமா மாதா ஆலயம், மூலச்சல்
2. இயேசுவின் திரு இருதய ஆலயம், பாலப்பள்ளி.
குடும்பங்கள் : 188
அன்பியங்கள்: 8
ஞாயிறு திருப்பலி : காலை 06.15 மணிக்கு
பங்குத்தந்தை (2018) : அருட்பணி N. மார்ட்டின்
திருவிழா : ஜூன் மாதம் 13 ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள்.
வரலாறு :
கி.பி 52 ல் புனித தோமையார் திருவிதாங்கோடு வந்த போது, மணலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிறிஸ்தவ மறையை போதித்தார். இதற்கு சான்றாக இரட்டை பட்டை குருசு (சிலுவை) இங்குள்ள குருசடியில் காணப்படுகிறது.
கி.பி 1935 ல் ஒரு சிற்றாலயமும், ஆரம்பப் பள்ளியும் ஆரம்பிக்கப்பட்டது.
12.10.1977 அன்று புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டு, ஆலயப் பணிகள் நிறைவு பெற்று 14.10.1978 ல் மேதகு ஆயர் ஆரோக்கியசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
இத்துடன் புதிய கொடிமரம், குருசடி, மணிகோபுரம் ஆகியவை தனிநபர்களின் நன்கொடைகளால் அமைக்கப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.
04.06.2002 அன்று தனிப்பங்காக உயர்த்தப் பட்டது.
தனிச்சிறப்பு :
புனித அந்தோணியாரின் அழியா நாவின் சிறு பகுதி இவ்வாலயத்தில் உள்ளது.
மண்ணின் இறையழைத்தல்கள் :
1. அருட்பணி. ஜஸ்டின் கிறிஸ்துராஜ்
1. அருட்சகோதரி மரியந்தோனி
2. அருட்சகோதரி மரிய அலங்காரம்
3. அருட்சகோதரி றோஸ்லெட்
4. அருட்சகோதரி ஆனி சிறில்
5. அருட்சகோதரி பொனிப்பாஸ்
6. அருட்சகோதரி திரேசம்மாள்.