546 வழித்துணை வேளாங்கண்ணி அன்னை ஆலயம், சூளகிரி

     

வழித்துணை வேளாங்கண்ணி அன்னை ஆலயம் 

இடம் : சூளகிரி

மாவட்டம் : கிருஷ்ணகிரி 

மறைமாவட்டம் : தருமபுரி

மறைவட்டம் : ஓசூர் 

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்கு : புனித அந்தோனியார் ஆலயம், காமராஜர் நகர் 

பங்குத்தந்தை : அருள்பணி. சூ. அமலநாதன் 

குடும்பங்கள் : 73

அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு 

திங்கள், வெள்ளி திருப்பலி : காலை 06.00 மணிக்கு 

செவ்வாய் மாலை 06.00 மணிக்கு திருப்பலி (காமராஜர் நகர்) 

புதன், வியாழன் திருப்பலி : Convent 

சனி திருப்பலி : மாலை 06.00 மணிக்கு. 

மாதத்தின் முதல் செவ்வாய் : புனித அந்தோனியார் நவநாள், திருப்பலி மற்றும் ஜெபவழிபாடு.

திருவிழா : செப்டம்பர் 8 ஆம் தேதி. 

வழித்தடம் :

கிருஷ்ணகிரி -ஓசூர் பிரதான சாலையில் சூளகிரி அமைந்துள்ளது. 

Location map : Our Lady Of Velankanni Church NH 44, Service Road, Shoolagiri, Tamil Nadu 635117

https://maps.app.goo.gl/gyY5cHRLYS3Y4zq2A


வரலாறு :

கிருஷ்ணகிரி -ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சூளகிரி வழித்துணை வேளாங்கண்ணி மாதா ஆலயம். 

திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் தொழில் காரணமாக 1930 ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரிக்கு வந்து குடியேறினர். பத்து ஆண்டுகளுக்கு பின்னர்  அங்கிருந்து சூளகிரிக்கு வந்து குடியேறியதாக கூறப்படுகிறது. மேலும் பனையூர், கொடுங்கல், முகையூர், வேட்டவலம், ஆவூர், மணலூர் பேட்டை, காக்கனூர், விருது விளங்கினான், நெடுங்கப்பட்டு, ஓடியத்தூர், அத்திபாக்கம், கொடுகாபட்டு, கங்கபட்டு, மதுரம்பட்டு, வேலந்தாங்கல் ஆகிய ஊர்களில் இருந்தும் சூளகிரிக்கு வந்து குடியேறியுள்ளனர். 

முதலில் சூளகிரி மலையடிவாரத்தையொட்டி, கிறிஸ்தவர்களின் குடியிருப்பு உருவானது. கிருஷ்ணகிரி பங்குத்தந்தையர்கள் அங்கு எழுப்பப்பட்ட சிறிய ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தனர். பின்னர் ஊருக்கு அருகில் தற்போதுள்ள இடத்தில் மக்கள் குடியேறினர். 

கிருஷ்ணகிரி பங்குத்தந்தை அருள்பணி. ஐசக் அடிகளார் மக்களின் குடியிருப்பு பகுதியில் (காமராஜர் நகர்) புனித அந்தோனியார் ஆலயத்தை கட்டினார். தற்போது இவ்வாலயம் சூளகிரியின் கிளைப் பங்காக செயல்பட்டு வருகிறது. 

கிருஷ்ணகிரியின் கிளைப்பங்காக 1998 ஆம் ஆண்டு வரை சூளகிரி செயல்பட்டு வந்தது. 26.06.1997 அன்று மறைமாவட்ட ஆயரின் ஆலோசனைப்படி இராயக்கோட்டை பங்குத்தந்தையாக இருந்த அருள்பணி. ஹென்றி போனால் MEP அவர்களின் பொறுப்பில் சூளகிரி ஒப்படைக்கப் பட்டது. 

2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மருதாண்டபள்ளி கிராம எல்லையில் இரண்டு ஏக்கர் நிலம் நெடுஞ்சாலையையொட்டி வாங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு பங்குத்தந்தை இல்லத்தையும் வழித்துணை வேளாங்கண்ணி மாதா கெபியையும் அருள்பணி. ஹென்றி போனால் அவர்கள் கட்டி முடித்தார். 2004 ஆம் ஆண்டு தற்போது காணப்படும் அழகிய ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப் பட்டு 2005 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. 

வடக்கே பேரிகை, தெற்கே உத்தனப்பள்ளி, கிழக்கே மாதேபள்ளி,  மேற்கே தொகரப்பள்ளி ஆகிய ஊர்களை எல்லைகளாகக் கொண்டு, 11.06.2005 அன்று தனிப் பங்காக தருமபுரி மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. ஜோசப் அந்தோணி இருதய ராஜ் அவர்களால் உயர்த்தப்பட்டது. 

2003 ஆம் ஆண்டு மரியாயின் ஊழியர் சபை சகோதரிகள் தங்கள் கல்விப்பணியை ஆரம்பித்தனர். முதலில் திரு. ஆட்ரியன் அவர்களின் பள்ளியில் பணியாற்றத் துவங்கிய சகோதரிகள், 2014 இல் புனித மரியாள் ஆங்கிலப் பள்ளியை ஆரம்பித்து, இரு குழுமங்களாக இயங்கி வருகின்றனர். 


பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருள்பணி. ஆரோக்கிய சவரியப்பன் (2005-2006)

2. அருள்பணி. M. ஜெகராஜ் (2006-2009)

3. அருள்பணி. A. அம்புரோஸ் (2009-2014)

4. அருள்பணி. M. அருள்சாமி (2014-2018)

5. அருள்பணி. அமலநாதன் (2018 முதல் தற்போது வரை..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. அமலநாதன் அவர்கள். 

ஆலய வரலாறு : தருமபுரி மறைமாவட்ட Proprietor அருள்பணி. சூசைராஜ் அவர்கள்.