139 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், பருத்தியறைத்தோட்டம்


புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்

இடம் : பருத்தியறைத்தோட்டம்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

பங்குத்தந்தை : அருட்பணி ஜார்ஜ் சாமுவேல்
இணை பங்குத்தந்தை : அருட்பணி கமில்லஸ் sdb

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித சூசையப்பர் ஆலயம், கல்குறிச்சி.

குடும்பங்கள் : 80
அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி : காலை 09.30 மணிக்கு

திருவிழா : டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் பத்து நாட்கள்.

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், தக்கலை பழைய பேருந்து நிலையத்திற்கருகில் இருந்து இடது புறமாக செல்லும் சாலையில் சென்றால் இவ்வாலயத்தை அடையலாம்.

பருத்தியறைத்தோட்டம் :

கி.பி 1930 ஆம் ஆண்டுக்குப் பிறகு முளகுமூடு ஆலயமும், பின்னர் தக்கலை ஆலயமும் தனிப்பங்காக செயல்பட்ட நேரத்தில், பருத்தியறைத்தோட்டம் பகுதி மக்கள் சுமார் 20 குடும்பங்கள் இணைந்து புனித மிக்கேல் அதிதூதர் குருசடி அமைத்து, இறைவனை வழிபட்டு வந்தனர்.

நாளடைவில் மக்கள் இயக்கம் சேர்ந்து கல்குறிச்சி ஆலய பங்குத்தந்தையை அணுகி குருசடியில் 1973 ஆம் ஆண்டு முதல் திருப்பலி நிறைவேற்றப் பட்டது.

1975 ஆம் ஆண்டு அருட்பணி. ஞானபிறகாசம் அடிகளாரால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப் பட்டது. மக்களின் நன்கொடைகளால் ஆலயப் பணிகள் நிறைவு பெற்று 1978 ஆம் ஆண்டு அர்ச்சிக்கப் பட்டது. தொடர்ந்து கல்குறிச்சி பங்கின் கிளைப் பங்காக இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது பருத்தியறைத்தோட்டம் புனித மிக்கேல் அதிதூதர் இறை சமூகம்.