510 புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், பட்டணம்


புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம்

இடம் : பட்டணம், பட்டணம் அஞ்சல், இராசிபுரம் தாலுக்கா, 637408

மாவட்டம் : நாமக்கல்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : நாமக்கல்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய கார்மேல் மாதா ஆலயம், காக்காவேரி

பங்குத்தந்தை : அருட்பணி. இராஜப்பா

குடும்பங்கள் : 15
அன்பியம் : 1

ஞாயிறு : காலை 11.00 மணிக்கு திருப்பலி

திருவிழா : ஜூன் மாதம் 29ம் தேதி.

வழித்தடம் : காக்காவேரியிலிருந்து 3கி.மீ தொலைவில் பட்டணம் உள்ளது.

Location map : Pattanam - Kakkaveri Rd Rasipuram, Tamil Nadu 637408


வரலாறு

கி.பி.1876ம் ஆண்டில் காக்காவேரி பங்கின் கிளைப்பங்கான பட்டணத்தில் அருட்பணி. வான்னே அடிகளார் இங்குள்ள கிறிஸ்தவர்களை கவனித்து வந்தார்.

காக்காவேரியில் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. பிரிக்கோ அடிகளார் பட்டணத்தில் ஆலயம் எழுப்புவதற்காக நிலம் வாங்க நீதிமன்றத்தில் போராடினார்.

பிறகு, ஆலயம் கட்டுவதற்காக நிலம் வாங்கப்பட்டு, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 1883-1884ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் ஆலயம் கட்டப்பட்டு புனிதர்கள் இராயப்பர் சின்னப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

வெகு காலமாக பராமரிக்கப்படாத இவ்வாலயம், காக்காவேரியில் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்படணி. செல்வம் அடிகளாரின் முயற்சியால் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு 20.10.2013 அன்று, மேதகு சேலம் ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, இன்று வரையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. இராஜப்பா அவர்கள்.